ரிச் அண்ட் கியூட் லுக் வேணுமா பாதாம் எண்ணெய் பயன்படுத்துங்க.!

use almond oil to get rich and cute look

பெண்கள் எப்போதும் தங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்வதற்காக மிகப்பெரிய செயலை செய்து வருவார்கள். இதைப் பார்க்கையில் ஆண்களுக்கு பெரிய சந்தேகம் எழும், ஏன் பெண்கள் இவ்வளவு மெனக்கெட்டு தங்கள் அழகை மேம்படுத்தி கிறார்கள் என்று. அழகு இயற்கையானது என்று நினைக்கும் ஆண்கள் பெண்களில் எண்ணங்களை அறிவது மிகவும் கடினம், அப்படி இருக்கையில் பெண்கள் செய்வது சரியான ஒன்றுதான் என்று ஆண்கள் எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார். இப்போதும் நாம் நம் சருமத்தை பாதுகாக்க தவறி விட்டால் வயதும் முதிர்வின் போது நமது சருமம் மிகப்பெரிய பிரச்சினைக்கு உள்ளாகும். இதனால் ஆண்கள் எப்போது பெண்களை கிண்டல் செய்துவிட்டு பின்னர் வருத்தப்படுவார்கள்.

அதேபோல ஒரு சில பெண்கள் தங்கள் சருமத்தின் அழகை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் தேவையற்ற கிரீம் மற்றும் தரம் குறைந்த கிரீம்களை பயன்படுத்தி அவர்களின் சருமத்தின் தன்மையை நிரந்தரமாக அழித்து விடுவார்கள். எனவே இவர்கள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக இயற்கை முறையை பின்பற்றுவது நல்லது. அதிலும் இயற்கை எண்ணெய்களான பாதாம் எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் நமது சருமத்தில் இருக்கும் பல பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

மேலும் படிக்க – பொலிவான முகம் வேண்டுமா? இதை பண்ணுங்க.!

முகம் மற்றும் கழுத்துப் பகுதி வெவ்வேறு நிறமாக இருப்பவர்கள் பாதாம் எண்ணெய்யை சிறிதளவு எடுத்துக்கொண்டு வெண்மை குறைவான இருக்கும் இடத்தில் நீண்ட நேரம் மசாஜ் செய்து, பின்பு வெண்மையாக இருக்கும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் உங்கள் சருமம் ஒரே நிறத்தில் இருக்கும். அதை இரவு முழுவதும் நன்கு ஊறவைத்து பகலில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்தில் 2 முதல் 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதேபோல சரும நிறத்தை அதிகரிக்க பாதாம் எண்ணெயுடன் பாதி அளவு நாட்டுச் சர்க்கரையைக் கலந்து முகம் முழுக்க நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க – ஆவிபிடிப்பதால் புத்துணர்வு கிடைக்கப் பெறலாம்

பாதாம் எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய் இரண்டையும் ஒன்று சேர்த்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம், இதுவும் உங்கள் நிறத்திற்கு நல்ல பலனைத் அளிக்கும். கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக சேர்த்து கலந்து முகம் முழுக்க தடவுங்கள், அதை ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு லைட் ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். பின்பு தேவைப்பட்டால் ஸ்கின் டோனர் எதையாவது பயன்படுத்தலாம். இது உங்கள் நிறத்தை அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ ஆயிலை ஒன்றாக சேர்த்து முகம் முழுக்க தடவ வேண்டும். இதை இரவு முழுவதும் ஊறவைத்து பின்பு காலையில் கிலிசரின் மூலமாக கழுவினால் உங்கள் முகம் பளிச்சென்று இருக்கும்.

மேலும் படிக்க – சரும பொலிவுக்கு லோசன் இப்படி பயன்படுத்துங்க

பாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு, பால் பவுடர் இது மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி மாய்ச்சுரைசர் க்ரீமை ஏதாவது பயன்படுத்தினால் உங்கள் சருமம் பொலிவடையும்.

வாழைப்பழத்தையும், பாதாம் எண்ணெயும் ஒன்றாக சேர்த்து முகம் முழுக்க ஃபேஸ் பேக் போட வேண்டும். இதை 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்தில் இரண்டு முறை செய்தால் அழகு நிலையத்தில் பெரும் நிகரான அழகை நீங்கள் பெற முடியும்.

எனவே, பாதாம் எண்ணெயில் உங்கள் அழகை மேம்படுத்த கூடிய அனைத்து சக்திகளும் இருப்பதனால், இதை தரமான கடைகளில் தரமான எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. அதிலும் குளிர் பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய பாதாம் எண்ணெய்களில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. எனவே அது போன்ற இடங்களுக்கு சென்றால் மறக்காமல் இந்த எண்ணெய்களை வாங்கி பயன் பெறுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன