துணிகளை துவைப்பதற்கு முன் இதை பயன்படுத்துங்கள்..!

  • by
use salt while washing clothes to avoid virus spreads

கரேணா வைரஸ்  எல்லோரையும் பெரிதாக பாதித்துள்ளது. இந்த வைரஸ் காற்றில் பறவி நம்மை தாக்குகிறது, இதைத் தவிர்த்து ஒருவருடன் ஒருவர் உடல் ரீதியா உரசும் பொழுது இந்த வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு பரவுகிறது. இதை நம்முல் செல்லாமல் தடுப்பதற்கு நாம் அணியும் ஆடைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் சில வழிகளை பயன்படுத்துவது அவசியம்.

வெந்நீரில் துவைக்க வேண்டும்

உங்கள் துணிகளில் இருக்கும் அழுக்குகள், பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் அனைத்தும் போக வேண்டும் என்றால் உங்கள் துணியை வெந்நீரில் அலசுங்கள். இப்போது வரும் வாஷிங்மெஷினில் வெந்நீர் வசதி இருக்கின்றன அப்படி உங்கள் வாஷிங்மெஷினில் வெந்நீர் வசதி இல்லை என்றால் முதலில் உங்கள் ஆடைகளை சுடுதண்ணீரில் ஊற வைத்து பின்பு அதை துவையுங்கள் இதன் மூலமாக ஆடைகளில் இருக்கும் கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.

மேலும் படிக்க – என்சைமினால் நம் உடலில் செய்யப்படும் செயல்பாடுகள்..!

உப்பை பயன்படுத்துங்கள்

துணி துவைக்கும் பவுடரில் சிறிது உப்பை கலந்து விடுங்கள். இதன் மூலமாக உங்கள் ஆடைகளின் மேல் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும். உப்பு கிருமி நாசினியாக பயன்படும் ஒரு மூலப்பொருள் இதை துவைக்கும் துணிகளில் கலந்து நாம் சுத்தப்படுத்தினாள் நம் ஆடை வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும்.

தனித்தனியாக துவையுங்கள்

நீங்கள் பயன்படுத்தப்படும் உள்ளாடைகள் மற்றும் கால்களில் பயன்படுத்தும் சாக்ஸ் போன்றவைகளை தனியாக துவையுங்கள், ஏனென்றால் இதில் கிருமியின் தொற்று அதிகமாக இருக்கும். அதே போல் ஒரு முறை பயன்படுத்திய ஆடையை துவைத்து மீண்டும் பயன்படுத்துவது சிறந்தது. உங்கள் வேர்வையில் அதிகளவில் உங்கள் ஆடைகளில் பதிந்தால் அதை கழட்டி புதிய ஆடையை அணிவது நல்ல முடிவு.

மேலும் படிக்க – தினமும் செய்யப்படும் உடற்பயிற்சியினால் உங்கள் நோய்களை தடுக்கலாம்..!

நன்கு காய வையுங்கள்

உங்கள் ஆடைகள் 80% காய்ந்த நிலையில் தான் வாஷிங் மெஷினில் இருந்து வெளிவரும். இருந்தாலும் சூரிய ஒளி அதிகமாக இருக்கும் இடங்களில் உங்கள் ஆடைகளை நன்கு காய வையுங்கள். அது உலர்ந்த பிறகு அதை அயன் செய்து மடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதை செய்வதன் மூலமாக உங்கள் ஆடைகளில் படிந்திருக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அனைத்தும் அழிந்து விடும். எனவே உங்கள் வீட்டில் உள்ள சுற்று சூழலில் தீமை விளைவிக்கும் கிருமிகள் அண்டாது. இதை பின் தொடர்ந்து உங்கள் குடும்பத்தை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன