ஜலதோஷத்தை போக்கும் பாட்டி வைத்தியம்..!

  • by
traditional treatment to cure cold and cough

நமது முன்னோர்கள் நமக்கு ஏராளமான மருத்துவ குறிப்புகளை அளித்துள்ளார்கள். அதை அப்படியே பின் தொடர்ந்தால் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை முழுமையாக தடுக்க முடியும். நம்முடைய வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே அவர்கள் எல்லாவித உடல் பிரச்சினைகளையும் தீர்த்து வந்தார்கள். உலகம் முழுக்க இருக்கும் ஏராளமான மக்கள் மருத்துவத்திற்கு முதலில் பயன்படுத்துவது பாட்டி வைத்திய முறைதான். எனவே இந்த முறைகளைக் கொண்டு நாம் எப்படி ஜலதோஷம் மற்றும் சளி போன்ற பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதை காணலாம்.

கலவை கசாயம்

உங்களுக்கு சளித்தொல்லை இருக்கிறது என்பதை உணர்ந்தால் உடனே இஞ்சி, எலுமிச்சை மற்றும் மஞ்சள் கொண்டு கசாயம் ஒன்றை உருவாக்கி குடியுங்கள். இதன் மூலமாக ஜலதோஷ பிரச்சினை உடனடியாக தீரும். அதேபோல் மிளகு மற்றும் சீரகத்தை கொண்டு நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். எனவே கசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள், இஞ்சி போன்றவைகளை போட்டு நன்கு கொதிக்க விட்டு அதில் எலுமிச்சை சாறு மற்றும் மிளகு பொடி மற்றும் சீரகத்தை போட்டு மேலும் சில நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். இதை காலையில் குடிப்பதன் மூலமாக உங்கள் ஜலதோஷ பிரச்சினை முழுமையாகத் தீரும்.

மேலும் படிக்க – வியாதிகளை தீர்க்கும் சக்தி கருஞ்சீரகத்திற்க்கு உண்டு..!

வெங்காயம் மற்றும் தேன்

ஜலதோஷ பிரச்சினையை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை வெங்காயத்திற்கு உண்டு. எனவே இதை அதிக அளவிலான இரும்பல் மருந்துகளில் சேர்க்கிறார்கள், வெங்காயத்தை நீரில் நன்கு கொதிக்க வைத்து பின்பு அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமாக உங்களுக்கு சளி பிரச்சனையை உண்டாக்கும் கிருமிகள் அனைத்தும் அழியும். அதேபோல் இந்த கசாயத்தை அனைத்து விதமான தொண்டை பிரச்சினைகளுக்கும் குடிக்கலாம்.

இஞ்சி, மஞ்சள் தேநீர்

சாதாரண ஜலதோஷம் உங்களை மிக மோசமான நிலைக்கு தள்ள கூடியது. எனவே அதை ஆரம்பத்தில் கண்டறிந்து அழிப்பதற்க்கு பாட்டி வைத்தியம் உதவுகிறது. எனவே இஞ்சியை சிறிதாக நறுக்கிக் கொண்டு அதை 15 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து அதற்கு இணையான மஞ்சளை கலந்து குடிக்கவேண்டும். தேவைப்பட்டால் சீரகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலமாக உங்கள் வயிற்றில் இருக்கும் அசௌகரியங்கள் அனைத்தும் குறையும்.

சீனா இஞ்சி சூப்

தமிழர்கள் எப்படி பழமை வாய்ந்தவர்களே அதேபோல் சீனர்களும் மிகப் பழமையானவர்கள். அக்காலத்தில் ஜலதோஷம் போன்ற பிரச்சினையை இஞ்சை கொண்டு அழத்து வந்தார்கள். நாம் எப்படி சிக்கன் போன்றவைகள் மூலமாக சூப் செய்கிறோமோ அதேபோல இஞ்சி மட்டுமே வைத்து அவர்கள் சூப் செய்து அருந்தி வந்தார்கள்.

மேலும் படிக்க – தினமும் கம்பு சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்..!

மிளகு மற்றும் பூண்டு

பூண்டை நன்கு நசுக்கிக் கொண்டு அதை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இரண்டு முழுமையான எலுமிச்சை சாறுகளை அதில் பிழிந்து குடிப்பதன் மூலமாக தொண்டைகளில் தொற்றுக்கள் ஏதும் ஏற்படாது. அதே போல் வைட்டமின் சி அதிகமாக உள்ள ஆரஞ்சு பழச்சாறில் மிளகுப் பொடியை சேர்த்து குடிக்க வேண்டும். இதன் மூலமாகவும் தொன்டைகளில் ஜலதோஷம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் கிருமிகள் தங்கம்மல் அழிந்துவிடும்.

உப்பு, கிராம்பு மற்றும் சிவப்பு மிளகாயை கொண்டும் நம்மால் ஜலதோஷ பிரச்சனையை தடுக்க முடியும். இது அனைத்திற்க்கும் மிக முக்கியமாக அமைவது நம்முடைய சுவாசத்தில் ஏற்படும் பாதிப்புகள் தான், இதன் மூலமாக கிருமிகள் உள்நுழைகிறது. இதைத் தவிர்த்து சிறிய தூசிகள் மூலமாகவும் நமக்கு சளி போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. எனவே இதைத் தடுப்பதற்கு வீட்டில் பயன்படுத்தும் மூலிகை பொருட்களை கொண்டு இது போன்ற தேநீர் அல்லது கசாயங்களை செய்து அருந்தலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன