மாடர் மங்கையரே லெகிங்ஸின் டிரெண்டிங் பார்போமா

  • by

லெகிங்ஸ் இன்றைய  பெண்களுக்கு மிகவும் பொருத்தமாக அணிந்து கொள்ள ஏதுவாகவும் இருக்கின்றது.  இத்தகைய செளகர்யமான உடை என்றாலும் லெகிங்ஸ் அணியும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியது சில உள்ளது.  லெகிங்கஸ் என்னதான் அணிய செயல்பட சிறப்பானதாக இருந்தாலும் அவற்றில் நாம் கண்காணிக்க வேண்டியது சில உள்ளன. 

 லெகிங்ஸ் அணிபவர்கள் எல்லோருக்கும் ஒன்றுபோல் அனைத்தும் அமைவதில்லை. லெகிங்கஸ் வாழ்கையில் பல புதுமையான கம்பார்டபிள்  நிறைந்த ஒன்றாகும். லெகிங்க்ஸ் அணிபவர்கள் சிலர் கால் முட்டி மற்றும் இடுப்பெலும்பு துருத்திக்கொண்டிருக்கும் அளவுக்கு ஒல்லியாக இருப்பவர்கள் லெகிங்ஸ் பயன்படுத்தும்போது, இன்னும் ஒல்லியாகத் லுக் காண்பிக்கும்.  ஆகையால் நீங்கள் லெகிங்ஸைத் தவிர்ப்பது நல்லது.

லெகிங்ஸ்

ஜெகிங்க்ஸ்: 

ஒல்லியாக இருக்கும் உங்களுக்கு ஜெகிங்ஸ் அல்லது நேரோ ஃபிட் பேன்ட்ஸ் பயன்படுத்தலாம். ஒல்லியான கால்களாக இருக்கும் உங்களுக்கு  ஜெகிங்க்ஸ் மெட்டீரியல் சற்றே தடிமனாக இருப்பதால் ஒல்லியான தோற்றம் தெரியாமல் மறைப்பதுடன் டிரெண்டியாகவும் கம்பெர்டபிளாக இருக்கும். 

ஜெகிங்க்ஸ்  ஒல்லியானவர்களுக்காக டிசைன் செய்யப்பட்டதுதான் லெகிங்ஸ் எனச் சொல்லும் அளவுக்கு ஒல்லியாக உடல் அமைப்பு கொண்டவர்களுக்கு  இது கச்சிதமாகப் பொருந்தும். ஆங்க்கிள் லெங்த், ஃபுல் லெங்த் என எந்த வடிவத்திலும், காட்டன், லைக்ரா, பனியன் க்ளாத் என எந்த மெட்டீரியலிலும் நீங்கள் லெகிங்ஸ் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: மாடர்ன் உலகத்தின் மதிப்புமிக்கது கைதறி உடைகள்!

இதனை  உங்களுக்குப் பொருந்தக்கூடிய சரியான அளவில் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும். மேலும் இதனை அணிய சற்றே கூடுதல் அல்லது குறைவான சைஸ் லெகிங்ஸை அணிந்தால் அடுத்தவர் கண்களை உறுத்துவது  அதனால் கவனமாக இருங்கள். 

லெகிங்ஸ்

பூசிய உடல்வாகு உள்ளவர்கள் :

குண்டாக இல்லை ஒல்லியாக  ஆனால் உங்கள் உடல்வாகு ஆங்காங்கே தொய்வாக இருக்கும் தசைப்பகுதிகள்தான் எனில்  உங்களது முக்கியப் பிரச்னை. நீங்கள் லெகிங்ஸ் அணியும்போது எக்ஸ்ட்ரா ஜி.எஸ்.எம் Grams per Square Meter உள்ள மெட்டீரியலைத் தேர்வு இருந்தால்  நன்றாக இருக்கும். சற்று தடிமனாக இருக்கும் மெட்டீரியலில் உள்ள லெகிங்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் படிக்க:

 வாங்கும் லெகிங்ஸில் உள்ள லேபிளில் காட்டன் மற்றும் லைக்ராவின் அளவுகள் சதவிகிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் காட்டனின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் லெகிங்ஸ் தடிமனாக இருக்கும்; லைக்ராவின் சதவிகிதம் அதிகமாக இருக்கும் லெகிங்ஸ் மிக மெல்லியதாகவும் ட்ரான்ஸ்பரன்ட்டாகவும் இருக்கும். அதைப் பயன்படுத்தும்போது தசைப்பகுதியின் தொய்வு வெளிப்படையாகத் தெரிந்து, காண்பவர்களை முகம் சுளிக்க வைக்கும்.

அனைத்து உள்ளாடைக் கடைகளிலும் டம்மி டக் பேன்டி கிடைக்கிறது. இதை அணிந்த பின் லெகிங்ஸ் அணிந்தால் தொப்பையை மறைக்கலாம்.

இது தடிமனாக இருப்பதாலும், உடலை இறுக்கிப் பிடிப்பதாலும் தொய்வான தசைப்பகுதியைச் சற்று மறைத்துக் காட்டும். ஆனால், இது மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதால் நாள் முழுவதும் அணிவது அவ்வளவு சிறந்ததாக இருக்காது. 

 நீங்கள்க்ள் அணியும் மேக்கப்பிலிருந்து உடைவரை நியூடு கலர் டிரெண்டில் இருந்தாலும் நியூடு கலர் லெகிங்ஸ் அணிந்திருக்கும் நபர்களைப் பார்க்கும்போது முகம் சுளிக்கும் சிலர் இருப்பார்கள். அது ஒரு நல்ல லுக்கை  கொடுக்காது இது பேன்ட் அணியாதது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக, பேஜ், ஸ்கின் கலர், வொயிட் கலர் போன்ற லெகிங்ஸுடன் நீளம் குறைவான டாப்ஸ் அணிந்தால் காண்பவர்களை வேறுவிதமாக காட்டும். 

ஒருவேளை டாப்ஸுக்கு நியூடு கலர் பாட்டம் அணிய வேண்டிய தேவை இருப்பவர்கள் நேரோ பேன்ட், ஜெகிங்ஸ், கேதரிங் பேன்ட், பட்டியாலா பேன்ட் என்று அணிவது சிறப்பு.

நமது உடை தேர்வில் நியூடு கலர் லெகிங்ஸுடன் அனார்கலி, பாகிஸ்தானி குர்தா போன்ற நீளமான டாப்ஸை அணிவது சிறப்பான ஒரு பங்களிப்பை தரும். சைடு ஸ்லிட் குறைவாக இருக்கும் டாப்ஸைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

லெகிங்ஸ்

உடைகளின் அணிவகுப்பு:

 ஆனால் இதுவே ஒல்லியாக இருப்பவர்கள் நீளமான, சற்று லூஸ் ஃபிட் டாப்ஸ் அணிந்தால், லெகிங்ஸ் மூலம் ஒல்லியான கால்கள் வெளியே தெரியாமல் இருக்கும். சைடு ஸ்லிட்டும் நீளமாக இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். 

உடலின் ஒரு சில முதல் பகுதி நார்மலாகவும், இரண்டாம் பகுதி சற்று பெருத்தும் காணப்படும் ஆப்பிள் ஷேப் உடல்வாகு உள்ளவர்கள், மார்புப்பகுதிவரை ஃபிட்டாகவும், அதற்குக் கீழ் லூஸாகவும் உள்ள அனார்கலி வகை டாப்ஸ் அணியலாம். இது பெருத்த வயறு மற்றும் தொடைகளின் வடிவத்தை மறைத்துவிடும்.

சாதரண உடலமைப்பைக் கொண்ட நீங்கள், ஆங்க்கிள் லெங்த் லெகிங்ஸ், ஃபுல் லெங்த் லெகிங்ஸ் என அனைத்தையும் அணியலாம் என்பதுடன், கால்கள் தெரிவதுபோன்ற டாப்ஸை தைரியமாக அணியலாம். நீளமான சைடு ஸ்லிட்களுக்கும் நோ சொல்லுங்கள்.

 நாம் அணியும் லெகிங்ஸுடன் வெஸ்டர்ன் டாப்ஸ் அணியும்போது காலணிகள் அதற்கேற்றவாறு இருக்க வேண்டும். லெக்கின்ஸ் அணியும் பொழுது ஸ்னீக்கர்ஸ், பாலேரினா, ஃபிளாட்ஸ், வெட்ஜஸ் காலணிகளை அணிவது சிறப்பாக அமைந்து நல்ல லுக்கை தரும். மேலும் எத்னிக் டாப்ஸ் அணியும்போது சாண்டல், கோலாப்புரி, வெட்ஜெஸ், பாயின்டட் ஹீல்ஸ் போன்ற காலணிகளை அணிவது சிறப்பு தரும் ஒன்றாகும்.

மேலும் படிக்க: பெண்களின் ஆடை அழகோவிய கலெக்சன்கள் இதோ!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன