கத்திரிக்காயை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்குங்கள்.!

  • by
use brinjal to make your skin bright

நம் உணவுகளில் பயன்படுத்திவரும் கத்திரிக்காயை பெரிதாக பலரும் விரும்பமாட்டார்கள். அதை பிரியாணிக்கு மட்டும்தான் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். அத்தகைய கத்தரிக்காய் கொண்டு பாரம்பரிய முறைப்படி ஏராளமான சிகிச்சைகள் மேற்கொண்டு உள்ளார்கள். அக்காலப் பெண்கள் கத்தரிக்காயை கொண்டு பல் துலக்குவதும் உண்டு. அதை சருமத்திற்கும், கூந்தலுக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். இதை நான் கருதிக் கொண்டு நம் சருமத்தை எப்படி பாதுகாப்பது என்பதை காணலாம்.

சருமம் திட்டுக்களை அகற்றவும்

நம் முகம் மற்றும் உடம்பில் அங்கங்கே பழுப்பு நிற திட்டுகள் இருக்கும். இதை அடியோடு அழைப்பதற்கு நாம் கத்தரிக்காயை பயன்படுத்த வேண்டும். முதலில் நாம் கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வட்ட வடிவில் நறுக்கி திட்டுகள் இருக்கும் இடங்களில் வைத்து விடவேண்டும். அது நன்கு ஊறிய பின்பு அதன் மேல் கத்திரிக்காயை கொண்டு தொடர்ந்து தேய்க்க வேண்டும். பின்பு உங்கள் சருமம் மற்றும் முகங்களில் திட்டுக்கள் மேல் கத்தரிக்காய் சாறு தொடர்ந்து 15 நிமிடங்கள் இருக்கும்படி வைத்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சரும திட்டுக்கள் குறையும்.

மேலும் படிக்க – நகத்தைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா?

பருக்களை அழிக்கும்

ஒரு சிலருக்கு முகத்தில் மற்றும் உடலில் பெரியதாக பருக்கள் உண்டாகும். இதனால் அவர்கள் அழகு கெடுவது மட்டுமல்லாமல் பார்ப்பதற்கே வில்லன் போல் காட்சி அளிப்பார்கள். எனவே இது போன்ற பருக்களை அடியோடு அழிப்பதற்கு நம் கத்தரிக்காய் பயன்படுத்த வேண்டும்.

கத்தரிக்காயை சிறியதாக நறுக்கி அதை பருக்கள் இருக்கும் இடத்தில் வைத்து அதன் மேல் ஒரு பேண்ட் எய்டை ஒட்டிவிட வேண்டும். இரவு முழுவதும் இதை அப்படியே வைப்பதன் மூலம் அடுத்த நாள் பருக்கள் உதிர்ந்து அந்த பேண்ட் எய்டிடுக்குள் வந்திருக்கும். பிறகு கத்தரிக்காய் எண்ணிக்கொண்டு அந்த இடத்தில் தேய்ப்பதன் மூலம் பருக்கள் இருந்த வடுவும் கூட இருக்காது.

சருமத்திற்கு இதமளிக்கும்

கத்திரிக்காயை நாம் அப்படியே எடுத்து விழுதாக அரைத்துக் கொண்டு நம் சருமம் முழுக்க தடவி ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். இதை 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் சருமம் பொலிவடையும். அதை தவிர்த்து மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மேலும் படிக்க – இளநரையை விரட்டணுமா? அப்ப இந்த எளிய வழிகளை முயற்சி செய்து பாருங்க..!

கூந்தல் ஆரோக்கியம்

கத்திரிக்காய் சிறிதாக நறுக்கி நமது கூந்தல் முழுக்க தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக நமது கூந்தல் ஆரோக்கியம் அடையும். அதைத் தவிர்த்து கத்தரிக்காயில் பிசுபிசுப்புத் தன்மை இருப்பதனால் அது நமது கூந்தலை கண்ணாடி போல் மாற்றும், எனவே இதற்கு அதை தலை முழுக்க தடவி நீராட வேண்டும்.

இது போன்ற ஆரோக்கிய வழிகளை பயன்படுத்தி உங்கள் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரியுங்கள் அதை தவிர்த்து கத்தரிக்காயை முடிந்தவரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதினால் உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன