முகப்பரு உற்பத்திக்கு எதிராக செயல்படும் எண்ணெய்கள்..

use these kind of oil to get rid of pimples

முகப்பரு என்பது ஆண்-பெண் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனை. இது பத்தில் ஒன்பது நபர்களுக்கு இந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக இவர்கள் ஏகப்பட்ட கிரீம்களையும் மற்றும் அழகு நிலையங்களுக்கு சென்று பணங்களை வீணாக்கி வருகிறார்கள். ஆனால் நம் வீட்டிலேயே தயாரிக்கப்படும் அல்லது கிடைக்கக்கூடிய இயற்கை எண்ணெய்களை பயன்படுத்தி நமது முகப்பருக்களை போக்க முடியும்.

முகத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக முகப் பருக்கள் ஏற்படுகிறது. அதை தவிர்த்து உங்களுக்கு மன அழுத்தம், சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் கூட முகப் பருக்கள் ஏற்படுகிறது. இது நாளடைவில் உங்கள் முகத்தில் வடுவாக மாறிவிடுகிறது. இதை தடுப்பதற்காக நீங்கள் அத்தியாவசிய எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க – சைனிங்கான கூந்தல் பராமரிக்க சாதுரிமாக இருங்க

தேயிலை மர எண்ணெய் கொண்டு உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பருக்களை அழிக்க முடியும். இதற்காக நீங்கள் தேயிலை மர எண்ணெய் உடன் ஆலிவ் எண்ணெயை ஒன்றாக கலந்து முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால் கற்றாழையை இதனுடன் சேர்த்து தடவினால் உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் முகப்பருக்கள் அழிந்துவிடும்.

பெர்கமோட்டின் எண்ணெயில் உங்கள் சருமத்தை ஒளிர செய்யக்கூடிய தன்மை உள்ளது. இதை நீங்கள் தேங்காய் எண்ணெயுடன் கலந்து முகப்பரு உள்ள இடத்தில் பயன்படுத்த வேண்டும். இதனால் விரைவில் நீங்கள் முகப்பரு இல்லாத ஒளிரும் சருமத்தைப் பெற முடியும்.

ஆர்கனோ எண்ணெய்கள் இத்தாலி நாட்டில் உணவுகளுக்கு பயன்படுத்தக்கூடியது. இது இயற்கை எண்ணெய்கள் என்பதினால் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை ஜோஜோபா எண்ணெயுடன் கலந்து முகப்பருவினால் ஏற்பட்ட வடுக்கள் மேல் தடவினால் நாளடைவில் அந்த வடுக்கள் நீங்கி உங்களை அழகாக மாற்றி விடும்.

கிராம்பு எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் சுத்தரிக்கும் தன்மையைக் கொண்ட எண்ணெயாகும். இதை வைட்டமின் ஈ எண்ணெயுடன் கலந்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவுவது நல்லது.

மேலும் படிக்க – அழகழகான குர்த்தி ஆடைகள் அணிந்து பாருங்கள்

லாவண்டர் எண்ணெய் உடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகப்பரு அல்லது முகப்பருவால் ஏற்பட்ட வடுக்கள் இருக்குமிடத்தில் தடவினால் உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களை போக்கி உங்களை அழகாக மாற்றி விடும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து எண்ணங்களையும் ஒன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவினால் மிக விரைவில் முகப்பருக்கள் விலகிவிடும். இதை செய்வதற்கு முன்பு நாம் முகத்தை நன்கு சோப்பு போட்டு கழுவி விட வேண்டும் பிறகு முகப்பரு அல்லது வடுக்கள் இருக்கும் இடத்தில் இதை தடவினால் உங்கள் முகம் மென்மையாகவும், பொலிவோடும், அழகாகவும் இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன