இஞ்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா???

  • by
unknown medicinal benefits of ginger

“சுக்கிற்க்கும் சுப்பிரமணியனுக்கும் மிஞ்சியது எதுவுமில்லை” என்ற ஒரு
பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது சுக்கு என்பது இஞ்சியைக்
காயவைத்து கிடைக்கும் ஒரு பொருள். நம் வாழ்க்கைக்கு முருக கடவுள் போல துணைநிற்கும் ஒரு உணவுப் பொருள் தான் இஞ்சி என்பதை நம் முன்னோர்கள் இந்த பழமொழியின் வாயிலாக கூறியிருக்கிறார்கள்.

இஞ்சின் தோற்றம்

இந்தியா மற்றும் சீன நாடுகளில்தான் 4000  வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த
இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2000ம் ஆண்டுகளாக ஆயுர்வேத
மருந்துகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.  நம் முன்னோர்கள் கழிவு நீக்கும்
பொருள்களில் முக்கியமானதாக இஞ்சியை பயன்படுத்தினார்கள்.


உணவே மருந்து என்பார்கள் அப்படி மருந்தாக பயன்படும் இஞ்சி நாம் தினசரி
உணவில் எடுத்துக் கொண்டால் அதன் முழு பயனையும் பெற முடியும்.
மிகப்பெரிய மருந்துகளால் கூட தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளை
இஞ்சியானது சரிசெய்து விடுகிறது.


இஞ்சியில் உள்ள பல ஆல்கலாய்டுகளும் பல கனிமங்களும் தான் இந்த
சிறப்புக்குக் காரணம்.

மேலும் படிக்க – சீரகம் கலந்த உணவு சாப்பிட்டால் நம்மை சீராக்கும்

வாந்தி ஏற்படுவதற்கான காரணங்கள் 

வாந்தி என்பது ஜீரண குறைபாடுகளால் மட்டுமே ஏற்படுவதில்லை.
பயணத்தின்போது நம் உடலில் ஏற்படும் அதீத உடல் அசைவு காரணமாக நமது
மூளையில்  வாக்சோ பிளாசின் என்ற ஒரு திரவம் சுரக்கப்படுகிறது.  இந்த
காரணத்தினால்தான் பயணத்தின்போது அடிக்கடி வாந்தி ஏற்படுகிறது. இந்த
வாந்தியை சரி செய்ய பயணிப்பதற்கு முன் இஞ்சி எடுத்துக்கொண்டால் வாந்தி
வராமல் தவிர்க்கலாம்.

இஞ்சியை எப்படி சாப்பிடலாம் 

இஞ்சியில் உள்ள ஜின்ஜரால் என்ற பொருள்தான் காரத்தன்மை காரணமாக
இருக்கிறது. அதிக காரம் இருப்பதால் இதை அப்படியே சாப்பிடுவது சிரமமாக
இருக்கும்.இஞ்சி துவையல் செய்து சாப்பிட்டால் அதன் காரம் தெரியாமல்
இருக்கும்.

இஞ்சி துவையல் செய்முறை 

இஞ்சி சிறிதளவு நீர் விட்டு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல்,உளுத்தம்பருப்பு, இஞ்சி, புளி ஆகியவற்றை நன்றாக வறுத்துக்கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பின்னர் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வதக்கினால் போதும் சுவையான இஞ்சி துவையல் தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – உடல் உறுப்பு தானத்தால் ஏற்படும் 5 நன்மைகள்..!

கர்ப்பிணி பெண்களின் வாந்தியை கட்டுப்படுத்தும் இஞ்சி

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் கட்டாயமாக சாப்பிட வேண்டிய உணவுகளில்
இந்த இஞ்சி துவையலும் ஒன்று. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தின்
காரணமாக கருவுற்றிருக்கும்போது அதிகளவு வாந்தி ஏற்படுகிறது. சில கர்ப்பிணி
பெண்களுக்கு மருந்து மாத்திரைகளை பார்த்த உடனே வாந்தி வந்துவிடும். அதை
தடுப்பதற்காக வேறு மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அது குழந்தையின்
வளர்ச்சியில் பாதிப்பையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இதனால்
அவர்களது உடல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சிறிதளவு இஞ்சித்
துவையலை உணவில் சேர்த்துக்கொண்டால் குமட்டல் மற்றும் வாந்தி
வருவதை தவிர்த்து விடலாம்.

ஹீமோதெரபி சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வாந்தியைத் தடுக்கிறது

நமது உடலில் புற்றுநோய் செல்களை அளிப்பதற்காக ஹீமோதெரபி சிகிச்சை
முறை செயல்படுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையின் போது குமட்டல் வாந்தி
ஏற்படாமல் இருக்க இஞ்சியின் வேர்பகுதி பயன்படுத்தப்படுகிறது. இதை
ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். இஞ்சி வேரில் இருக்கும் செருபோன் என்ற ஒரு ஆல்கலாய்டு தான் ஹீமோதெரபி சிகிச்சைக்கும் பின் ஏற்படும் வாந்தி
குமட்டல்  பண்புகளை ஏற்படுத்தும் காரணிகளை தடுத்து நிறுத்துகிறது.

ஒவ்வாமையை குணப்படுத்தும் இஞ்சி 

இஞ்சியில் உள்ள அண்டிஹிஸ்டமின் பண்புகள் ஒவ்வாமை நோய்களை
குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவருக்கும் ஒவ்வாமையால் ஏற்படும் சளி, இருமல் பிரச்சனைகளுக்கு இந்த
இஞ்சி சாறினை சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் நுரையீரல் காற்று பையில்
உள்ள சுருக்கங்களை நீக்கி சளியை வெளிக்கொண்டு வருகிறது. கழிவு நீக்க
பயன்படும் இஞ்சி ஆயுர்வேத மருந்துகளின் இருதயம் என அழைக்கப்படும்.

  இஞ்சி நம் உடம்பில் உள்ள கெட்ட கழிவுகளை நீக்குவதில் முக்கிய பங்கு
வகிக்கிறது.

  வாதம் பித்தம் கபம் என மூன்றிலும் சரி செய்யும் ஒரு முக்கிய உணவுப்
பொருள் தான் இஞ்சி.

  நாம் உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை எளிதாக மிக்க
ஜீரணம் செய்வதற்கு இஞ்சி பயன்படுகிறது.

மேலும் படிக்க – தினமும் உணவில் பீட்ரூட் சேர்ப்பதனால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள்.!

  அசைவ உணவுகளில் அதிக அளவு இஞ்சி பயன்படுத்துவதற்கு இதுதான்
காரணம்.

 இஞ்சியை மையாக அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால்,
குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். 

 சிலர் காலையில் அருந்தும் டீயில் இஞ்சி சேர்த்து அருந்துவார்கள்;
அதுவும் உடலைச் சுத்தமாக்கும். இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி,
தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமலிருக்கும். 

 முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து
அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும்
வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும்.

இவ்வளவு மருத்துவ பயன்கள் மிக்க இஞ்சியை மருந்தாக அல்லாமல் உணவாக
தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன