நைட் கீரிம் போடுங்க நாள் முழுவதும் பிரெஷா இருங்க.!

use this night cream to stay fresh

நம்முடைய உடலில் மிக எளிதாக பாதிப்படைவது நமது சருமம்தான். இது மென்மையாகவும், ஈரப்பதத்துடன் இருப்பதினால் நாம் எக்காலங்களில் வீட்டை விட்டு வெளியேறும் போது நமது சருமம் மிக எளிதில் பாதிப்படைகிறது. அதை தவிர்த்து குளிர் காலம், கோடை காலம், மழை காலம், என எல்லா காலங்களிலும் நமது சருமம் பாதிப்படைகிறது. இதனால் நாம் விலை உயர்ந்த க்ரீம்கள் மற்றும் ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஜெல்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இது அனைத்திற்கும் இணையாக நாம் நைட் கிரீமை இரவு தூங்குவதற்கு முன் பயன்படுத்தி வந்தால் நம் சருமம் எந்த பிரச்சினைக்குளாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

சூரியனால் ஏற்படும் கதிர்வீச்சு மற்றும் மாசுபடுதலினால் உங்கள் சருமம் மிக எளிதில் வறட்சி அடைகிறது. இதை தடுப்பதற்கு இரவு தூங்குவதற்கு முன்பாக நாம் நைட் கிரீமை நம் சருமத்தின் மேல் தேய்த்து உறங்க வேண்டும். இதனால் உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை அதிகரித்து நாள் முழுவதும் உங்களை சூரியக் கதிர்வீச்சு மற்றும் தூசுகளில் இருந்து பாதுகாக்கிறது.

மேலும் படிக்க – முன் தலை வழுக்கையா இதோ நிவாரணி!

வைட்டமின் குறைபாடுகளினாள் நமது கன்னங்களின் நெகிழ்ச்சித் தன்மை பாதிப்படைகிறது. இதனால் நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும், அதே சமயத்தில் இரவு நேரத்தில் நம் கன்னங்களில் மேல் நைட் கிரீம் தடவ வேண்டும். இதன் மூலம் நீங்கள் இழந்த மென்மை மற்றும் ஈரப்பதம் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.

உங்கள் தோலை வாழ்நாள் முழுவதும் பிரகாசமாக வைப்பதற்கு நைட் கிரீம் உதவுகிறது. உங்கள் சருமத்தின் இயற்கையான ஒளியை நீங்கள் பெற விரும்புகிறீர்கள் என்றால் இரவு தூங்குவதற்கு முன்பு இதை பயன்படுத்துங்கள். சருமம் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்க்கு உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதுவும் இரவு நேரங்களில் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதினால் அதை நீங்கள் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது மிக முக்கியம். எனவே நைட் க்ரீம் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரித்து உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்கிறது.

மேலும் படிக்க – முகப்பரு உற்பத்திக்கு எதிராக செயல்படும் எண்ணெய்கள்..

சில அழகு சாதன பொருட்கள் உங்கள் சருமத்தில் வீக்கம் மற்றும் எரிச்சலை உண்டாக்கும், அதற்கு மாற்று மருந்தாக நாம் வேறு ஒரு கிரீம்களை பயன்படுத்துவோம். இனிமேல் இதுபோல் ரிஸ்க் எடுக்காமல் இரவு நேரங்களில் நைட் க்ரீம் மட்டும் பயன்படுத்துங்கள். பகல் நேரங்களில் என்ன தான் உங்கள் நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களைப் பயன்படுத்தினாளும் உங்கள் நிறம் மாறாது. எனவே க்ரீன் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தின் நிறம் முன்பை விட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

வடுக்கள், கரும்புள்ளி மற்றும் முதிர்ச்சி தன்மையை நைட் கிரீம் தடுக்கிறது. எனவே இரவில் இந்த கிரீமை கொண்டு உங்கள் சருமம் முழுவதும் மசாஜ் செய்துவிட்டு தூங்குங்கள் சில நாட்களிலேயே உங்கள் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். எனவே இதற்காக விலை உயர்ந்த பொருட்களை அல்லது பலவிதமான கலவைகளை பயன்படுத்தாமல் ஒரே ஒரு நைட் க்ரீம்களை பயன்படுத்தி உங்கள் அழகை மேம்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன