நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி நீர்..!

  • by
tulsi water which increases immunity power

நம் மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுவது மூலிகைகள். அப்படி மூலிகை வகையை சார்ந்ததுதான் துளசி இலை, இதனால் செய்யப்படும் தீர்த்தத்தை தினமும் குடிப்பதன் மூலமாக புற்றுநோய், இருதய நோய், நீரிழிவு பிரச்சினை போன்ற அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கலாம். இதை தவிர்த்து கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாட்டுக்கு துளசி தீர்த்தம் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

துளசி இலையில் இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதனால் புதிதாக உண்டாகும் நோய் தொற்றுகளை ஆரம்பத்தில் அழிக்கும் தன்மை துளசிக்கு உண்டு. இதை தீர்த்தமாக குடிப்பதன் மூலமாக உங்களுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும், எனவே துளசி இலையை இரவு முழுவதும் நீரில் போட்டு நன்கு ஊற வைத்து காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதைப்போல் துளசி இலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பதன் மூலமாக அவ்வப்போது ஏற்படும் சளி பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க – ஈரோட்டின் நிலை நமக்கு வருமா..!

இருதய ஆரோக்கியம்

துளசி இலை உங்கள் இருதயத்தை பாதுகாக்கும், துளசியில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளது. எனவே இது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய தொடர்பான வலிகளை குறைக்கிறது. அதைப்போல் துளசி இலையில் கிருமிகள் எதிர்ப்பு தன்மை இருப்பட்தினால் உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை முழுமையாக குறைக்கிறது.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதுகாப்பு

துளசியில் இருக்கும் எதிர்ப்புத்தன்மை உங்கள் கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. அதேபோல் கல்லீரலில் கொழுப்புகள் உண்டாவதை குறைத்து அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. உடலில் இருக்கும் கால்சியம் மற்றும் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும் இந்த பிரச்சினையை ஆரம்பத்தில் தடுப்பதற்காக நீங்கள் தினமும் துளசி கலந்த நீரை பருக வேண்டும். ஒருவேளை கல்லீரலில் பாதிப்பு அதிகரித்தால் அந்த வலியை குறைப்பதற்கு நீங்கள் அரிசி கலந்த நீரையும் குடிக்கலாம்.

நீரிழிவு பிரச்சனை

துளசியில் இருக்கும் யுஜினல், மெத்தின் யுஜினல் உங்கள் உடலில் இன்சுலின் அளவை சரி சமமாக வைத்துக்கொள்கிறது. அதே போல் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைத்து நீரிழிவு பிரச்சனையை தடுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரை குடிப்பதன் மூலமாக உங்கள் உடலில் பிஎச் அளவு சமமாகும். இதனால் உங்கள் உணவுகளை மிக எளிதில் செரிமான படுத்த துளசி தீர்த்தம் உதவுகிறது.

மேலும் படிக்க – ஊரடங்கு நேரத்தில் உடல்எடை கட்டுப்பாடு அவசியமானது

புற்றுநோய் அபாயம்

தினமும் துளசி இலையை மென்று சாப்பிடுவதன் மூலமாக புற்று நோய்கள் உண்டாகும் செல்களை அழிக்கிறது, அதைத் தவிர்த்து துளசி தீர்த்தத்தை மாலைநேரத்தில் குடிப்பதன் மூலமாக புற்றுநோய் செல்களுக்கு எதிராகப் போராடும். அதிக மன அழுத்தத்தினால் உண்டாகும் தலைவலி, உடல் சோர்வு போன்ற அனைத்தையும் தீர்க்கும் தன்மை துளசி தீர்த்தத்திற்கு உண்டு.

எனவே இயற்கையாகவே ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த துளசியை தினமும் நீரில் கலந்து குடியுங்கள். மிக எளிமையாக வளரக்கூடிய இந்தத் துளசிச் செடியை வீட்டில் வளர்த்து அதன் நன்மைகளை முழுமையாகப் பெற்றிடுங்கள். இந்த வழியை நாமும் பின் தொடர வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் கோவில்களில் கொடுக்கக்கூடிய தீர்த்தத்தில் துளசியை தந்துள்ளார்கள். எனவே அவர்களைப்போல் நாமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு துளசியை பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன