ஆஸ்துமாவை  அடியோடு அழிக்கும் பாரம்பரிய பாட்டி வைத்தியம் இதுதாங்க……!

  • by
traditional granny medicine to eradicate asthma

குழந்தைகள் பள்ளிக்கு புத்தகம் சாப்பாடு ஸ்நெக்ஸ் என்ன அத்தியாவசியமான அனைத்தையும் எடுத்துச் செல்வது போல இப்போதெல்லாம் பல குழந்தைகளின் கைகளில் இருப்பது இன்ஹேலர். 80 வயதை தாண்டி வரும் இளைப்பு என்ற ஆஸ்துமா இன்று பிறந்த குழந்தைக்கே வந்துவிடுகிறது. காரணம் பற்றி எரியும் நெருப்பாய் பரவிவரும் மாசுபாடு தான். பெருகிவரும் தொழில் நிறுவனங்களும் நகரமயமாக்கல் தான் இதற்கு  மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆஸ்துமாவை ஏற்படுத்துவதற்கு சில மரபணு காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

ஆஸ்துமாவின் அறிகுறிகள்

மூச்சு வாங்குவது எல்லாம் ஆஸ்துமாவில் அடங்காது. வயிற்று பகுதியில் உள்ள சதைகள் உள்வாங்கும் நெஞ்சுக்கூடு மேலே எழும்பியும் சித்திரவதைகளை அனுபவிக்கும் கொடுமை தான் ஆஸ்துமா. இது வேதனையின் உச்ச கட்டமாக இருக்கிறது. நெபுலெசரும், இன்ஹேலரும் இந்த அவஸ்தையை கொஞ்சம் குறைத்து வைக்கின்றன. ஆனால் இவை இரண்டுமே இதற்கான தீர்வாக அமையாது. பாரம்பரிய உணவுகளும் நம் மனமும் ஒழுங்காக சீராக உடலினுள் சென்றால் ஆஸ்துமாவை முற்றிலும் அழிக்க முடியும்.

மேலும் படிக்க – கரிசலாங்கண்ணியில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

கோழையை  விரட்டும் திப்பிலி

சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றுமே நம் பாரம்பரிய உணவுகளில் நெடுங்காலமாக பல நோய்களில் இருந்து நம்மை காத்து வந்த அருமருந்து பொருட்களாகும். அதிலும் திப்பிலி பழங்காலம் தொட்டு ஆஸ்துமாவுக்கு மிகச் சிறந்த ஆன்டி-பயாடிக் போல செயல்படுகிறது. இது நெஞ்சிலிருக்கும் சளியை விலக்கி மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமத்தை இலகுவாக்குகிறது.

பனிக்காலத்தில் ஆஸ்துமா காரர்களுக்கு வரும் சளியை தடுக்க மிளகு ரசம் வைப்பது போல் திப்பிலி ரசம் வைத்து கொடுக்கலாம். நுரையீரலில் அதிகமாக இருக்கும் சளியை வெளியேற்றி விடுகிறது. இந்த திப்பிலியில் உள்ள சத்துக்கள் கோழையின் பெருக்கத்தை நிறுத்துகின்றன என்று international journal of pharmacology போன்ற பல மருத்துவ கட்டுரைகள் உறுதிப்படுத்துகின்றன.

ஆஸ்துமாகாரர்கள் தவிர்க்க வேண்டிய உணவு 

ஆஸ்துமா உள்ளவர்கள் கண்டிப்பாக பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பவர்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி பாலில் மிளகு மஞ்சள் தூள் பனங்கற்கண்டு சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். புளித்த உணவுகள் ,புளித்த பழங்களான எலுமிச்சை,கமலா ஆரஞ்சு போன்ற முலாம்பழம் ,சீதா, தர்பூசணி போன்ற பழங்களை ஆரம்பத்திலிருந்தே தவிர்ப்பது நல்லது.நுரையீரலில் உள்ள நீரின் கப தன்மையை அதிகரிக்கிறது இவ்வகையான பழங்கள்.  

இன்ஹேலருக்கு மாற்றாக இதை செய்யலாம் 

இன்று குழந்தைகள் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அத்தியாவசிய பொருளாகவே இருக்கிறது நெபுலேசர் . இதை விட சிறப்பானதாக இப்பொழுது இன்ஹேலரை கருதுகின்றனர். ஆனால் இதையே நம் பாரம்பரிய முறையில் வேது பிடித்தல், ஆவி பிடிப்பது என்று கூறுகிறார்கள். ஆஸ்துமா மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் உள்ள குழந்தைகள் ஆரம்பக் காலங்களில் ஆவிபிடிக்க வைப்பதால் இளைப்பு வராமல் தடுக்க முடியும். ஆவி பிடிப்பதற்கான நீரினில் இயற்கை ஆன்டி செப்டிக் ஆன நொச்சி தலையும், யூகாலிப்டஸ் மஞ்சள்தூள் கலந்து பயன்படுத்தினால் ஆஸ்துமா விரைவில் குணமடையும்.

ஆஸ்துமாவை விரட்டும் பாரம்பரிய மூலிகைகள்

ஆஸ்துமாவிற்கு  நவீன மருத்துவத்தில் தியோ ஃபிலின் என்ற தேயிலையில் இருந்து எடுக்கப்படும் மருந்து தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சளியை விரட்டி அடிப்பதற்கு ஆடாதொடை இலைச்சாறு அதிக பயனளிக்கும். கரிசலாங்கண்ணிக் கீரையையும், முசுமுசுக்கை போட்டு தேநீர் அருந்துவதும். கொத்தமல்லி இலைக்கு பதிலாக தூதுவளையை ரசத்தில் போட்டு சாப்பிடுவதும் ஆஸ்துமாவை அறவே அழிக்கும் அருமருந்துகள்.

பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராமல் இருக்க வேலிப்பருத்தி எண்ணை அல்லது அதனுடைய சாற்றை கொடுத்தால் சளியானது மலத்தை இளகச் செய்து வெளியேற்றப்படுகிறது. கடுக்காயை பொடிசெய்து செக்கில் ஆட்டிய விளக்கெண்ணெயுடன் வதக்கி இரவு படுக்கும் முன்னர் ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிட்டுவந்தால் செரிமானம் அதிகமாவதுடன் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழலில் ஒட்டிக்கொண்டிருக்கும் சளியை கூட வெளியேற்றிவிடுகிறது.இந்த மூலிகைகள்.

மேலும் படிக்க – நெல்லிக்காய் மற்றும் திருபல பொடியை சாப்பிட்டு நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்..!

ஆஸ்துமா இருக்கும்பொழுது உடற்பயிற்சி செய்யலாமா?

இன்று பள்ளிகளில் பெரும்பாலான குழந்தைகள் விளையாடாமல் மரத்தடியில் ஒதுங்கி உட்கார்ந்து இருப்பதற்கு காரணம் இந்த ஆஸ்துமா தான். உடற்பயிற்சியால் ஏற்படும் ஆஸ்துமாவில் மட்டும்தான் அதிக உடற்பயிற்சி செய்யாமல் விளையாடாமல் தவிர்க்க வேண்டும். மற்ற வகை ஆஸ்துமாகாரர்கள் விளையாட விடாமல் தடுப்பது நல்லது அல்ல. யோகா பயிற்சி, உடற்பயிற்சி நுரையீரலின் செயல்படும் திறனை அதிகரிக்க உதவும். கபாலபதி எனும் சக்தி வாய்ந்த மூச்சுப் பயிற்சி நுரையீரல் திறனை அதிகரிக்கிறது என்கிறது அறிவியல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன