புத்துணர்ச்சி பொங்கும் ஆரோக்கியம் அதுவே ரோஜா

  • by

ரோஜா பூ அதுவும் பன்னீர் ரோஜா   அழகுடன் ஆரோக்கியத்தை மெருக்கூட்டும் ஒரு பெரும் மருந்தாகும். பன்னீர் ரோஜா நம் நாட்டில் வளர்க்படும் ஒன்றாகும். இதனை நாம் முறையாக சாப்பிட்டு வருதல் வேண்டும்.

ரோஜா மலர்

 பன்னீர் சாப்பிட  எளிதானது ஆகும். இது லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. ரோஜாவின் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கியாகும். 

ரோஜா பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், பல் ஈறுகளின் பிரச்சனைகளைப் போக்கும்.  ரோஜா இதழை குடிநீரில் வைத்துகுடித்தால் இது காயங்களை ஆற்றும்.  

ரோஜா மலர்

ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதனை பாத்திரத்தில்  நன்கு காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீர் என்பார்கள். இது சருமத்திற்கு டோனராக பயன்படும் ஒன்றாகும். 

ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான  மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. 

மேலும் படிக்க: மனக்கும் மல்லிகையில் மகத்தான மருத்துவகுணம்

புத்துணர்ச்சி தரும் ஒன்றாகும்:

அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி  புத்துணர்ச்சி ஏற்படும். நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடியும். 

ரோஜாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது. பன்னீர் கொண்டு நீங்கள் முகம் கழுவி வந்தால் முகப்பரு பிரச்சனைக்கு ஓர் சிறந்த தீர்வினை இது கொடுக்கும். 

மேலும் படிக்க: செவ்வந்தி பூவெடுத்து செழிப்பான வாழ்கை வாழலாம்.

இயற்கை நற்குணங்கள்:

ரோஜாவில் இருக்கும் இயற்கை நற்குணங்கள் வடுக்களின் மூலம் சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்க வல்லது. மற்றும் இது படையினால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கவும் வெகுவாக உதவுகிறது.

ரோஜா மலர்

ரோஜாவில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி, ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். வைட்டமின் சி’யின் முக்கியத்துவம் என்னவெனில், இது சருமத்தில் இருக்கும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது. மற்றும் ரோஜா வேனிற்கட்டி (Sunburn) எரிச்சல்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க: இறை அருள் தரும் மலர்கள் இறைக்கு சூடும் முறை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன