கர்ப்பப்பையில் உள்ள கழிவுகள் முழுவதும் நீங்க பயன்படும் கருஞ்சீரகம்….

  • by
use black cumin to remove toxins from uterus post delivery

ஒவ்வொரு பெண்ணும் குழந்தைப்பேறுக்கு அடுத்ததாக அவர்களது உடல் நலத்தை பேணிக் காப்பது மிக முக்கிய தேவையாக இருக்கிறது.குழந்தை பேற்றுக்குப் பின்னர் அவர்கள் உடலில் இருந்து சரியான முறையில் கழிவுகள் நீக்கப்படாமல் இருந்தால் பிற்காலங்களில் பல்வேறு நோய்கள் உருவாவதற்கு அந்த கழிவுகள் தான் காரணமாக அமைகின்றன.

கர்ப்பப்பையில் இருக்கும் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்ற பயன்படும் ஒரு மிகச் சிறந்த பொருள் தான் கருஞ்சீரகம். பல்வேறு சித்த மருத்துவக் மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் இந்த கருஞ்சீரகம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நாம் அதை உணவில் எடுத்துக்கொள்வது மிக அரிதாக இருக்கிறது. இதில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால் நிச்சயமாக இதை சாப்பிடாமல் நம்மால் இருக்க முடியாது.

இவ்வளவு சிறப்புகள் மிக்க கருஞ்சீரகம்! அதை எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்வது என்பதை விளக்கும் பதிவுதான் இது .

மேலும் படிக்க – மஞ்சள் சூப் குடியுங்கள் உடலை தொற்றிலிருந்து காக்கலாம்

கருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள்

இந்த கருஞ்சீரகத்தை நறுமணப்பொருட்கள் ஆகவும், உணவுகளில் உணவு தாளிக்கவும் நம் முன்னோர்கள் அதிக அளவில் பயன்படுத்தினார்கள். தோற்றத்தில் பார்ப்பதற்கு சாதாரண ஜீரகம் போலவே இருந்தாலும் இதன் நிறம் சற்று கருமையாக தான் இருக்கும்.தை மோ குயினோன்  என்ற வேதிப்பொருள் வேறு எந்த பொருள்களிலும் இல்லாத ஒரு வேதிப்பொருள் இந்த கருஞ்சீரகத்தில் மட்டும்தான் அதிக அளவில் இருக்கின்றன.

மேலும் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், புரோட்டீன்கள் கால்சியம் ,பொட்டாசியம் ,கரோட்டின்கள் இரும்புச்சத்து என பல்வேறு விதமான சத்துக்களைக் கொண்டுள்ளது இந்த கருஞ்சீரகம். குழந்தைப் பேறு அடைந்த தாய்மார்கள் ஏன் கருஞ்சீரகம் சாப்பிட வேண்டும்?

குழந்தைப் பேறு அடைந்த பெண்களின் கர்ப்பப்பையில் அழுக்குகள், கழிவுகள் அப்படியே தங்கி இருக்கும். இதனால் எதிர்காலத்தில் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட புற்று நோய்களும் வராமல் இருக்க இந்த கருஞ்சீரகத்தை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது கருத்தரித்தால் ஏற்படுவதில் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதற்கு இந்த கருஞ்சீரகம் உதவும் இது.

பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பப்பையை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு கருஞ்சீரகத்தை தான் சென்றடையும். கர்ப்பப்பையை தூய்மைப்படுத்தி சுத்தமாகவும் ,ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இந்த கருஞ்சீரகம் அவசியமானது.

கருஞ்சீரகத்தை எவ்வாறு சாப்பிட வேண்டும்?

கருஞ்சீரகத்தை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடலாம். கருஞ்சீரகத்தை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் தினசரி உணவு உண்பதற்கு முன்பாக நீரிலோ அல்லது பாலிலோ கலந்து குடிப்பது நல்லது. இது கருப்பையில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். இனிப்பு சுவைக்காக சிறிதளவு பனைவெல்லம் அல்லது தேன் கலந்து குடிக்கலாம்.

பிரசவத்திற்குப் பிறகு தலை முடி கொட்டும் பிரச்சனையை தீர்க்கிறது

குழந்தைப் பேறு அடைந்த உடனேயே பெண்களுக்கு உடலில் உள்ள சத்துக்கள் அனைத்தும் சற்று குறைந்து தான் இருக்கும். அதிலும் குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் கொடுப்பதற்காக தன் உடலில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் இறந்துவிடுகின்றனர் பெண்கள். இதனால் அவர்களுக்கு அதிக அளவில் முடி கொட்டுகிறது. இவர்கள் கருஞ்சீரக விதை எண்ணெயை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் தலை முடி கொட்டும் பிரச்சனை சரியாகி விடுகிறது.

கருஞ்சீரகத்தின் வேறு சில நன்மைகள் 

கருஞ்சீரகத்தின் நன்மை செய்யக்கூடிய கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றன. இதனால் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும் கால்சியம் ,அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் புரதங்கள், கொழுப்பு அமிலங்கள் இந்த சீரகத்தில் அதிக அளவு நிறைந்துள்ளன .

மேலும் படிக்க – கரோனா வைரஸ், முன்னெச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்???

சளி பிடித்து மூச்சு விட முடியாமல் மூக்கடைப்பு ஏற்பட்டால் ஒரு தீர்வு காண கருஞ்சீரகத்தைத் தூளாக்கி 50 மில்லி கிராம் தேங்காய் எண்ணெயை சூடு செய்து, ஒரு மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி இளம் சூடாக இருக்கும்போது மூக்கில் விட்டால் உடனே மூக்கடைப்பு நீங்கும். சளியும் வெளியே கொண்டு வரப்படுகிறது.

வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று வலியை நீக்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த்தொற்றுகள் தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.

கணைய புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் இந்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. வாயுத்தொல்லையை நீக்கும் திறன் கொண்டது.கல்லீரலில் ஏற்படும் கிருமித் தொற்றை எதிர்த்து அழிக்கும் தன்மை கொண்டது.

சர்க்கரை நோயாளிகள் அவ்வப்போது கருஞ்சீரகத்தை நீருடன் கலந்து எடுத்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தடுத்து சீராக வைத்துக் கொள்ள இந்த கருஞ்சீரகம் பயன் படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன