கல்லாக மாறும் மரங்கள்!!!

  • by
tress which are changing into stones

மரம் மனிதனுக்கு பலவகைகளில் பயன்படுகிறது. வெயிலின் போது நிழல் தருகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க காரணமாகிறது. பசிக்கும்போது புசிக்க கனிகளைத் தருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த மரத்தின் மூலம் நமக்கு ஏராளமான பயன்கள் இருக்கிறது.

இத்தனை பயன்களைத் தரும் இந்த மரங்கள் கல்லாக மாறுகிறது என்றால் நம்ப முடிகிறதா. இந்த அதிசயம் நம் தமிழகத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மரங்கள் எப்படி கல்லாக மாறுகிறது? மேலும் இந்த மரங்கள் தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது என்பதை பற்றி நான் உங்களுக்குக் கூறுகிறேன். அதிசயமும் ஆச்சரியமும் நிறைந்து தானே வாழ்க்கை காணப்படுகிறது. 

மேலும் படிக்க – நோய்களை குணமாக்கும் தன்வந்தரி மந்திரம்!

கல் மரம் 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை எனும் ஊரில் இந்த அதிசய மரம் அமைந்துள்ளது. ஒரு பூங்காவில் காணப்படும் இந்த மரம் கல்லாக மாறுவது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். இந்த பூங்காவில் கல்லாக மாறிய நிறைய மரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மரங்கள் பல கோடி ஆண்டுகள் பழமையானதாக காணப்படுகிறது. இங்கு இந்திய புவியியல் ஆய்வுத்துறை இந்த மரங்களை பாதுகாப்பதற்காகவே பூங்கா ஒன்றை அமைத்து பாதுகாத்து வருகிறது. சுமார் 247 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு 200க்கும் அதிகமான கல் மரங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ஒவ்வொரு மரமும் 3 முதல் 15 மீட்டர் வரை நீளம் உடையதாக இருக்கிறது. 15 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

 இந்த கல் மரங்களில் சில மரங்கள் படுக்கை வாக்கில் இந்த பூங்காவில் காணப்படுகின்றன. சில மரங்கள் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சாய்ந்து கிடக்கும் பல மரங்களும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து வந்ததாக இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர். அதற்கு சான்றாக இங்கு சாய்ந்து கிடக்கும் மரங்கள் உள்ளன. இங்க சாய்ந்த நிலையில் இருக்கும் மரங்கள் கிளைகள் இல்லாத காணப்படுகின்றன. ஆனால் இந்த மரங்கள் வேறு எங்கேனும் இருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.. இந்த மரங்களுக்கு வேர் அல்லது கிளைகள் கிடையாது. இந்த மரங்களில் பட்டை போன்ற அமைப்புகளும் வட்ட வடிவிலான வளையங்களும் மற்றும் கணுக்கள் ஆகியவை காணப்படுகின்றன. 

மேலும் படிக்க – ஒரே கல்லை குடைந்து கட்டப்பட்டிருக்கும் கோவில் !!!

சிலிகா மணல் 

மேலும் இங்கு ஆமணக்கு வகை மரங்கள் மற்றும் புளியமர குடும்பத்தைச் சேர்ந்த மரங்களும் காணப்படுகின்றன. இந்த மரங்களில் காணப்படும் சுருள் வடிவிலான வளைவை கொண்டு இந்த கல் மரங்களின் வயதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர். இந்த மரத்தில் இருக்கும் செல் போன்ற உயிர் உள்ள பகுதிகளில் சிலிக்கா என்ற மணல் வகை புகுந்து இந்த மரங்களை கற்களாக மாற்றுவதாக தெரியவருகிறது. ஆனால் நாம் இந்த மரங்களைப் பார்க்கும் பொழுது ஒரு சாதாரண மரம் எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது. இது போன்று பல்வேறு இடங்களில் கல் வகை மரங்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த கல் பூங்காவிற்கு கல்மரப் பூங்கா என்று பெயரிட்டு இருக்கின்றனர். இது போன்று நம் நாட்டில் பல வகையான அதிசயங்கள் நிறைந்து இருக்கின்றன. அவற்றை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன