மகாபலிபுரத்தின் சிறப்பு மற்றும் வரலாறு..!

  • by
unique specialities about mahabalipuram

தமிழகத்தில் மிகவும் பிரபலமான மற்றும் பழமையான நகரம் தான் மகாபலிபுரம். இதை மாமல்லபுரம் என்று அழைப்பார்கள். இந்த இடத்தில் உள்ள கோவில்கள் மற்றும் சிற்பங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக யுனஸ்கோ அறிவிக்கப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு தொல்பொருள் துறைகளினால் பாதுகாக்கப்படும் 440 பகுதிகளில் இதுவும் ஒன்று. இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோவிலில் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளை காணலாம்.

மாமல்லபுரம்

முதன்முதலில் மகாபலிபுரத்தை வர்த்தகம் செய்வதற்கான துறைமுகமாக பயன்படுத்தி வந்தார்கள். அதன்பிறகு இங்கே கோவில்கள் மற்றும் சிற்பங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். மாமல்லபுரம் என்ற பெயருக்கான காரணம் என்னவென்றால் ஒரு நாள் நரசிம்மர் ஆகிய மாமல்லர் தன் தந்தையுடன் உலா சென்று கொண்டிருக்கும் பொழுது அவர் கண்ணில் தென்பட்ட ஒரு பெரிய பாறையில் யானையின் படத்தை வரைந்தார். அந்த ஓவியத்தைப் பார்த்த உடன் தன் தந்தைக்கு இங்கே அழியாத சிற்பங்களையும், கோவில்களையும் கட்ட வேண்டும் என்ற யோசனை வந்தது. இதன் பிறகுதான் இங்கே ஒரு அற்புத கோவில் உருவாக்கின இந்த இடத்திற்கு மாமல்லர் என்ற அவரின் வாரிசின் பெயரையே வைத்தார்.

மேலும் படிக்க – கல்லாக மாறும் மரங்கள்!!!

சிற்பங்களின் சிறப்பு

மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இதைத் தவிர்த்து இந்த கோவில்களில் சிற்பங்கள் வெளிப்புறத்தில் இருப்பதுபோல் உட்புறத்திலும் சிற்பங்களை செதுக்கி உள்ளார்கள். 1984 ஆம் ஆண்டு மாமல்லபுர சிற்பங்களை யுனஸ்கோ பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது.

கட்டுமானக் கோயில்கள்

கட்டுமான கோவில்கள் என்றால் ஒரு பாறை மீது மற்றொரு பாறையை ஒன்றின்மேல் ஒன்று வைத்து உயரமாக கட்டப்படுவதை கட்டுமான கோவிலாகும். இதன் தொடர்ச்சியாகத் தான் மற்ற கோவில்களும் இதே வழியை பின் தொடர்ந்து கட்டினார்கள். மாமல்லபுரத்தில் மூன்று கட்டுமான கோவில்கள் உள்ளது அது “முகுந்தநாயனார் கோயில்” தரையில் கட்டப்பட்டவை. “உழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில்” மலைமீது கட்டப்பட்டவை. கடலோரத்தில் கட்டப்பட்டவை தான் கடைசி “கடற்கரை கோவில்”.

கடற்கரைக் கோவில்

கடற்கரை கோவில்தான் மாமல்லபுரத்தின் அடையாளமாக இருக்கிறது. இந்த கோவிலை நரசிம்மவர்மன் என்று அழைக்கப்படும் ராஜசிம்மாவால் கட்டப்பட்டது. இந்தக் கோவிலை வார்த்தையால் வர்ணிப்பதை விட நேரில் சென்று பார்த்தால்தான் அதன் அழகு எல்லோருக்கும் தெரியும். இங்கே பெருமாள் படுத்து இருப்பதை போல் முதலில் அமைந்திருந்தது பின்பு இடது மற்றும் வலது புறத்தில் சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கிழக்கில் ஐந்து அடுக்கு கோபுரமும் மேற்கில் மூன்று அடுக்கு கோபுரம் மிக உயர்ந்து நிற்கிறது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது.

மேலும் படிக்க – கிரகணங்கள் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது!

வரலாற்று சிறப்புமிக்க கோவில்

இந்தக் கோவிலை அக்காலத்தில் வணிகம் செய்வதற்காக பயன்படுத்தி வந்தார்கள். இது ஒரு கலங்கரை விளக்கமாகவே பயன்பட்டது. 2004 ஆம் ஆண்டு உருவான சுனாமியில் இந்த கடற்கரையில் மறைந்து இருந்த மற்றொரு கோவிலும் தென்பட்டது. இதை தவிர்த்து இன்னும் ஏராளமான கோபுரங்கள் இதை சுற்றி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகம் வெப்பமாவதனாள் நீர் மற்றும் கடல் அளவு அதிகரித்து உள்ளது இதன் மூலமாக பல சிற்பங்கள் மறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பல்லவர்களால் கட்டப்பட்ட இந்த சிற்பங்களை தினமும் ஏராளமானோர் வந்து ரசிக்கிறார்கள். இதைத்தவிர்த்து கடந்த ஆண்டு சீன அதிபர் இந்திய பிரதமரை சந்திப்பதற்காக தேர்ந்தெடுத்த இடமும் மாமல்லபுரம் தான். எனவே இதன் வரலாறு இன்றும் உலகெங்கும் பரவி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன