பெண்களுக்கு அதிகமாக பயன்படும் வெள்ளரி விதை எண்ணெய்.!

use this oil for getting your nail polish glow

நாம் அழகு நிலையங்களுக்கு செல்லும்போது நம் கண்கள் பாதுகாப்பிற்காக நம் கண் மேல் வெள்ளரிக்காயை வைப்பார்கள் அது கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது. வெள்ளரிக்காயில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் இ, லியோனி அமிலம், ஓலியீக் அமிலம், மெக்னீசியம், ஒமேகா-6 கொழுப்பு, பொட்டாசியம், பால்மிடிக் அமிலம், சோடியம் மற்றும் பல தாதுக்கள் அடங்கியுள்ளது.

வெள்ளரிக்காயின் விதையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயை பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இதைக் கொண்டு உங்கள் சரும பிரச்சனைகள், கூந்தல் ஆரோக்கியம் மற்றும் நகங்களை கூட வலுப்படுத்தலாம். இந்த எண்ணெயை நாம் தயாரித்த பின்பு அதை பிரிட்ஜில் இரண்டு வருடங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – பாசிப்பருப்பு என்கிற பச்சை பருப்பில் இருக்கும் மருத்துவ குணங்கள்.!

இந்த எண்ணெயை நம் முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு இளமையில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் மற்றும் முகத்தில் இருக்கும் கருமையை நீக்கி உங்களை பொலிவுடன் வைக்க உதவுகிறது.

வெள்ளரி விதையை உங்கள் முகப் பருக்கள் மேல் தடவுவதன் மூலம் உங்கள் முகப்பருக்களை இது நீங்கிவிடும். இதை தவிர்த்து முகப்பருக்கள் மூலமாக ஏற்படும் கரும்புள்ளிகள், காயங்கள் போன்றவை அனைத்தையும் குணப்படுத்துகிறது.

இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இதை நீங்கள் சன்ஸ்கிரீன் ஆகவும் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் சருமத்தை குளிர்ச்சியடைகிறது.

பெண்களுக்கு நகம் வளர்ப்பது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு நகம் வலுவில்லாமல் சில நாட்களிலேயே உடைந்து விடும் இதனால் இவர்கள் அதிக மன கவலைக்கு உள்ளாகிறார்கள். இதனால் நீங்கள் வெள்ளரி விதை எண்ணையை உங்கள் நகத்தில் தடவினால் உங்கள் நகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும்.

உங்கள் முகத்தில் போடப்படும் ஃபேஸ் பேக்குகளில் இந்த வெள்ளரி எண்ணெய் கலந்து போட்டால் உங்கள் முகத்தில் ஏற்படும் அதிர்ச்சிகளை போக்கி உங்களை பொலிவுடன், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

மேலும் படிக்க – தினமும் உணவில் மீன் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெள்ளரிக்காயை நம் கண்களில் வைப்பது வழக்கமாக இருக்கும் ஆனால் இந்த வெள்ளரி எண்ணெய் நம் கண்களின் மேல் தடவினால் வெள்ளரிக்காய் செய்யும் அதே வேலையை இது செய்கிறது ஆனால் இதற்காக நம் கண்களை மூடி இருக்க வேண்டிய அவசியமில்லை.

அனைத்திற்கும் மேலாக உங்கள் கூந்தலை வெள்ளரிக்காய் விதை எண்ணெயை கொண்டு பராமரிக்கலாம். சுருட்டை முடி உள்ளவர்களுக்கு இது மிகவும் உகந்த எண்ணெய் ஆகும். இதை உங்கள் கூந்தலில் பயன்படுத்தினால் உங்கள் முடி ஆரோக்கியமாகவும், நீளமாகவும், கருமையாகவும் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன