குங்குமாதி தைலத்தின் பயன்பாடுகள்..!

use kumkum cream to make your skin glow

நமது சர்ம ஆரோக்கியத்திற்கு நாம் பல்வேறு விதமான க்ரீம்கள் மற்றும் சோப்புகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் காலம்காலமாக இது போன்ற பொருட்களை பயன்படுத்தி நமது சருமத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. இதற்கு மாற்றாக நாம் புதியதாக ஏதாவது அழகை மேம்படுத்தும் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

மென்மையான, ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்திற்கு நமக்குத் தேவையான அனைத்தும் குங்குமாதி தைலத்திலிருந்து கிடைக்கிறது. குங்கும பூக்களினால் செய்யப்படும் இந்தத் தைலம் தென்னிந்தியாவில் உள்ள கேரளாவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க – கண் மேக்கப்பில் நாம் கவனித்து செய்ய வேண்டியது!

குங்குமாதி தைலம் அல்லது குங்குமதி எண்ணெய் உங்கள் சருமத்தின் நிறத்தையும், அழகையும் மேம்படுத்த உதவுகிறது. குங்குமாதி தைலத்தில் சந்தனம், மஞ்சள், தாமரை மகரந்தம் என சருமத்தின் மேல் அதிசயம் செய்யும் பல பொருட்களை சேர்த்து தயாரிக்கிறார்கள்.

குங்குமாதி தைலத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இதை பல நாள் பயன்படுத்தி வந்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் பழுப்பு நிறத்தை நீக்கி உங்கள் நிறத்தை மேம்படுத்தி அழகாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. இதில் இருக்கும் மஞ்சள், சருமத்தில் இருக்கும் மாசுக்களை குறைத்து அதன் பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து அதற்கேற்ப செயல்படுகிறது.

மேலும் படிக்க – பாதாம் எண்ணெயை பயன்படுத்தி பாலீஸ் ஆகுங்கள்!

குங்குமாதி எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்யும் போது உங்களை இளமையாகவும் அதைத் தவிர்த்து உங்கள் சருமத்தின் உட்பொருள் வளர்ச்சிக்கு ஊட்டமளித்து முக தசையை உறுதியாக்கி உங்களை என்றும் இளமையாக வைக்க உதவுகிறது.

சருமத்தில் இருக்கும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவைகளை இந்த தைலத்தின் மூலமாக குணப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் இதை தினமும் முகப் பருக்கள் இருக்கும் இடத்தில் மெதுவாக தடவுவதன் மூலம் சரும பிரச்சனை தீருவதை நீங்களே உணரலாம்.

மேலும் படிக்க – கார்குழல் கூந்தல் அழகுக்கு கரிசாலை வேண்டும்!

அதிக நேரம் கணினி மற்றும் செல்போன்களை பயன்படுத்துவர்களின் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகும்.  இதைப் போக்குவதற்கு இந்த தைலம் பெரிதாக உதவுகிறது. இதை இரவு நேரங்களில் நமது முகம் மற்றும் சருமம் முழுக்க தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். முகப் பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் மெதுவாக மசாஜ் செய்வது நல்லது. பின்பு காலையில் எழுந்து முகத்தை சோப்பு பயன்படுத்தாமல் கழுவ வேண்டும், பின்பு உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம்.

உங்கள் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனை, எண்ணெய் சருமம், முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வீக்கம், சரும அழற்சி போன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் இந்த குங்குமாதி தைலம் தீர்வாக இருக்கிறது. குங்குமப்பூவினாள் தயாரிக்கப்படும் இதை வீட்டில் செய்வது சற்று கடினமே எனவே இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கி பயன் பெறலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன