அரிசிமாவு உங்களை அழகாக்குமா!,,

use rice atta to make your skin young

நம் வாழ்க்கையில் ஒரு சில பொருட்களை தினமும் பயன்படுத்துவோம், அத்தகைய பொருள் தான் அரிசி மாவு. காலையில் இட்லி, இரவில் தோசை என எல்லா நாட்களிலும் அரிசி மாவைக் கொண்டு நாம் உணவுகளை சமைத்து வருகிறோம். அதை தவிர்த்து வீட்டிற்கு வெளியே போடப்படும் கோலங்கள் கூட நாம் அரிசி மாவை கலந்து கோலமாக போடுகிறோம். இப்படிப்பட்ட அரிசி மாவைக் கொண்டு நம் சருமத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

நம் சருமத்தின் பாதுகாப்பிற்காக நாம் அதிகளவில் பணங்களை செலவு செய்து வெவ்வேறுவிதமான கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் நம் சமயலறையிலேயே நமது உடல் மற்றும் உடல் உறுப்பு ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன. அதை நாம் சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் நாம் செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

மேலும் படிக்க – சைனிங்கான கூந்தல் பராமரிக்க சாதுரிமாக இருங்க

இளமையான சருமத்தை பெறுவதற்கு நாம் அரிசி மாவில் சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு அது காய்வதற்குள் முகத்தை கழுவுதல் மூலம் நம் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதைத் தவிர்த்து உங்களை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள இந்த மாஸ்க் உதவும்.

அரிசி மாவில் ஆன்ட்டி ஆக்சைடு அதிகமாக இருப்பதினால் உங்கள் சருமத்தில் வயதாகும் செல்களை தடுத்து உங்களை இளமையாக வைத்துக் கொள்கிறது. அதை தவிர்த்து உங்கள் முகத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து உங்கள் சருமம் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – அழகழகான குர்த்தி ஆடைகள் அணிந்து பாருங்கள்

அரிசி மாவை பயன்படுத்துவதனால் வெயில் உங்கள் சருமத்தில் ஏற்படும் தாக்கத்தை இது கட்டுப்படுத்தி உங்கள் நிறம் மங்காமல் உங்களை சமநிலைப்படுத்தி வைக்கிறது. உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி உங்களை ஈரப்பதத்துடன் வைத்து உங்கள் சருமத்தை ஒளிர செய்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அரிசிமாவை நாம் பயன்படுத்த தவறி வருகிறோம். எனவே ஒருமுறை இதை பரிசோதித்துப் பார்த்து இதன் தாக்கம் எப்படி உள்ளது என்பதை உணர்ந்து, நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் கிரீம்களை பயன்படுத்தலாம் வேண்டாமா என்ற முடிவுக்கு வாருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன