வெண்ணெயால் உங்கள் சருமத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியும்.!

butter on skin

வெண்ணையில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இதில் இயற்கையாகவே கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. நம் சருமம் அழகாக இருப்பதற்கு நம் முகத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கவேண்டும். அவை இல்லாத நேரத்தில் நம் முகம் வறட்சியடைந்து சேதமடைகிறது. இதை வெண்ணையை கொண்டு நம்மால் சரி செய்ய முடியும். இதனால் நம் முகத்தை பளபளப்பாகவும், பொலிவுடனும் வைக்கமுடியும்.

வெண்ணை மற்றும் வாழைப்பழத்தின் கலவையால் நம் முகத்தை அழகாக்க முடியும். ஒரு முழு வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டு அதில் உப்பு கலக்காத வெண்ணையை சேர்த்துக் கொள்ளவேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக நன்கு அரைத்துக் கொண்டு அதை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் முகம் பொலிவுடன் அழகாக இருக்கும்.

மேலும் படிக்க – நவீன யுவதிகளின் யுனிக்கான உடைகள் ஒரு பார்வை..!

வெள்ளிரிக்காய் என்பது நமக்கு அதிக அளவில் குளிர்ச்சியைத் தரும் இதனுடன் வெண்ணெய் கலந்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் நம் முகத்தில் தடவி ஊற வைத்த பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் வறட்சி தன்மையை நீக்கி பொலிவுடன் இருக்க செய்யும்.

ரோஸ் வாட்டருடன் வெண்ணையை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை காட்டன் பஞ்சை கொண்டு முகம் முழுக்க தடவ வேண்டும். இதை செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும் மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கிவிடும். பின்பு 15 நிமிடங்கள் நம் முகத்தில் ஊற வைத்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்தால் உங்கள் முகம் பராமரிப்புக்கு நல்லது.

மேலும் படிக்க – அழகுசாதன பொருட்களால் ஏற்படும் ஆபத்துகள் !!!

வெண்ணையை கொண்டு உங்கள் சருமத்தை அழகுபடுத்த தேவையான பொருட்களை தரமான கடைகளில் வாங்கி பயன்படுத்துங்கள் அதே சமயங்களில் உப்பில்லாத வெண்ணையை நாம் பயன்படுத்துவது மிக முக்கியம் அதிலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெண்ணை என்றால் மிகவும் நல்லது. இவைகளைக் கொண்டு உங்கள் முக சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் மாற்ற முடியும்.

2 thoughts on “வெண்ணெயால் உங்கள் சருமத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியும்.!”

  1. Pingback: ஊற வைத்த ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  2. Pingback: அரிசி மாவை கொண்டு உங்கள் முகத்தை பாதுகாப்பாக

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன