வளர்பிறையில் சஷ்டி விரதத்தினால் வாழ்வில் வளம் பெறலாம்..!

valarpirai-sasti-special-worship-towards-on-lord-muruga

விரதம் மேற்கொள்வதால் நம் வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் மீண்டும் பெற முடியும். அதே சமயத்தில் நமக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்காமல் தாமதமனால் அதையும் விரதத்தின் மூலமாக சரி செய்யலாம். ஏதாவது தேவைகள் இருந்தால் மட்டும்தான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை, நம்முடைய பக்தியை கடவுளிடம் காட்டுவதற்காகவும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

சஷ்டி விரதம் எப்போது மேற்கொள்ள வேண்டும்

சஷ்டி என்பது சந்திரனின் அடிப்படையாகக் கொண்ட கால முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வருவதே இந்த சஷ்டி விரத நாள். இந்த நாட்களை பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுவார்கள்.

அமாவாசைக்கு அடுத்து வரும் சஷ்டியை சுக்குள பட்ச்ச சஷ்டி அதாவது வளர்பிறை சஷ்டி என்பார்கள், பவுர்ணமிக்கு அடுத்து வரும் சஷ்டியை கிருஷ்ண பட்ச்ச சஷ்டி அதாவது தேய்பிறை சஷ்டி என்பார்கள்.

மேலும் படிக்க – இறை அருள் தரும் மலர்கள் இறைக்கு சூடும் முறை

புனிதமான விரதம்

நதிகளில் சிறந்தது எப்படி கங்கை நதியோ அதேபோல் மலர்களில் சிறந்தது தாமரை மலர். இதைப்போல் விரதத்தில் மிகச் சிறந்த விரதம் என்று கருதப்படுவது கந்தசஷ்டி விரதமாகும்.

முருகனின் அருள்வேண்டி அவரை மனதில் நினைத்துக்கொண்டு இருக்கும் மிகப் புனிதமான விரதமே இந்த கந்த சஷ்டி விரதமாகும். இதை, நம் வாழ்க்கை பல பிரச்சினைகள் இருப்பதினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், நாம் இன்னல்களுக்கும் சிக்கித் தவிப்பதை போக்குவதற்காகவே கந்தசஷ்டி விரதத்தை மேற் கொள்கிறார்கள்.

மேலும் படிக்க – அஷ்டமியில் யாருக்கு என்ன செய்யனுமுனு பார்போம்

திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம்

ஒருவரின் வாழ்க்கை முழுமை அடைய வேண்டுமென்றால் அவர் திருமணம் செய்ய வேண்டும், அதேபோல் அவரின் திருமண வாழ்க்கை முழுமை அடைய வேண்டுமென்றால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். இது இரண்டிலும் ஏதேனும் தடங்கல் இருந்தால் கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதால் இந்த தடைகளை விலக்கி மிக விரைவில் உங்களுக்கு திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சஷ்டி விரதம் மிகப்பெரிய விரதமாகும். திதிகளில் சஷ்டி விரதம் ஆறாவதாக வருவதால் அதற்கு மிக வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தை தரக்கூடிய ஆறு என்பது ஜோதிட வழக்கில் உள்ளது, ஜோதிடத்தில் ஆறாம் என்ற எண் சுக்கிரனை குறிக்கிறது. இதை லட்சுமி அம்சமாக கருதப் படுகிறார்கள்.

மேலும் படிக்க – கணபதியின் மூலமந்திரம் பயன்படுத்தி எதிலும் ஜொலிக்கலாம்.!

செல்வமும் முருகனின் அருளும்

சஷ்டி விரதத்தை நாம் சரியாக மேற்கொண்டால் நமக்கு செல்வம் என்று கருதப்படும் நிளம், சொத்துக்கள் மற்றும் தொழில்கள் நாம் எதிர்பார்த்ததைவிட வளமாக அமையும். நமக்கு திருமணம், வாகனம், வீடு என அனைத்தையும் தர உதவுவது சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் இது அனைத்தையும் பெறமுடியும்.

இது அனைத்திற்கும் மேலாக நாம் எதையாவது தொடங்குவதாக இருந்தாலும் அல்லது புதிதாக வேலைக்கு செல்வதாக இருந்தாலும் சஷ்டி விரதத்தை மேற்கொண்டு அதன்பிறகு இது போன்ற சுப காரியங்களை செய்வதன் மூலமாக நீங்கள் செய்யும் செயல் எப்போதும் உங்களை வருந்தாதபடி வைத்திருக்கும். எனவே சஷ்டி விரதத்தின் பெருமையை அறிந்து ஒவ்வொரு மாதமும் இந்த விரதத்தை மேற்கொள்வது புனிதமான செயலாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன