படிப்பதற்கான சரியான வாய்ப்பு..!

  • by
utilize this lockdown for improving your skills and studies

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் இருப்பதை தடுப்பதற்காக கடந்த சில வாரங்களாகவே அனைவருக்கும் விடுமுறை அளித்து ஊரடங்கை அமல் படுத்தி உள்ளார்கள். இதனால் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் வீட்டில் தங்கள் நாட்களை வீணடித்து வருகிறார்கள். ஒரு சிலருக்கு படிக்கும் ஆர்வம் இருந்தும் அவர்களால் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்றவர்கள் தங்கள் மனதை எப்படி கட்டுப்படுத்தி படிக்க வேண்டும் என்பதை காணலாம்.

தேர்வுகள் ஒத்திவைப்பு

10 மற்றும் 12வது பொதுத்தேர்வுகளில் மாநில அரசுகள் காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது. இதைத் தவிர்த்து அடுத்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக கல்வித் துறையினர்கள் கூறிவருகிறார்கள். இருந்தும் இந்த ஆண்டிற்கான தேர்வுகளை ஜூன் மாதத்தில் எழுதும் சூழல் எழுந்துள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை அதிகரிக்கவும், தங்கள் படிப்பு திறனை அதிகரிக்க இந்த ஊரடங்கு நமக்கு சிறந்த வாய்ப்பை அளித்துள்ளது.

மேலும் படிக்க – மே 3க்கு பிறகு ஊரடங்கு நீடித்தால் என்னவாகும்..!

கவனக்குறைவு

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஊரடங்கு சமயத்தில் மக்கள் தங்கள் நாட்களை எப்படி கழிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தொலைக்காட்சியைப் பார்ப்பது மற்றும் தொலை பேசியில் படங்கள் மற்றும் தொடர்களை பார்ப்பதுமாக கழித்து வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தவிர்த்து படிப்பிற்காக அவர்கள் செலவழிக்கும் நேரம் பட்டியலில் மற்ற அனைத்து பொழுதுபோக்கை விட படிப்பு மிகக் கீழே உள்ளது. எனவே வீட்டில் உள்ள மாணவர்கள் புத்தகத்தை தொடுவதற்கு பதிலாக தங்கள் கணினி மற்றும் செல்போன்களை தொட்டு தங்கள் நேரத்தை வீணடித்து வருகிறார்கள்.

மாற்றும் வழி

ஒரு நாளை நீங்கள் எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதற்கான அலாரம் செட் செய்து அந்த நேரத்தில் நீங்கள் படிக்கத் தொடங்குங்கள். அது 30 நிமிடங்கள் அல்லது ஒரு மணி நேரம் என எவ்வளவு நேரமாக இருந்தாலும் அந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். அதேபோல் நீங்கள் குறைந்த நிமிடங்கள் படித்தாலே உங்களுக்கு ஓரளவு திருப்தி கிடைக்கும், இதை செய்து ஒவ்வொரு நாளும் படிக்கும் நேரத்தை அதிகரியுங்கள். உங்கள் அனைத்து பாடங்களையும் ஒவ்வொரு நாளுக்கு ஏற்றார் போல் மாற்றி படியுங்கள். உங்களுக்கு ஏற்ற ஒரு கால அட்டவணையை தயார் செய்து அதில் எந்த நேரத்தில் எந்த பாடத்தை படிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க – ஊரடங்காள் அதிகரிக்கும் நெட்பிளிக்ஸ் வாழ்க்கை..!

தேர்ச்சி பெறும் முறை

இந்த கால அட்டவணையை சரியாக பின்தொடர்ந்து நீங்கள் படிப்பதன் மூலமாக உங்களுக்கு படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும், அதேபோல் படிப்பதற்கான எண்ணமும் உருவாகும். இதை செய்வதன் மூலமாக இந்தப் பொதுத் தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண் பெறலாம். வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுவது பொதுத்தேர்வு தான், இதை பொறுத்துதான் மேற்படிப்பு நமக்கு சிறப்பாக அமையும். எனவே இந்த ஊரடங்கை சரியாக பயன்படுத்தி உங்கள் படங்கள் அனைத்தையும் படித்து முடியுங்கள்.

பொதுத்தேர்வு உள்ளவர்கள் மட்டும் படிக்க வேண்டு என்ற அவசியமில்லை, அதைத் தவிர்த்து வீட்டில் தங்கள் பொழுதைக் கழிக்க முடியாமல் தவிப்பவர்கள், ஏதேனும் சிறந்த புத்தகங்கள் அல்லது பாட புத்தகங்களை படிக்கலாம். இதன் மூலமாக உங்கள் அறிவு மற்றும் ஆற்றல் சிறப்பாக செயல்படும். உங்களுக்கு சிறப்பான மற்றும் அழகான எதிர்காலம் வேண்டுமென்றால் கிடைக்கும் சமயங்களில் உங்கள் அறிவுத்திறனை வலுப்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன