தக்காளி ஒரு பெஸ்ட் ப்ளீச்சிங் ஏஜெண்ட்.!

use tomato for face bleeching

பெண்களுக்கு தங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்வதற்காக ஏகப்பட்ட வழிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் இதில் அனைத்தும் செயற்கையாக செய்யப்படும் க்ரீம்களை சார்ந்தே இருக்கிறது. அதற்கு இணையாக இயற்கை வழியில் நாம் பல பொருட்களை வைத்து நம்மை அழகாகவும், பொலிவுடனும் வைத்துக் கொள்ள முடியும். நமது சரும பாதுகாப்பிற்கும், முகம் அழகிற்கு சிறந்தது தக்காளி பழம்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியை தினமும் ஒரு துண்டை பயன்படுத்தி நமது முகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். முகப்பரு பிரச்சினைகள், முகச்சுருக்கம், முகத்தில் ஏற்பட்டிருக்கும் பல்லம், மாசுபடுதல், வரட்சி போன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாம் தக்காளியை பயன்படுத்த முடியும்.

மேலும் படிக்க – மாடர்ன் உலகத்தின் மதிப்புமிக்கது கைதறி உடைகள்!

ஒரு சிலரின் சருமம் மேடும், பல்லமாக இருக்கும். இது போன்றவர்கள் இதை குணப்படுத்த முடியாது என்று எண்ணி அவர்களின் சருமத்தை அதிகமாக மறைத்து வருவார்கள். ஆனால் இதற்குத் தீர்வாக, நாம் தக்காளியை குழைத்து நமது முகத்தில் இருக்கும் பள்ளங்கள் முழுவதும் படும்படி தடவ வேண்டும். இதை தினமும் செய்து வருவதன் மூலம் நாளடைவில் பள்ளங்கள் இருக்கி, சருமம் சமமாக இருக்கும்.

வெயிலின் தாக்கத்தினால் சருமம் கருமையாக காணப்படும். இதனால் இரவு தூங்குவதற்கு முன்பு தக்காளியை கொண்டு முகம் முழுக்க நன்கு தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதன் மூலம் உங்கள் சருமத்தில் இருக்கும் கருமை விலகி பொலிவுடன் காணப்படுவீர்கள்.

மேலும் படிக்க – கண்ணுக்கு மை அழகு, காதல் ஓவியம் பேசும் கண்களுக்கு எது அழகு!

திருமணம் அல்லது நிகழ்ச்சிகளுக்கு எங்கேயாவது செல்லும்போது உடனடியாக உங்கள் முகத்திற்கு பொலிவு தேவை என்றால் தக்காளி சாறுடன் சிறிது தேனைக் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் உடனடி பொலிவு உங்கள் முகத்திற்கு வரும். அதேபோல் எண்ணெய் சருமம் உள்ளவர்களும் தக்காளியை முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால் எண்ணெய்த்தன்மை குறைந்து முகம் பளீரென்று இருக்கும்.

அழகு நிலையத்திற்கு செல்லாமல், உயர்ந்த கிரீம்களை பயன்படுத்தாமல், பணத்தை வீணாக்காமல் மிக எளிமையான முறையில் தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட முடியும். இதற்கு நீங்கள் தக்காளி, தயிர், தேன் மூன்றையும் ஒன்றாக, சமமாக கலந்து கொள்ள வேண்டும். அதை தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நீங்களே பாருங்கள்.

மேலும் படிக்க – பெண்களின் ஆடை அழகோவிய கலெக்சன்கள் இதோ!

தக்காளியில் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதினால் இது சருமத்தை பாதுகாக்கவும், பொலிவாகவும் உதவுகிறது. அதேபோல் இதில் இருக்கும் அதிக ஈரத்தன்மை, உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்கிறது. எனவே இத்தகைய ஆரோக்கியமான தக்காளியைக் கொண்டு உங்கள் சருமத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன