குளிர்காலத்தில் அதிக ஆற்றலுக்கு இஞ்சியை காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.!

use ginger to cure your winter sickness

குளிர்காலம் வந்துவிட்டாலே நமது உடல்நிலை பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகிறது. ஆனால், இயற்கையினால் நமது உடல் எப்போதும் சூடாக வைத்து நம்மை பாதுகாக்கிறது. நமக்கு எப்போது நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு அல்லது நமது உடல் சோர்வடைவதினால் நமது உடல்நிலை பாதிப்பு அடைகிறது. இதை சரிசெய்வதற்கு நாம் ஆரோக்கியமான காலை உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நமது வேலை களைப்பு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு சரியான நேரத்திற்கு செல்வதால் நாம் காலை உணவை தவிர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. நமக்கு காலை உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். நாள் முழுக்க நமக்கு தேவைப்படும் ஆற்றலை நமது காலை உணவே தருகிறது. இதை தவிர்த்து இரவில் நாம் உணவு அருந்திவிட்டு மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு தான் காலை உணவை உண்கிறோம், எனவே இதைத் தவிர்த்தால் நமது உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு விடும்.

நமது உடல் ஆற்றலுக்கு ஆரோக்கியமான காலை உணவு தேவை அப்படி இல்லை எனில் காலை உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள் அது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இஞ்சியை நாம் காலை உணவுகளில் பல விதமாக சேர்த்துக்கொள்ளலாம், அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க – பாதாம் எண்ணெயை பயன்படுத்தி பாலீஸ் ஆகுங்கள்!

அனைவருக்கும் காலையில் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். இவர்கள் அருந்தும் டீ அல்லது காபியிக் இஞ்சியை சேர்த்துக் கொண்டு குடித்தால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் நீங்கி உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை இஞ்சி டீ அல்லது காப்பி குடிப்பதனால் தவிர்க்க முடியும். இதை பால் கலக்காமல் வெறும் இஞ்சியை கொதிக்க வைத்து தேன் கலந்து தினம் சாப்பிட்டால் இன்னும் ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

நாம் குடிக்கும் பானங்கள், ஓட்ஸ் அல்லது வீட்டில் செய்யப்படும் கேக் போன்றவைகளில் இஞ்சி சிரப்பை சேர்த்துக்கொள்ளலாம். இதை செய்வது மிக எளிது இஞ்சியை நன்றாக கொதிக்க வைத்து பின்பு அதை சுண்டிய பிறகு வடிகட்டி பயன்படுத்துவதுதான் இஞ்சி சிரப். இதை அதிகளவில் செய்துவிட்டு நாம் சமைக்கும் உணவுகளில் கூட அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் காலையில் ஏதாவது பழச்சாறு குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதனுடன் சிறிதளவு இஞ்சியை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் பழச்சாறில் ஒரு புதிய ருசியையும் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவும். இது உங்கள் உடலின் மெட்டபாலிசம் அளவை சரியாக வைத்துக் கொள்ளும் அதைத் தவிர்த்து இது ஒரு வலி நிவாரணமாக இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகள், தசைப்பிடிப்பு மற்றும் இதர பிரச்சினைகளுக்கு இது தீர்வாக இருக்கும்.

மேலும் படிக்க – பனை வாழ்வில் துணை, வெல்லம் கல்லம் இல்லாமல்

இஞ்சியால் செய்யப்படும் உணவுகளை நாம் காலையில் பயன்படுத்தி உண்டால் போதும் நமது உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக செயல்படும். இதை சரியாக நீங்கள் தேர்ந்தெடுத்து உங்கள் உணர்வுகளை வீட்டிலேயோ அல்லது ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகளை கடையில் வாங்கி பயன்படுத்தலாம்.

2 thoughts on “குளிர்காலத்தில் அதிக ஆற்றலுக்கு இஞ்சியை காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.!”

  1. Pingback: ஆண்களுக்கு ஏன் அதிகமா முடி கொட்டுது?

  2. Pingback: தேன் போதும், ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன