வறட்டு இருமலைப் போக்கும் மஞ்சள்..!

  • by
turmeric to cure dry cough

மனிதர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டவுடன் அதை இருமல், ஜலதோஷம் போன்றவை மூலமாக வெளிக் காட்ட தொடங்கி விடும். ஆரம்பத்தில் சாதாரண இருமலாக உருவாகும் இதுபோன்ற பிரச்சினைகள், நாளடைவில் ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளாக உருவாக்கும். இதைத் தவிர்த்து இதன் மூலமாக உடல் வலி மற்றும் சோர்வு நிலை ஏற்படும், இதை அனைத்தையும் ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டுமென்றால் நம் வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை பயன்படுத்தி இதுபோல் உண்டாகும் வறட்டு இரும்பலை ஆரம்பநிலையில் நம்மால் தடுக்க முடியும்.

பாலுடன் மஞ்சள்

வறட்டு இரும்பல் வந்த உடனே நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நமக்கு கொடுக்கப்படுவது, மஞ்சள் கலக்கப்பட்ட பால். எனவே வறட்டு இரும்பலினால் ஏற்படும் தொண்டை எரிச்சல் மற்றும் அசௌகரியம் போன்ற அனைத்தையும் குறைக்கும் தன்மை இந்த பாலுக்கு உண்டு. எனவே இரவில் உறங்குவதற்கு முன் பாலில் போதுமான அளவு மஞ்சளை சேர்த்து குடியுங்கள்.

மேலும் படிக்க – முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

உப்பும் மஞ்சளும்

அதேபோல் மதிய வேளைகளில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் தேவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள் சேர்த்து தேன் கலந்து குடிப்பதன் மூலமாக உங்கள் தொண்டையில் ஏற்படும் அனைத்து கிருமிகளும் அழிந்து வறட்டு இரும்பலினால் ஏற்பட்ட காயங்களை விலகும். அதேபோல் இது தொண்டையில் ஏற்படும் தொற்றுக்களை அழித்து உங்களுக்கு உடனடி ஆறுதலை அளிக்கும்.

துளசி மற்றும் மஞ்சள்

காலையில் தேநீர் குடிப்பதைப்போல் நீங்கள் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் இரண்டு துளசி இலை, புதினா மற்றும் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நாட்டுச்சக்கரை போன்றவற்றைக் கலந்து தேனீராக குடிக்க வேண்டும். இது உங்கள் தொண்டையில் ஏற்பட்ட எரிச்சலை குறைக்கும், அதைத் தவிர்த்து இதன் மூலமாகப் பரவும் கிருமிகள் அடியோடு அழிக்கும். இது சளி மற்றும் ஜலதோஷம் பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும்.

மேலும் படிக்க – கோவிட்-19 பற்றிய கேள்வி மற்றும் பதில்கள்..!

இஞ்சி பூண்டு மஞ்சள்

இஞ்சியில் இயற்கையாகவே கிருமி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே இதை நன்கு நசுக்கி அதை நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து மஞ்சள் கலந்து குடிக்கலாம். மேலும் இதன் ருசி அதிகரிப்பதற்கு நீங்கள் சிறிது தேன் அல்லது பணம் வெல்லத்தைப் பயன்படுத்தலாம். பூண்டில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உங்கள் இருமல் பிரச்சினையை தடுத்து அது மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.

எனவே நீங்கள் சாதாரண மஞ்சளைப் பயன்படுத்தி உங்கள் அனைத்து விதமான பிரச்சினையையும் தீர்க்க முடியும். இதில் இயற்கையாகவே கிருமி எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது, எனவே இதனுடன் வீட்டில் உள்ள ஒருசில மூலிகை பொருட்களை பயன்படுத்தி தேநீராக குடிப்பதன் மூலமாக வறட்டு இருமல், ஜலதோஷம் மற்றும் சளி போன்ற அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன