காதலர் தினத்திற்கான ட்ரெண்டிங் பரிசுப் பொருட்கள்!

  • by
trending gift items to gift your valentine

தினம் தினம் கொண்டாட வேண்டிய காதலர் தினத்தை வருடத்தில் ஒரு தினம்
மட்டுமே கொண்டாடுகிறோம்” என்ற வருத்தத்தில் இருக்கும் காதலர்களே
உங்கள் அன்பானவர்களுக்கான காதலர் தின பரிசை வாங்கி விட்டீர்களா???
அன்பளிப்பு கொடுத்தால் தான் உண்மை காதல் என்று அர்த்தம் இல்லை. வெறும்
அன்பு மட்டும் இருந்தால் போதும் என்று கூறுவதெல்லாம் உதட்டளவில்
இருந்தாலும் மனமானது சர்ப்ரைஸ் பரிசுப் பொருளுக்காக ஏங்கிக் கொண்டுதான்
தான் இருக்கும். நம் காதலன், காதலிக்கு கொடுக்கும் அன்பளிப்பு அது
உணர்வுபூர்வமாகவும் அடிக்கடி நம்மை நினைவுபடுத்த கூடியதாகவும் இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும்.


உணர்வுபூர்வமான அன்பளிப்புகள் 


செக்புக் போலவே காதலிலும் ஒரு லவ் செக் புக் இப்பொழுது
ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதில் மொத்தம் 12 செக்குகள் உள்ளன.  வருடத்தின்
ஒவ்வொரு மாதமும் ஒரு அன்பான உறுதிமொழியை நம் காதலிக்கு இந்த
செக்கின் மூலம் எழுதிக் கொடுத்தால் அது அவர்களை மிகவும் கவரும். நமக்கு நெருக்கமானவர்கள் தரும் சிறு அன்பளிப்பு கூட பொக்கிஷமாக தான் தெரியும்.

மேலும் படிக்க – கலைகட்டும் காதலர் தின முன்னோட்ட ரோஸ் டே

 QR Code, Mirror வாழ்த்து அட்டை


வாழ்த்து அட்டை கொடுப்பது இந்த காலத்து காதலர்களுக்கு ஒரு பெரிய
விஷயமாக இருக்காது. ஆனால் 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் காதல்
என்றாலே அவர்களோடு இணைந்து இருப்பது இந்த வாழ்த்து அட்டைகளும் தான்.
இப்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிகமாக வாழ்த்துக்கள்
பரிமாறப்படுவதால் இந்த வாழ்த்து அட்டைகளுக்கு வேலையில்லாமல்
போய்விட்டது. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமானது . வாழ்த்து அட்டையின்
முன்புறம் ஒரு QR Code இருக்கும். அதை மொபைலில் மூலம் ஸ்கேன் செய்தால் உங்களுக்காக ஒரு கேள்வி காத்திருக்கிறது, அதற்கான பதில் ஆமாம் என்று
மட்டும் தான் சொல்லவேண்டும் என்று இருக்கிறது. அதன்பின்  உள்ளிருக்கும் QR
Code யை ஸ்கேன் செய்தால் நீங்கள் தான் என் அன்பிற்குரிய காதலனா? அல்லது
காதலியா?என்ற கேள்வி வரும். நவீனகாலத்தில் காதல் சொல்ல இந்த கியூ ஆர்
வாழ்த்து அட்டை நிச்சயம் கை கொடுக்கும்.


இதேபோல் இதிலிருக்கும் மேஜிக் மிரர் அட்டை உள்ளே திறந்து பார்த்தால்
பார்பவர்களின் முகம் தெரியுமாறு கண்ணாடி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்
முன்புறம் என் அன்புக்குரிய வர்களின் முகம் உள்ளே இருக்கிறது என்று
எழுதப்பட்டிருக்கிறது .


ஆண் பெண் இருவரையும் கவரும் அன்பளிப்புக்கள்


டைட்டானிக் படத்தில் வரும் கதாநாயகியை நாம் யாரும் மறந்திருக்க
மாட்டோம். அதிலும் அவர் அணிந்து இருந்த அந்த வைர நெக்லஸ் இன்னுமும்
கண் முன் வந்து போகிறது.இப்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ள
நெக்லஸை நம் காதலிக்கும் வாங்கிக் கொடுத்து அவர்களை டைட்டானிக்.

மேலும் படிக்க – காதல் திருமணம் செய்ய வீட்டில் சுமார்டா பேசுங்க!

ஹீரோயினியாக அழகு பார்க்கலாம் நீங்கள்.

அடுத்ததாக ஆண்களை கவரும் முக்கிய பரிசுப்பொருள் மினி மோட்டர் பைக்.
பைக் பிடிக் காத ஆண்களே இருக்க மாட்டார்கள். அதுவும் லுகார்டி,KTM போன்ற
பைக்குகள் ஆண்களின் கனவாகவே இருக்கும். அதை நிஜத்தில் நம்மால் வாங்கி
கொடுக்க முடியாவிட்டாலும், அதன் மினி சைஸ் மாடல் ஆன்லைனில்
விற்பனை செய்யப்படுகிறது. பார்ப்பதற்கு உண்மையான பைக் போலவே
தோற்றமளிக்கிறது இதை உங்கள் காதலனுக்கு வாங்கி கொடுத்தீர்கள் என்றால்
பொக்கிஷமாக பார்த்துக்கொள்வார்கள்.


ரொமான்டிக் அன்பளிப்புகள்

வீட்டை அழகுபடுத்தும் விண்ட் செயின்கள் அதிகளவு நேர்மறை எண்ணங்களை
நம் மனதில் ஏற்படுத்தும். அதுவும் நமக்கு பிடித்தவர்கள் வாங்கி கொடுத்தால்
இன்னும்  சிறப்பானதாக இருக்கும். இதில் மொத்தம் 11 இதய வடிவிலான
பொருள், ஒரு மெலிதான செயின் னால் இணைக்கப்பட்டுள்ளது. காற்று அடிக்கும்
போதெல்லாம் அதிலிருந்து வரும் ஓசை நம் அன்பானவர்களை நமக்கு
நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

காதல் என்றால் ரோஜா இல்லாமலா? காதலர் தினத்தன்று கொடுக்கும் ரோஜா
எவ்வளவு பத்திரப்படுத்தி வைத்து இருந்தாலும் ஒரு சில நாட்களில் வாடிவிடும். ஆனால் இப்போது நீங்கள் பரிசளிக்கும் ரோஜா பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.
வாடவே வாடாது. அதைத் திறந்து பார்த்தாள் பூவுக்குள் ஒளிந்திருக்கும்
அதிசயத்தை போல் நிக்கல் ரோடியம் முலாம் பூசப்பட்ட மோதிரம் உள்ளே
வைக்கப்பட்டுள்ளது. ஆண் பெண் என இருபாலருக்கும் மோதிரங்கள் உள்ளன.
அவை அட்ஜஸ்ட் செய்யப்படும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால்
அனைவருக்கும் பொருந்தும். இது ஆறு மாத வாரண்டி உடன் கூட இருக்கிறது .

மேலும் படிக்க – இமைகளை நோக்கி இதயத்திலிருந்து சொல்லவும் காதலை


ஒளிரும் அன்பளிப்புகள்


24k ரோஜா இப்பொழுது அதிக ட்ரெண்டிங்கில் உள்ளது. 24 கேரட் என்றதும்
தங்கம் என்று நினைத்து விடாதீர்கள். இது பார்ப்பதற்கு தங்க இலைகளைக்
கொண்டு பளபளப்பாக மின்னுகிறது. இதில் இருக்கும் எல்இடி பல்புகள் நம்
ரோசை அசைத்தாலே பல்வேறு வண்ணங்களில் கண்ணை கவரும் வண்ணம்
மின்னுகிறது. இதனால்தான் இதற்கு 24 கேரட் ரோஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
பார்ப்பதற்கு வைர மோதிரம் போல் காட்சியளிக்கும் இந்த எல்இடி லைட் நாம்
இரு வண்ணங்களில் கிடைக்கிறது. இதை ஆன் செய்தால் மட்டுமே அதன்
மேற்புறத்தில் ஐ லவ் யூ என்று எழுதப்பட்டிருப்பது அழகாக தெரியும். இதை
உங்கள் அன்பானவர்களுக்கு வாங்கி கொடுத்தால்  இருளிலும் உங்கள் காதல் லைட் மூலமாக ஒளிரும்.

இந்த பரிசுப்பொருளை காதலன் காதலி மட்டுமல்ல கணவன் மனைவி கூட
வாங்கிக் கொடுக்கலாம். பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக அழகாக வடிவமைக்கப்
பட்டிருக்கும் இந்த சிலையுடன் ஆறு செயற்கை ரோஜாக்கள்
கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விலையும் மிக குறைவு தான்.


நாம் இதுவரை பார்த்த அனைத்து பரிசு பொருட்களுமே நீங்கள் தேடி அலைய
வேண்டியதில்லை. ஆன்லைனில் ஆர்டர் செய்தீர்கள் என்றால் அதுவே உங்கள்
வீடு தேடி வரும் உங்களுக்கு பிரியமானவர்களுக்கு வாங்கிக் கொடுத்து காதலர்
தினத்தை சந்தோஷமாக கொண்டாடி மகிழுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன