குழந்தைகளுக்கான பாரம்பரிய கஞ்சி வகைகள்..!

  • by
traditional food items to feed for your children

நாம் அன்றாடம் உண்ணும் தோசை, இட்லியில், சத்துமாவில் எல்லாம் வாசம் போகாமல் இருக்க ரசாயனம் எதுவும் சேர்ப்பது இல்லை. அதற்கென தனிப்பட்ட வெண்ணிலா வாசம் ,சாக்லேட் வாசம், ஸ்டாபெர்ரி வாசம் என எந்த வாசனை திரவியங்களையும் சேர்ப்பது இல்லை. கெட்டுப் போகாமலிருக்க ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் சேர்ப்பது இல்லை. பொலபொலவென உதிர வேண்டும் என ரசாயனங்களும் சேர்ப்பது இல்லை. நீர்த்துவம் வந்துவிடக் கூடாது என நீர் உரிஞ்சும் வாயுக்கள் எவையும் சேர்க்கப்படுவது இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக 2ஸ்பூன் உணவு உண்டால் போதும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அதில் அடங்கி விடும் என்று கூறுவதும் இல்லை .

ஆனால் இவை அனைத்துமே சொல்லப்படும் ஒரு வகை உணவை தான் நாம் நம் குழந்தைகளுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். இதனால் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்க போவதில்லை. நம் பாரம்பரிய தானியங்களை பயன்படுத்தி கொடுக்கப்படும் தயாரிக்கப்படும் கஞ்சி களை குழந்தைகளுக்கு கொடுத்து நம் முன்னோர்களைப் போல ஆரோக்கியமாக வாழ கற்று கொடுப்போம்.

ஊசி கோதுமை கஞ்சி செய்முறை;

நார்ச்சத்து அதிகம் உள்ள ஒரு உணவு வகை கோதுமை. இதை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான புரதம் , கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள் அதிகமாக கிடைப்பது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இந்த கஞ்சி ஒரு தீர்வாக அமையும். முதல் நாள் இரவே இந்த ஊசி கோதுமையை தேவையான அளவு நீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் நன்கு அலசிய பின்பு மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்பு வாணலியில் போட்டு கூழாக காய்ச்சி கொள்ள வேண்டும். சுவைக்காக சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். இதில் சேர்க்கப்படும் பனைவெல்லம் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளும்.

கேழ்வரகு கூழ் செய்முறை;

தாய்ப்பாலுக்கு அடுத்ததாக குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயமான திட உணவு இந்த கேழ்வரகு கூழ். கடைகளில் விற்கும் கேழ்வரகு மாவை வைத்து கூழ் கிளறுவதை விட ,கேழ்வரகை வாங்கி நான்கு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் அளவில் தண்ணீரில் ஊற

வையுங்கள். பின்னர் அதனை நன்கு கழுவி விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை வடிகட்டி அதனுடன் சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து கூழ் போல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கவும். இது அவர்களின் எலும்புகளை பலப்படுத்தி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – தேங்காய் எண்ணெய் பிடிக்காதவர்களுக்காகவே தேங்காய்ப்பால் ஸ்பிரே.!

தானிய பொங்கல் செய்முறை;

தினை அரிசி, அல்லது சாமை அரிசியில் சிறிதளவு பாசிப் பருப்பும் மிளகும் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அது அளிக்கும் புரதச் சத்து, இரும்பு சத்து, மிளகின் சத்து ஆகியவை இணைந்து சுவாச மண்டல நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கும். சத்து மாவு கஞ்சி

சத்து மாவு கஞ்சி;

பாசிப்பயறு, கேழ்வரகும் ,மாப்பிள்ளை சம்பா சிகப்பரிசி, வறுத்த உளுந்து நிலக்கடலை கொஞ்சம் முந்திரி கொஞ்சம் சுக்கு சேர்த்து அரைத்து தயாரிக்கும் சத்து மாவுக் கஞ்சி வெறும் புரதம் மட்டும் தருவது இல்லை. வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான தாவர நுண் பொருள்களையும் சேர்த்து தரும்.

மேலும் படிக்க – தலை முடியை வளர வைப்பதற்கான யோகாசனம்.!

அமைலேஸ் அள்ளித்தரும் முளைகட்டிய தானிய பொடி;

குழந்தைகளுக்கான சிறப்பு உணவில் அமைலேஸ் உள்ள உணவு என்கிறது சிறந்தது நவீன உணவியல். அமைலேஸ் என்பது வேறு ஒன்றுமில்லை, முளைகட்டிய ராகி, கோதுமை, பாசிப்பயறு அனைத்திலும் இந்த அமிலச்சத்து உண்டு. இது குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கிய தேவையானதாக இருக்கிறது. டானிக்காகவும், டப்பாக்களில் விற்கும் உணவாகளை கொடுப்பதை தவிர்த்து நாமாகவே தயாரித்துக் கொடுக்கும் உணவு தான் சாலச் சிறந்தது.

நேந்தர பழக் கஞ்சி ;

கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகை இது. அதாவது நேந்திரம் பலத்துடன் சிறிதளவு அரிசி சேர்த்து வேகவைத்து, அதை நன்கு மசித்து குழந்தைகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள் . ஒரே வாரத்தில் குழந்தைகளின் உடல் எடை அதிகமாக வேண்டும் என்று விரும்புவர்கள் இந்த நேந்திர கஞ்சியை உணவாகக் கொடுக்கலாம். டெஸ்ரோ சும் என்ற

நேந்திர பழத்தில் இருக்கும் வேதிப்பொருள் எடை அதிகரிப்பிற்கு காரணமாக உள்ளது.

மேலும் படிக்க – தலைமுடிக்கு ஆலிவ் எண்ணெய்.!

குழந்தைகள் உணவில்மறக்காமல் சேர்க்க வேண்டிய ஒரு பொருள் ;

குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுத்தாலும் அதில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணையை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். தாய்ப்பாலில் இருக்கும் லாரிக் அமிலம் இயற்கையாகவே இந்த தேங்காய் எண்ணையில் மிகுந்து காணப்படுகிறது.

இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் எடையை அதிகரிக்கவும், குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரி செய்யவும் இந்த தேங்காய் எண்ணெய் அருமருந்தாக பயன்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன