அதிகமான பணம் சம்பாதிக்க இதை பின்தொடருங்கள்..!

  • by
using these techniques to earn more money from home

கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு உங்கள் எதிர்கால வாழ்க்கைக்காக பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறீர்களா..? ஆனால் வெவ்வேறு விதமான காரணங்களினால் உங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறத.? உங்கள் கடனை குறைத்து அதிகமான வருமானத்தை எப்படி ஈட்டுவது, என்பதை பற்றிய சில வழிகளை இந்த பதிவில் காணலாம்.

வருமானம் அதிகரிப்பு

பொருளாதார வளர்ச்சியினால் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் அவர்கள் கிடைத்த வேலையை செய்து குறைந்த வருமானத்தை பெற்று வருகிறார்கள். இது போன்றவர்கள் தங்கள் குடும்பத்தை நிர்வாகிக்கும்போது பொறுப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்காக அவர்கள் அதிகமான தொகையை கடனாகப் பெற்றுக் கொள்கிறார்கள். தாங்கள் வாங்கும் மாத வருமானம் கடனை திரும்ப செலுத்த போதுமானதாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு சேமிப்பு என்பது துளிகூட இருக்காது. எனவே இது போன்றவர்கள் கூடுதலான ஏதாவது இணையதள வேலைகள் அல்லது புத்திசாலித்தனமான செயல்கள் மூலமாக பணத்தை சம்பாதிக்க வேண்டும்.

மேலும் படிக்க – வேலை செய்யும் இடங்களில் உங்களை எப்படி வெளிக்காட்ட வேண்டும்?

பணத்தை திரும்பப் பெறும் சலுகைகள்

நீங்கள் உங்கள் வீட்டு மளிகை பொருட்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதாக இருந்தால் அதன் விலையை ஒருமுறைக்கு இரண்டு முறை இணையதளம் மற்றும் வீட்டு அருகில் உள்ள கடைகளிலும் ஒப்பிடுங்கள். இவைகளில் இணையதளத்தில் விலை குறைவாக இருந்தால் அதில் பணத்தை திரும்பப் பெறும் சலுகை உள்ளதா என்று பாருங்கள். ஒரு சில நிறுவனங்கள் 10 முதல் 25 சதவீதம் வரை பணத்தை திரும்பப் பெறும் சலுகையை தருவார்கள். அதை தவிர்த்து உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்தினால் உங்களுக்கு மேலும் 10 சதவீதம் சலுகைகள் கிடைக்கும். பொருட்களை இது போன்ற இணையதளங்கள் மூலம் வாங்கினால் நாம் அதிகமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதை தவிர்த்து வீட்டு உபயோகப் பொருட்களை பண்டிகை நாட்களில் வாங்குவது சிறந்தது.

வீட்டில் இருந்து செய்யும் தொழில்

உங்களிடம் இணைய வசதி இருந்தால் போதும், நீங்கள் வீட்டில் இருந்தபடியே தினமும் பணத்தை சம்பாதிக்கலாம். ஒரு சில நிறுவனங்கள் “டேட்டா என்ட்ரி” “குறுந்தகவல்” மற்றும் “மின்னஞ்சல்” பரிமாற்றம், “விவரங்களை சேகரித்தல்”, “இணைய எழுத்தாளர்” மற்றும் “விளம்பர பதிவாளர்” என ஏராளமான இணைய வேலைகள் இருக்கின்றன எனவே இதற்கான இணையப் பக்கங்களுக்கு சென்று 50 முதல் 80 ரூபாய் வரை முன் தொகையாக செலுத்தி வேலைகளை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் சம்பாதிக்கும் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும்.

மேலும் படிக்க – ஆபிசில் நட்புடன் இருக்க இதை கவனியுங்கள்

வாங்கி விற்கலாம்

இணையதளத்தில் அதிகமாக லாபத்தை ஈட்டும் நிறுவனங்கள் அனைத்தும் வியாபார நிறுவனங்களே, எனவே நீங்கள் பழைய பொருட்களை வாங்கி அதை சற்று அதிக விலைக்கு மீண்டும் மற்றொருவருக்கு விற்கலாம், இல்லை எனில் புதிதாக செய்யப்படும் பொருட்கள், ஆடைகள் போன்றவைகளை உங்கள் லாபத்தை சேர்த்து மீண்டும் விற்கலாம். பரிந்துரைப்பது மூலமாக ஒரு சில நிறுவனங்கள் அப்பொருட்களின் விலையிலிருந்து 5% உங்கள் வங்கி கணக்கில் சேர்க்கலாம்.

சிறிய வியாபாரங்கள்

உணவு என்பது அன்றாட வாழ்க்கையில் நமக்கு மிக முக்கியமான ஒன்று எனவே நீங்கள் வீட்டில ருசீகரமான உணவுகளை சமைத்து வேலை செய்பவர்கள் அல்லது குடும்பம் இல்லாமல் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விற்கலாம். ஒவ்வொரு வருடமும் ஏராளமான பண்டிகைகள் வருகின்றன எனவே பண்டிகைக்கு ஏற்றார் போல் சிறிய வகை கடைகளை அமைக்கும் போது உங்களுக்கு லாபம் அதிகரிக்கும், உதாரணத்திற்கு தீபாவளி அன்று பட்டாசு கடைகளும் பொங்கலன்று கரும்பு ஏற்றுமதி இறக்குமதி போன்ற வியாபாரங்களும் செய்யலாம்.

எனவே சிறிய தொகையாக இருந்தாலும் அதை இலாபமாக எடுத்துக்கொண்டு வியாபாரத்தைத் தொடங்கினால் உங்கள் வாழ்க்கையில் படிப்படியாக லாபத்தை நோக்கி முன்னேறும். எனவே உங்கள் தெருக்களில் அல்லது ஊரில் என்ன இல்லை என்பதை நன்கு அறிந்து அதை உடனே உருவாக்கி சிறிய தொழிலதிபராக மாறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன