சரும அழகை அதிகரிக்க உதவும் விளக்கெண்ணெய்..!

  • by
use castor oil to improve your skin beauty

விளக்கெண்ணெயில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பதை பல பதிவுகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் நம்முடைய சருமம், உதடு, பாதங்கள் என எல்லாவற்றிற்கும் விளக்கெண்ணையை எப்படி பயன்படுத்துவது அதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

உடல் அழகை அதிகரிப்பதற்கு

நம் முகம் மற்றும் கை, கால்கள் மற்றும் சருமத்தை தான் அதிகமாக பாதுகாக்க நினைக்கிறேம், ஆனால் நமது உடலையும் அவ்வப்போது பாதுகாத்தால் தான் நாம் என்னாளும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதற்கு கஸ்டர் ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் ஒன்றாக கலந்து இரவு உறங்குவதற்கு முன்பாக நமது உடல் முழுக்க நன்கு தேய்த்து விட வேண்டும்.  அடுத்த நாள் குளிப்பதன் மூலம், உங்கள் சருமத்தின் மென்மையை உங்களால் உணர முடியும்.

மேலும் படிக்க – முக அழகிற்கு ஆளி விதை ஃபேஸ் பேக்..!

உதடுகள் பராமரிப்பு

குளிர்காலம் மற்றும் கோடை காலங்களில் நமது உதடுகள் வறட்சி அடையும் இதை தடுப்பதற்கு சிறிதளவு விளக்கெண்ணெயை எடுத்து நம் உதடு மேல் தடவ வேண்டும். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதடு நிரந்தரமாக மென்மையாகும். அதை தவிர்த்து எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

பாத வெடிப்புகளை குணப்படுத்தும்

நம்முடைய உடலை எப்படி பாதுகாக்கிறேமோ அதே அளவு நமது பாதங்களையும் பாதுகாக்க வேண்டும். இதற்கு நீங்கள் விளக்கெண்ணையை கொண்டு தினமும் பாதங்களில் மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்கள் பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளை தடுக்க லாம். அதுவே வெடிப்புகள் வந்த பிறகு பாதங்களை வெந்நீரில் அலசிய பிறகு விளக்கெண்ணையை வெடிப்புகள் உள்ள இடங்களில் நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வலி குறைந்து வெடிப்புகள் மறையும்.

மேலும் படிக்க – கண்களில் லென்ஸ் அணிபவர்கள் மேக்கப் செய்வது எப்படி?

கருமையை போக்கும்

வெயில் தாகத்தினால் ஒரு சிலரின் சருமம் கருநிறமாக மாறி இருக்கும். எனவே இதுபோன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்கள் விளக்கெண்ணெயில் சிறிது மஞ்சளை சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை உங்கள் சருமம் முழுக்க அதை தேய்பதன் மூலமாக கருமை விலகி உங்கள் நிறத்தை அதிகரிக்கும்.

தழும்புகளை அகற்றும்

குழந்தை பிறந்த பிறகு பெண்களின் வயிற்றுப் பகுதியில் தழும்புகள் உண்டாகும். இதை போக்குவதற்கு தழும்புகள் உள்ள பகுதிகளில் தினமும் விளக்கெண்ணையை தடவை வேண்டும். அதை தவிர்த்து முகப் பருக்கள் கரும்புள்ளிகள் போன்றவைகளை அகற்றவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது.

சமையலறையில் எளிமையாக கிடைக்கும் விளக்கெண்ணையை கொண்டு நாம் இவ்வளவு அற்புத செயல்களை செய்ய முடியும். எனவே உங்கள் சரும ஆரோக்கியத்தை மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக தினமும் விளக்கு எண்ணெயை பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன