ஆச்சரியமளிக்கும் கொரோனாவுக்கான டிபி மருந்து..!

  • by
tuberculosis medicine for corona virus

டியூபர்குளோசிஸ் என்று அழைக்கப்படும் டிபி இந்தியாவில்  ஏராளமான மக்களை பாதித்துள்ளது. இதற்காக 1949 ஆம் வருடம் டிபி தடுப்பு மருந்தை இந்திய அரசாங்கமே பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இலவசமாக அளித்து வந்தார்கள். சில வருடங்களில் டிபி போன்ற பிரச்சினை முழுமையாக தீர்ந்தாலும் நம்முடைய அரசு இந்த தடுப்பு மருந்தை அளிப்பதை நிறுத்தவில்லை, இதன் மூலமாக இன்று ஆசியாவில் பல நாடுகளில் கொரோனா பரவுதல் குறைந்துள்ளது. டிபி மருந்திற்கும், கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம் இது எப்படி கொரோனா குறைகிறது என்பதை தெளிவாக காணலாம்.

கொன்சாலு ஒட்டாஸு

நியூயார்க் இன்ஸ்டியூட் அண்ட் ரிசர்ச் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் கொன்சாலு ஒட்டாஸு என்பவர் ஆச்சரியமூட்டும் ஒர் தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகில் வளர்ந்த நாட்டில் தான் அதிக பாதிப்பை உண்டாக்கி உள்ளது, இதில் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் தாக்கம் குறைந்துள்ளது, இதற்கான காரணத்தை தெளிவாக விளக்கி உள்ளார் இவர்.

மேலும் படிக்க – லாக் டவுனின் போது பிரிட்ஜில் என்னென்ன வைத்துக் கொள்ளலாம்..!

டியூபர்குளோசிஸ்

டியூபர்குளோசிஸ் என்று அழைக்கப்படும் டிபிக்கான மருந்து 1921ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மருந்து உலகில் உள்ள பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் ஒருகட்டத்தில் டிபி நோய் முழுமையாக அழிந்தது, இதனால் வளர்ந்த நாடுகள் இந்த மருந்து வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம், இல்லையெனில் தவிர்க்கலாம் என்ற கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்கள், இதற்குக் காரணம் இதன் விலை தான். இந்தியாவில் 1949 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மருந்து இடைவிடாமல் நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இலவசமாக அளித்து வருகிறார்கள். இது ஆசியாவில் முழுமையாக இன்றும் நடைமுறையில் இருக்கிறது.

கொரோனா பாதிப்பு குறைவு

டிபிக்கான மருந்தை எந்த நாடு அதிக அளவில் பயன்படுத்துகிறார்களே அந்த நாட்டில் கொரோனா வைரஸின் வீரியம் குறைந்துள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த தடுப்பு மருந்தை அளிக்கிறார்கள், இதனால் இங்கே கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகள் மிகப்பெரிய அளவில் உருவாகாமல் இன்றும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதேபோல் வளர்ந்த நாடாக கருதப்படும் ஈரோப்பில் இருக்கும் ஏராளமான நாடுகளில் இந்த வைரஸ் தொற்று அதிகளவில் பரவி உள்ளது.

மேலும் படிக்க – மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா பயிற்சி..!

ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு

இவரின் இந்த ஆய்வு உலக மக்களை ஆச்சரியப்படுத்தும் உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்த தடுப்பு மருந்தை மீண்டும் உபயோகத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். இது முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, இது உண்மையாக இருந்தால் மீண்டும் டிபி தடுப்பு ஊசியை உலகில் உள்ள அனைவரும் பயன்படுத்துவார்கள்.

இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் இன்னும் சமூகத்தொற்றாக மாறவில்லை. ஆனால் சீனாவில் ஏன் இது  அதிக அளவில் பரவியது, அதற்குக் காரணம் சீனாவில் 1960 முதல் 1970 வரை சீனாவில் போராட்டம் ஒன்று நடந்தது. இதன் மூலமாக அந்தக் காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கு டிபி தடுப்பு மருந்து அளிக்க வில்லை. இதன் மூலமாகவே அக்காலத்தில் பிறந்தவர்கள் மூலமாக வைரஸ் பரவுதல் அதிகரித்திருக்கலாம் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலக மக்கள் எல்லோரையும் பாதித்துள்ளது, ஆனால் இதன் பரவல் மட்டும் ஒரு சில நாடுகளில் குறைந்துள்ளது, இருந்தாலும் இதை எளிதில் எடுத்துக் கொள்ளாமல் எனக்கு எதிர்ப்புத் தன்மை அதிகமாக உள்ளது என்ற கர்வத்தில் வெளியே சுற்றினால் உங்களை உங்கள் குடும்பத்தார் வீட்டில் புகைப்படமாக தான் பார்ப்பார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன