நீங்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளீர்களா? இதை படியுங்கள்…!

 • by

மன அழுத்தம் அவ்வப்போது நம் அனைவரையும் வெகுவாக பாதிக்கிறது, ஒருவரால் எவ்வளவு மன அழுத்தத்தை கொண்டிருக்க முடியும், கீழே உள்ள எச்சரிக்கை அறிகுறிகளால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், இப்போதே மன அழுத்தத்தைக் குறைக்க பின்வருவதை பின்பற்றவும்.

மன அழுத்தம் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாத உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தொழில்நுட்பமானது 24 மணி நேரமும் மற்றவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவதால், நம்முடைய கடமைகளை சமநிலைப்படுத்துவதும், ஆரோக்கியமான வழிகளில் மன அழுத்தத்தை சமாளிப்பதும் சாத்தியமற்றதாகத் தோன்றலாம்.

ஒரு வேலையோ அல்லது செயலையோ கட்டாயம் செய்யவேண்டிய ஒரு நிலைமையில் நாம் சிக்கியுள்ளதால், பயம், கவலை, துன்பம் ஆகியவை நம் உடலையும் மனதையும் பாதிக்கிறது.

மேலும் படிக்க-> நீங்கள் தவறான உறவில் இருக்கிறீர்களா? அதற்க்கான அறிகுறிகள்…!

நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறிகள்:

உடலியல் அறிகுறிகள் :

 • நாள்பட்ட உடல் வலி
 • தலைவலி
 • உடல் நடுக்கம்
 • கை, கால் வலி
 • உயர் இரத்த அழுத்தம்

உங்களின் நடத்தை அறிகுறிகள் :

 • போதை பொருட்களின் அதிகரித்த பயன்பாடு (நிகோடின், ஆல்கஹால், காஃபின் மற்றும் சட்டவிரோத மருந்துகள் உட்பட)
 • சமூகத்திலிருந்து ஒதுங்கியிருத்தல்
 • சமமற்ற உணவு முறை
 • அடிக்கடி கோபமாக பிறரிடம் சீறுவது
 • உடற்பயிற்சி செய்யாதிருத்தல்
 • எதையோ பறிகொடுத்தாற்போல் உணர்வு

உளவியல் அறிகுறிகள் :

 • சோகம் அல்லது மனச்சோர்வு
 • கவலை
 • ஓய்வின்மை
 • கவனமின்மை
 • ஒரே சிந்தனை
 • எரிச்சல் அல்லது கோபம்

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், இன்றே மன அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள். முன்னேற்றம் அல்லது மாற்றத்திற்கான விதையை தூவுங்கள். பிறரிடம் சரியான கேள்விகளைக் கேட்பது, மிகவும் நிதானமாக பிறரை கவனிப்பது, உங்கள் ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்துதல் என அனைத்தையும் மேம்படுத்த ஆவண செய்யலாம்.

மேலும் படிக்க-> மன அழுத்தமாக உணர்கிறீர்களா? உங்கள் மன அழுத்தத்தை கையாள உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம்…!

This image has an empty alt attribute; its file name is shutterstock_264660446-1-1024x683.jpg

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்:

எனது ஆதரவு யார்?

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்கள், ஆதரவை வழங்குபவர்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முன்மாதிரியாக உள்ளவர்களை அடையாளம் காண விரும்புவார்கள். அவர்கள் நண்பர்களாக, குடும்ப உறுப்பினர்களாக, வழிகாட்டிகளாக, ஆன்மீகத் தலைவர்களாக, சகாக்களாக மற்றும் மனநல நிபுணர்களாக இருக்கலாம்.

என் தூக்க நேரம் என்ன?

நீங்கள் தினமும் சுமார் 8 மணிநேர தடையற்ற தூக்கத்தைப் பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் தெளிவாக சிந்திக்கவும், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வேலை மற்றும் உறவுகளில் சிறப்பாக கவனம் செலுத்தவும் முடியும். படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் செல்போன், டிவி மற்றும் பல மின்சாதனங்களை அணைப்பது உங்கள் தூக்க தரத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

நான் ஒழுங்கமைக்கப்பட்டவனா?

நீங்கள் ஒரு துல்லியமான அட்டவணை மற்றும் செய்ய வேண்டிய பட்டியலுடன் பணிகளை நிர்வகிக்கும்போது, தேவையற்ற குழப்பம் மற்றும் மன வருத்தத்தை குறைக்கமுடியும். தினமும் அந்த பட்டியலை சரியாக மேற்கொண்டு வந்தால் நல்ல மாற்றத்தை உங்களால் நிச்சயம் பெற முடியும்.

நான் எப்போது, எப்படி மன அமைதிக்கான பயிற்சியை செய்ய வேண்டும்?

ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவது, ஒரு புத்தகத்தைப் படிப்பது, நடப்பது அல்லது இசையைக் கேட்பது போன்ற எளிய செயலை செய்ய முற்படுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் சில நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசத்தை எடுத்துக் கொள்ள வேண்டும், அல்லது யோகா / தியானம் உங்கள் உடலை சரிப்படுத்த தேவையானவற்றை வழங்கக்கூடும்.

முக்கியமான செயல்களை செய்ய நான் மறுக்கிறேனா?

உங்களிடமிருந்து பிறர் எதிர்பார்க்கும் செயல்களை தவறாமல் செய்திடுங்கள், அது படிப்பு சம்மந்தமாக இருக்கலாம், வேலை சம்மந்தமாக இருக்கலாம், அல்லது தனிப்பட்டவையாக கூட இருக்கலாம். ஒரு செயலை எங்கு தொடங்குவது என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதற்க்காக அட்டவணை மற்றும் செய்ய வேண்டியவைகளின் பட்டியலைப் பாருங்கள், மேலும் அதில் எவை சேர்க்கலாம் அல்லது அகற்றலாம் என்பதைப் பாருங்கள்.

மேலும் படிக்க-> ஊரடங்கின் போது தனிமை மற்றும் மேலதிக சிந்தனையை சமாளித்தல்…!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன