கொலாஜென் என்ற புரதத்தினாள் உங்கள் முடியின் பிரச்சினையை தீர்க்க முடியும்.!

use this protein to get healthy hair

கொலாஜென் என்பது இயற்கையாகவே மனிதர்களின் உடலில் சுரக்கும் ஒரு புரதமாகும். இதை நாம் உணவுகள் மூலமாகவும் அல்லது மாத்திரைகள் மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம். இதன் குறைபாடுகளினால்தான் நமக்கு தலைமுடியில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்காக நாம் கொலாஜெனை நம் தலை முடி மேல் பயன்படுத்தி இறந்து நமது கூந்தலின் அழகை மீண்டும் பெற முடியும்.

இளமையில் நரைமுடி ஏற்பட்டவர்கள் இந்த கொலாஜென் மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இறந்த உங்கள் கூந்தலின் நிறத்தை மீண்டும் பெற்று உதவுகிறது. இதனால் இதை நம் கூந்தல் வேர் வரை படும்படி போட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – நீண்ட காலமாக தலையணையை மாற்றாமல் இருப்பவரா நீங்கள்?

சுற்றுச்சூழல் பாதிப்பினால் உங்களின் கூந்தல் மிக விரைவில் வரச்சி அடைந்து விடுகிறது. இதை தடுப்பதற்காக நாம் இந்த கொலாஜெனை பயன்படுத்த வேண்டும். இதனால் இது உங்கள் கூந்தலை ஈரப்பதமாகவும், பளபளப்பாகவும், மென்மையாகவும் வைக்க உதவும்.

உங்கள் கூந்தலின் ஈரப்பதத்தின் தன்மை குறைந்து நாளடைவில் உங்கள் முடி வரட்சியினால் கொட்டுதல் மற்றும் துண்டு துண்டாக உடைந்துபோகிற பிரச்சனைகள் ஏற்பட்டால் நீங்கள் இந்த கொலாஜெனை பயன்படுத்தலாம். இது உங்கள் கூந்தலை பராமரித்து வலுப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க – பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

கொலாஜெனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடியை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களின் உலர்ந்த முடியை புதுப்பித்து ஆரோக்கியமாக மாற்றுகிறது.

தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் கொலாஜெனை ஒன்றாக கலந்து உங்கள் கூந்தலின் உச்சந்தலை முதல் நுனி வரை நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 20 நிமிடங்கள் கழித்து நல்ல ஷாம்புகளை கொண்டு உங்கள் முடியை கழுவ வேண்டும். இதனால் உங்கள் கூந்தல் நாளடைவில் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன