கற்றாழையில் கூந்தல் பாதுகாப்பு குறிப்புகள்.!

use alovera to make your hair strong

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் அழகு தருவது கூந்தல் தான். இவர்கள் தங்களின் கூந்தல் பராமரிப்பிற்காக எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள். பெண்களுக்கு முடி உதிர்தல், இளநரை, போன்ற பிரச்சனைகளால் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். அதேபோல் ஆண்கள் இளம்வயதில் முடிகள் உதிர்வது, நரைமுடி போன்ற பிரச்சினைகளால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி மேலும் அவர்களின் முடி உதிர்தலுக்கு காரணமாகிறார்கள். எனவே இது போன்ற கூந்தல் ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்து அதை வலுப்படுத்துவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

கூந்தல் காக்கும் கற்றாழை

கற்றாழையில் இயற்கையாகவே கூந்தலை சரி செய்யும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனால் தலைகளில் இருக்கும் இறந்த செல்களை போக்கி உங்கள் கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கிறது. அது மட்டுமல்லாமல் உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க – இரும்பு தேகம் பெற கரும்புச்சாறு சாப்பிடுங்க

உங்களுக்கு பட்டுப் போன்ற கூந்தல் வேண்டுமென்றால் கற்றாழை ஜெல்லைக் கொண்டு உங்கள் கூந்தல் முழுக்கத் தடவுங்கள். மற்ற கூந்தல் சாதனப் பொருட்களை ஒப்பிடுகையில் கற்றாழை ஜெல் போட்ட உடனே அதன் மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

தலையில் இருக்கும் அழற்சி, அரிப்பு போன்ற அனைத்தையும் தீர்ப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றால் கற்றாழையை வேர் முழுவதும் படும்படி நன்றாக கூந்தலில் முழுக்கத் தேய்க்க வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்வதன் மூலம் உங்கள் கூந்தலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நீங்கள் உணரலாம்.


மேலும் படிக்க – நைட் கீரிம் போடுங்க நாள் முழுவதும் பிரெஷா இருங்க.!

உங்கள் கூந்தலின் நண்பன் கற்றாழை

கற்றாழையில் புரோட்டின், வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருப்பதினால் உங்கள் கூந்தலுக்கு போஷாக்கு அளித்து வறண்டு விடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் முடி உடைதல், கொட்டுதல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கிறது.

கற்றாழை என்பது மிக எளிமையான முறையில் நம் வீட்டிலேயே வளர்க்கலாம். இதை பராமரிப்பதும் மிகவும் எளிது எனவே இதற்காக கடைகளில் பணத்தை செலவு செய்து கற்றாழை ஜெல் வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே தயார் செய்யுங்கள்.

மேலும் படிக்க – தக்காளி ஒரு பெஸ்ட் ப்ளீச்சிங் ஏஜெண்ட்.!

கற்றாழை கூந்தல் பேக்

கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து உங்கள் கூந்தல் முழுக்க தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி உங்கள் கூந்தலை நன்கு உலர வைக்க வேண்டும். இதை மாதத்திற்கு ஒரு முறை செய்வதன் மூலம் மிக ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

மற்ற எல்லா பொருட்களையும் விட கற்றாழைக்கு தான் உங்கள் கூந்தலை பராமரிக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது. எனவே இதை சரியாக பயன்படுத்தி உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துங்கள். அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன