ஊரடங்கு உத்தரவு வந்தாச்சு உபயோகமாக செய்யுங்க

  • by

 நாடு முழுவதும் ஊரடங்கு செயல்படுத்திய அதே வேலையில் கொரனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தமிழகத்தில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 23ஐ தாண்டியது. உலகம் முழுவதும் 4  லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை இந்தியா நன்கு கவனிக்கின்றது அதனால் இந்தியா இதற்கான தனது முழு நடவடிக்கையை முடிக்கிவிட்டுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்கள் இந்த ஊரடங்கில்   நாம் குடும்பத்தாருடன் இருப்போம். 

குடும்ப ஒற்றுமைக்கான வாய்ப்பு: 

கொரானாவால் நாம் முழுமையான இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். ஊரடங்கு என்பதால் 21 நாட்கள் வீட்டில் உள்ள குடும்பத்தாருடன் இருந்து பேச வேண்டும்.  படிப்பு, பொருளாதாரம், குடும்ப ஒற்றுமை, தாயாருடன் சமைக்க உதவுதல் போன்ற பல்வேறு உதவிகள் செய்வோம். கொரானா காற்றில் இருந்து பரவுவதாக சொல்கின்றனர், அதனால் வீட்டு மற்றும் சுற்றம்  முழுவதும் சுகாதாரம் பேணுவோம். பையோ என்சைம் வீட்டில் அனைத்து சுத்தம், சுகாதாரத்திற்கு பயன்படுத்துவோம். 

மேலும் படிக்கவும்: மஞ்சள், உப்பு, வேப்பிலை கொண்டு உங்கள் வீட்டைச் சுற்றி உள்ள கிருமிகளை அழிக்கலாம்..!

மாணவர்களுக்கான எதிர்காலப் படிப்பு மற்றும் இலக்குகள் குறித்து கலந்துரையாடல் அவசியம் ஆகும். ஸ்டேட் போர்டு தேர்வு எப்படி 12 மாணவர்கள் எதிர்கொள்ளனும் அடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பேச வேண்டும். வீட்டில் உள்ள பெண்கள் தங்களுடைய வேலைவவாய்ப்பு கிராப்ட் ஒர்க் ஆகியவை செய்யலாம். 

வீட்டில் இருந்து வேலை செய்வோரிடம்  அதிகம் மற்ற குடும்பினர்கள் தொந்தரவு தராதீர்கள். குடும்பத்தாருடன் இணைந்து இருக்க பழகுங்குள்.  இதுவரை அனைவரும் வேலை வேலை என ஓடியிருப்போம் ஆனால் இப்பொழுது அப்படியில்லை. ஆகையால் இது குறித்து நாம் முழுமையான புரிதல் அவசியம் ஆகும். தம்பதியருக்கிடையே ஊரடங்கு காலத்தில்  புரிதல் வரச் செய்ய வேண்டும். 

ஊரடங்கில் வெளியே மக்கள் செல்ல வேண்டாம்:

அனைவருக்கும் இந்த புரிதல் அவசியம் தேவை ஊரடங்கு என்பது மக்களான நமது தேவைக்காக நமது நலனுக்காக அறிவிக்கப்பட்டது. உங்களுடைய வேலை, குடும்பம்  ஆகிய அனைத்தும் உங்களுடன் இருக்கும் பொழுது என்ன கவலை ஏன், இதை வாங்க அதை வாங்க என நாம் வெளியே செல்ல வேண்டும். தயவு செய்து இதனை உணர வேண்டியது அவசியம் ஆகும். ஊரடங்கு காலத்தில்  பொதுமக்கள் அரசுக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க: ஊரடங்கில் உங்கள் வீட்டில் புத்தக வாசிப்பு நல்ல சினிமாக்கள் பார்க்கலாம்.

நீங்கள் உங்கள் அன்றாடப் பணிகளுக்கான ஓடி ஓடி கலைத்திருப்பீர்கள் அதனைப் போக்க வேண்டும். ஆனால் அதனை செய்ய முடியவில்லை என்ற  கவலை வேண்டாம். அதிகம் டிவி மற்றும் சமூக வலைதளங்களில் கொரானாப்பற்றிய செய்திகளை பார்த்து அஞ்சுவதை தவிர்த்து புத்தகங்கள் படிங்க. நிம்மதியாக தூங்கி எழவும். வீட்டிலுள்ள பெரியோர்களை முறையாக பேணி காக்கவும் அவர்களுக்குத் தேவையானவற்றை செய்யவும். 

உடல், உள்ளம் இரண்டும் தற்பொழுது அமைதியாக இருக்க வேண்டியது அவசியமாகும். இந்நேரத்தில் செலவுகளை குறித்தக் கணக்கீடுகள் அடுத்து வரும் பொருளாதார சிக்கலை தீர்ப்பது குறித்து நாம் அலோசிக்க வேண்டும். இன்னும் சிறிது நாட்களில் எந்த பொருள் எந்த விலையில் கிடைக்கும். வீட்டில் 21 நாட்கள் குழந்தைகள், பெரியோர்கள் அனைவரையும் எவ்வாறு பாதுகாக்க  வேண்டும் என்பதை எல்லாம் திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இப்பொழுது வரும் பணச்சிக்கலுக்கு வீட்டில் இருந்து அம்மா பணம் தருவாங்க அது எல்லாம் நமக்கான சேமிப்பு ஆகும். 

மேலும் படிக்க:144 தடையுத்தரவு நாட்களில் எவை இயங்கும்?? எவை இயங்காது??

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன