சருமத்தை பாதுகாக்க பூக்களை பயன்படுத்துங்கள்..!

  • by
use flowers to take care of your skin

நம்முடைய சருமத்தை பாதுகாப்பதற்காக நாம் க்ரீம்கள் மற்றும் பவுடர்களை பயன்படுத்தி வருகிறோம். இது அனைத்தையும், நம் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தி வரும் பூக்களைக் கொண்டு தான் தயாரிக்கிறார்கள். எனவே ரோஜா, செம்பருத்தி, ஆவாரம் பூ போன்றவைகளை வைத்து நம் சருமத்தை எப்படி பொலிவாக மற்றும் அழகாக மாற்றுவதை பற்றியும், இது போன்ற பூக்களை வைத்து நம்முடைய சரும ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

ரோஜா பூ

பெண்கள் அனைவருக்கும் ரோஜாவை போன்ற நிறம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதனால் ரோஜாவால் தயாரிக்கப்படும் ஏராளமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ரோஜா இதழ்களை வைத்து நம் முகத்தை எப்படி பொலிவாக்கலாம் என்பதைக் காணலாம், அதற்கு ரோஜா இதழ்களை பரித்து அதை வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும், பிறகு அதை பொடியாக்கி அதனுடன் வெந்தயம் பொடி மற்றும் தயிரினை ஒன்றாகக் கலந்து நன்கு குழைத்து கொள்ள வேண்டும் பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தின் நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு ரோஜா இதழ்களை அரைத்து செய்வதற்கு நேரமில்லை என்றால் அதற்கு பதிலாக கடைகளில் விற்கும் ரோஜா பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – கோடை கால சருமப் பாதுகாப்பு அவசியம்

குங்குமப் பூ 

விலை அதிகமாக உள்ள பொருட்களில் குங்குமப்பூவும் ஒன்று, இருந்தாலும் இதை உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தும் போது உங்களுக்கு உடனடி மாற்றம் அளிக்கும் தன்மை குங்குமப் பூவிற்கு உண்டு. எனவே குங்குமப் பூவை பாலில் சேர்த்து அதை நன்கு ஊற வைத்து பின்பு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை உங்கள் முகத்தில், உதடுகளின் மேல், கருவறையில் உள்ள இடங்களில் போன்ற இடத்தில் தடவுவதன் மூலமாக உங்களுக்கு உடனடி தீர்வையும் மற்றும் உங்கள் நிறத்தை அதிகரிக்கவும் இந்த குங்குமப்பூ உதவும்.

செம்பருத்திப் பூ

செம்பருத்திப்பூவை தங்கபஸ்பம் என்று அழைப்பார்கள், எனவே இது உங்கள் கூந்தல் மற்றும் சருமத்திற்கு அதிகமாக உதவும். இந்த செம்பருத்தி பூவை அப்படியே காயவைத்து அதை பொடியாக்கி அதில் பாசிப்பருப்பு பொடி மற்றும் பாலை ஒன்றாகக் கலந்து நன்கு குழைத்து கொள்ள வேண்டும். பிறகு அது உங்கள் கைகள், கால்கள், சருமம் என அனைத்து இடங்களிலும் தேய்த்து 30 நிமிடங்கள் காய வைக்கவேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலம் உங்கள் முகம் பொலிவாகவும் மற்றும் அழகாகவும் இருக்கும். 

ஆவாரம் பூ 

வெயிலினால் கருமையானவர்கள் ஆவாரம்பூவை பயன்படுத்தி தங்கம் நிறத்தில் ஜொலிக்கலாம். இதற்கு நீங்கள் ஆவாரம் பூவை வெயிலில் நன்கு காயவைத்து அதை பொடியாக மாற்றி அதில் காய்ச்சாத பசும்பால் பால் மற்றும் கசகசா பொடியை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை உங்கள் முகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் காயவிட வேண்டும். இறுதியில் வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலமாக உங்கள் சருமம் மென்மையாகவும் மற்றும் மெளிதாகவும் இருக்கும். இதை தவிர்த்து முகப்பரு சரும பிரச்சனைகளையும் தீர்க்கும்.

மேலும் படிக்க – வெந்தயமும் மனித வாழ்வின் ஆரோக்கியமும் அவசியம்!

மகிழம்பூ

கோடைக் காலங்களில் உண்டாகும் அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருப்பது இந்த மகிழம்பூ, எனவே  இதில் நீர் விட்டு அரைத்து உங்கள் முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம். அதே போல் வெயிலினால் ஏற்பட்ட கட்டிகள், கொப்புளங்கள் போன்ற அனைத்தையும் குறைப்பதற்கு இதைப் பயன்படுத்தலாம். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதைப் பயன்படுத்தலாம். இந்த பொடியை நாட்டு மருந்து கடைகளில் நேரடியாக வாங்கி பயன்பெறலாம்.

எனவே உங்கள் சருமத்தை இயற்கை முறையில் பாதுகாக்க வேண்டுமென்றால் இந்த பூக்களை பயன்படுத்தி உங்கள் அழகையும் மற்றும் உங்கள் சரும ஆரோக்கியத்தையும் அதிகரியுங்கள். இதனால் உங்கள் சருமம் பொலிவடையும், அது மட்டுமல்லாமல் நீங்கள் அழகு சாதனப் பொருள்களுக்காக வீணடிக்கும் பணத்தையும் மிச்சப் படுத்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன