கோபத்தை கட்டுப்படுத்த உதவும் வைகுண்ட ஏகாதசி விரதம்..!

vaigunda egadesi fasting helps you in controlling your anger

விரதத்தில் மிகச் சிறந்த விரதம், ஏகாதசி விரதம். ஏகாதசி விரதம் இருந்தால் நமக்கு செல்வம், ஆரோக்கியம் மற்றும் வைகுண்டத்தில் இடம் என நமக்கு கிடைக்காதா என்று எண்ணும் அனைத்தும் இந்த விரதத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கச் செய்யலாம். இதை தவிர்த்து தன்னை அறியாமல் கோபம் கொள்ளும் நபர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் கோபப்படாமல் சாந்தமாக இருக்க முடியும், அதை தவிர்த்து மற்றவர்களின் கோபம் கூட உங்கள் மேல் படாதவாறு இந்த விரதம் உங்களை காக்கும்.

அம்பரீச சக்ரவர்த்தி என்பவர் ஆழ்ந்த ஏகாதசி விரதத்தில் இருக்கும் பொழுது துர்வாச மகரிஷியின் கடும் கோபத்திலிருந்து மஹா விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டதற்கு முழு காரணம் இவர் மேற்கொண்ட ஏகாதசி விரதம்தான்.

மேலும் படிக்க – அனுமானை வழிப்படும் முறைகள்…!

ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்றார் போல் நமது ஏகாதசி விரதத்தின் பலன்கள் மாறும். நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்ப நாம் ஏகாதசி விரதத்தில் ஈடுபடுவோம். ஆனால் தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகள் கொண்டதாகும். இதை அறிந்து அதற்கேற்ப நம் விரதம் இருந்தால் நிச்சயம் நாம் எண்ண முடியாத அளவிற்கு நமக்கு ஆனந்தம் கிடைக்கும். அதேபோல் நாம் நினைத்ததையும் இந்த விரதத்தின் மூலமாக நம்மால் பெற முடியும் இதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் நேர்மையான விரதம்.

இந்த ஏகாதசி விரதத்திற்காக நாம் நான்கு விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். அது என்னவென்றால், முதலில் தவறான சிந்தனைகள் எதையும் நினைக்கக் கூடாது, உணவு அருந்தாமல் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும், மனம் மற்றும் நம் சொல்லும் சொற்கள் அனைத்தும் நல்ல எண்ணத்தில் இறக்க வேண்டும், கடவுளைப்பற்றி நினைத்திருக்க வேண்டும்.

உணவு உண்ணாமல் விரதம் இருப்பதினால் நமது உடம்பில் இருக்கும் பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உயிர்ப்பிக்கும் என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும். இதைதான் நாம் ஏகாதேசி அன்று விரதமாக கடைப்பிடிக்கிறோம். இதை தவிர்த்து நாம் ஒவ்வொரு வாரமும் உணவு உண்ணாமல் விரதம் இருந்தால் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

மேலும் படிக்க – சிவராத்திரியில் வில்வ பூஜை செய்து வளம் பெருக

ஏகாதசி விரதம் இருப்பதற்கான எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை ஆண், பெண் மற்றும் எல்லா மதம் உடையவர்கள் இந்த விரதத்தை பின் தொடரலாம். இதை தவிர்த்து வீட்டில் பிறப்பு, இறப்பு மற்றும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் என எல்லா நாட்களிலும் இந்த விரதம் இருக்கலாம். இதற்காக நாம் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான செயல் தான் உண்ணாவிரதம் இதை சரியாக செய்தால் மட்டுமே ஏகாதசி விரதம் பூர்த்தி அடையும். இதை செய்வதற்கு வயது வரம்பு எதுவும் தேவையில்லை சிரியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏகாதசி விரதம் கொண்டு தங்கள் பக்தியை வெளிபடுத்தலாம்.

விரதத்தின் மூலமாக நீங்கள் கேட்கும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும் இதை தவிர்த்து புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நோய் நொடிகளால் கஷ்டப்படுபவர்கள், வறுமையில் வாடுபவர்கள் என எல்லா பிரச்சினைகளுக்கும் ஏகாதசி விரதம் ஒரு தீர்வைத் தரும். இதை நாம் முழு மனதுடன் நம்பிக்கையுடன் செய்தால் மட்டுமே நமக்கு பலன் கிடைக்கும்.

1 thought on “கோபத்தை கட்டுப்படுத்த உதவும் வைகுண்ட ஏகாதசி விரதம்..!”

  1. Pingback: வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இதை சாப்பிடணும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன