மஞ்சள், வேப்பிலை கலந்த உப்பு நீரை வீட்டைச் சுற்றி தெளியுங்கள்.‌.!

  • by
turmeric, neem and salt are the natural things to fight corona virus

நம் முன்னோர்கள் கிருமிநாசினியாக பயன்படுத்தி வந்த மஞ்சள் நீர் மற்றும் கிருமிகளை கொல்லும் சக்தி கொண்ட வேப்பிலை போன்றவைகளை வைத்து ஏராளமான நாட்டு மருந்தை கண்டுபிடித்து வந்தார்கள். இதை தவிர்த்து உடல் மேல் கிருமிகள் சேராமல் இருப்பதற்காக உப்பைப் பயன்படுத்தி வந்தார்கள், இத்தகைய சிறப்பு வாய்ந்த முன்னோர்களை கொண்ட தமிழர்களாகிய நாம் இந்த வழிகளை பின்தொடர்ந்து கொரோனா வைரஸ் மட்டுமல்லாமல் எந்தக் கிருமிகளும் உங்கள் வீட்டைச் சுற்றி வராமல் தடுக்க முடியும்.

மஞ்சள் நீர்

மஞ்சளில் இருக்கும் மருத்துவ குணங்களை பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள், இது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் உட்புற மற்றும் வெளிப்புற பிரச்சினை என இரண்டையும் குணப்படுத்தும் தன்மையை கொண்டது. இந்த மஞ்சளை நீரில் கலந்து குடிப்பது மூலமாக நமக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல், ஜலதோஷம் போன்ற பிரச்சினைகள் உடனடியாகத் தீரும். இதை தவிர்த்து இதை வீட்டைச்சுற்றி தெளிப்பது மூலமாக கிருமிகள் அனைத்தும் அழியும்.

மேலும் படிக்க – கொரானா பரவலை தடுக்கும் வேம்பு, மஞ்சள் கற்றாலை

வேப்பிலை நீர்

வேப்பிலையில் இருக்கும் கசப்புத்தன்மை எத்தகைய பலம் வாய்ந்த கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது. எனவே உங்கள் வயிற்றில் பூச்சிகள், புழுக்கள் ஏதேனும் இருந்தால் வேப்பிலை கொழுந்தை அப்படியே மென்று சாப்பிடுவதன் மூலமாக அது உடனடியாக அழிந்துவிடும். இத்தகைய தன்மை வாய்ந்த வேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சாதாரணமாக வேப்பிலையை உங்கள் வீட்டின் முன் வைத்தாலே வீட்டிற்குள் எந்த ஒரு கிருமிகளும் நுழையாது இதைத் தவிர்த்து இதை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரில் குளித்து வந்தால் உங்கள் மேல் உள்ள கிருமிகள் அனைத்தும் அழியும்.

உப்பின் மகிமை

உடல்மேல் கிருமிகள் அண்டாமல் இருப்பதற்காக கிருமிநாசினியான உப்பை ஏராளமான தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் கிருமித்தொற்று அதிகளவில் இருக்கும் பகுதிகளில் வேலை செய்பவர்கள் உப்பு இல்லாமல் வேலை செய்யமாட்டார்கள். இத்தனை எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட உப்பு நீரையும் நாம் பயன்படுத்தி கிருமிகளை அழிக்க முடியும்.

மேலும் படிக்க – தீவிர கோவித் தொல்லையை தீர்க்க இன்னும் சில நாட்கள் ..

கலவையின் சிறப்பு

உப்பு, மஞ்சள் மற்றும் வேப்ப விழுதினை ஒன்றாக சேர்த்து நீரில் கலந்து அதை வீடு முழுவதும் தெளிப்பதன் மூலமாக உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் கிருமிகள் அனைத்தும் அழியும். இதை தவிர்த்து பூச்சிகள் மற்றும் கண்களுக்கு தெரியாத சிறிய கிருமிகள் போன்ற அனைத்தும் கொள்ளும் தன்மை இந்த நீருக்கு உண்டு. அனைத்திற்கும் மேலாக கொசுக்களால் ஏற்படும் பிரச்சினையும் இந்த நீர் தடுக்கிறது.

இயற்கை நமக்கு அளித்துள்ள மிகப்பெரிய சொத்தாக கருதப்படுவது இந்த வேப்பிலை, இது இயற்கை மூலமாக எல்லா இடங்களிலும் வளரப்படுகிறது. எனவே இதை சரியாக பயன்படுத்தி உங்கள் வீட்டைச் சுற்றியும் மற்றும் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் கிருமிகளையும் அழியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன