மரச் சீப்பைக் கொண்டு உங்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்..!

use wooden comb instead of plastic comb to reduce your hairfall

தலைமுடி பாதுகாப்புக்காக நாம் தினமும் அதில் எண்ணெயை தடவி, சீப்பை கொண்டு நன்கு வாரி முடியை பின்னி கொள்கிறோம். ஒரு சிலரோ தலையை வாரி மட்டும் செல்கிறார்கள். இப்படி என்னதான் நம் தலையை பராமரித்தாலும் முடிகொட்டுதல் தொடர்ந்து கொண்டே இருந்தால் அதற்கு காரணம் உங்கள் சீப்பாகதான் இருக்கவேண்டும். இப்போது இருக்கும் நடைமுறை வாழ்க்கையில் அனைவரும் பிளாஸ்டிக் சீப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதை தவிர்த்து மரசீப்புகளை பயன்படுத்தினால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இயற்கையாகவே நம் தலை எண்ணெய் சுரக்கும் தன்மை உடையது. ஆனால் நாம் பிளாஸ்டிக் சீப்புகளை அதிகமாக பயன்படுத்துவதினால் அதன் தாக்கம் நமது மூடி பிரச்சினைகள் அதிகரிக்கிறது. இதற்கு தீர்வாக நாம் மரசீப்புகளை பயன்படுத்தி, அதைக் கொண்டு நமது உச்சந்தலையில் வாருவதன் மூலம் வறண்ட நமது தலையில் மீண்டும் என்னை சுரக்க தொடங்கும். இதுமட்டுமல்லாமல் இதை கொண்டு வாருவதன் மூலம் நாம் மிக மென்மையாக உணர முடியும் அதுமட்டுமல்லாமல் நம் தலையில் மசாஜ் செய்வதைப் போன்ற அனுபவத்தை இது தரும்.

மேலும் படிக்க – திடகாத்திரமான வாழ்க்கைக்கு திராட்சை அவசியமுங்க..!

மரசீப்புகளை கொண்டு வாருவதினால் இது நமது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் முடி வளர்ச்சி மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதனால் நமது தலை மென்மையாக மாறி அதிகமான ஈரப்பதத்தை உண்டாகும்.

இந்த மரசீப்பின் பற்கள் எப்போதும் அதிக இடைவெளி விட்டவாறு தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், இது நமது முடி உதிர்வதிலிருந்து காப்பது மட்டுமல்லாமல் சுருட்டை முடி உள்ளவர்களின் முடியையும் நன்கு பராமரிக்கும்.

மேலும் படிக்க – கொழுப்பை குறைக்கும் கொய்யா நற்பலன் பாருங்க!

இதனால் நம் தலையில் பொடுகு பிரச்சினைகள் மற்றும் எந்த ஒரு கூந்தல் பாதிப்புகளும் இல்லாமல் இந்த சீப்பு நம்மை பாதுகாக்கிறது. இது அனைத்தையும் பின்தொடர்ந்தால் மட்டும் போதாது நாம் எப்போதும் நமது சீப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன