தமிழில் அழகான வரிகளை கொண்ட சிறந்த 10 காதல் பாடல்கள்

beat love lines from tamil songs

1. சில்லுனு ஒரு காதல்- முன்பே வா என் அன்பே வா 

இந்த படத்தின் பெயரில் இருப்பது போன்று ஓர் குளுமையான காதல் இந்தப் படத்தில் இருக்கும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இதில் இடம் பெற்றிருக்கும் ஓர் அழகான பாடல் தான் முன்பே வா என் அன்பே வா இந்த அழகிய வரிகளை எழுதியவர் எழுத்தாளர் வாலி காதல் இல்லாதவர்கள் கூட இந்த வார்த்தைகளைக் கேட்டால் காதலில் விழ தோன்றும் அப்பேற்பட்ட அழகான வார்த்தைகளை கொண்டுள்ளது இந்த பாடல் அதில் சில வரிகளை பார்ப்போம்

முன்பே வா என் அன்பே வா

ஊனே வா உயிரே வா

முன்பே வா என் அன்பே வா

பூப்பூவாய் பூப்போம் வா

பூ வைத்தாய் பூ வைத்தாய்

நீ பூவைக்கோர் பூ வைத்தாய்

மணப்பூ வைத்துப் பூ வைத்த

பூவைக்குள் தீ வைத்தாய்

2. சுப்பிரமணியபுரம்- கண்கள் இருண்டால்

ஒதில் இருக்கும் மிக அழகான காதல் பாடல் தான் கண்கள் இரண்டால் பாடல் இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் ஜேம்ஸ் வசந்த் இது இவரின் முதல் படமாகும் இந்த பாடல் வரிகளை அழகாக எழுதியவர் தாமரை வீட்டை விட்டு தனியாக வெளிவராத ஒரு பெண் காதல் வயப்பட்டால் என்றால் எவ்விதமான வரிகளை கொண்ட பாடலை பாடுவார் என்பதை அழகாக காட்டியிருக்கும் இந்தப்பாடல் அதிலிருந்து சில வரிகள்

பெண்: பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்

பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேன்

நகர்ந்தேன் எனை மாற்றி

ஆண்: இரவும் அல்லாத பகலும் அல்லாத

பொழுதுகள் உன்னோடு கழியுமா

தொடவும் கூடாத படவும் கூடாத

இடைவெளி அப்போது குறையுமா

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கான காதல் பரிமாற்றம் இப்படி இருக்க வேண்டும்.!

3. தீரன் அதிகாரம் ஒன்று- லாலி லாலி 

இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் மிக அழகான காதல் பாடல்தான் லாலி லாலி இந்த பாடலை இசை அமைத்தவர் ஜிப்ரான் இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் ராஜூமுருகன் திருமணமான இளம் தம்பதியினர் தங்கள் வாழும் வாழ்க்கையைப் பற்றி எதிர்கால கனவைப் பற்றியும் மிக அழகாக பாடியிருக்கும் இந்த காதல் பாடல் கேட்பவர்கள் அனைவருக்கும் காதலிக்கத் தோன்றும் அளவிற்கு ஒரு உணர்வைத் தருகிறது இதில் இருந்து சில வரிகளை பார்ப்போம்

ஆண் : சின்ன சின்ன

கண்ணசைவில் உன்

அடிமை ஆகவா செல்ல

செல்ல முத்தங்களில்

உன் உயிரை வாங்கவா

லாலி லாலி நானும்

தூளி தூளி

ஆண் : உன்னை அள்ளி

ஏந்தியே ஒரு யுகம்

போகவா தலை முதல்

கால் வரை பணிவிடை

பார்க்கவா லாலி லாலி

நானும் தூளி தூளி

4. லீலை – ஒரு கிளி ஒரு கிளி

இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் மிக அழகான பாடல் தான் ஒரு கிளி ஒரு கிளி பாடல் இந்தப் பாடல் மிகவும் மென்மையான ஒரு காதல் பாடல் இதற்கு காரணம் என்னவென்றால் இந்த பாடலை பாடியவர் ஸ்ரேயா கோஷல் இந்த படத்திற்கு இசை அமைத்தவர் சதீஷ் சக்கரவர்த்தி இந்த அழகிய காதல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி இவர்கள் கூட்டணியில் மிக அழகாகவும் காதல் உணர்வை எடுத்து உரைக்கும் மிக எளிமையான வரிகள் கொண்ட பாடல் தான் இந்த ஒரு கிளி பாடல் அதிலிருந்து சில வரிகள்

ஒரு கிளி ஒரு கிளி  

உனக்குள் நான் வாழும்

விவரம் நான் கண்டு

வியக்கிறேன் 

எனக்கு நான் அல்ல

உனக்கு தான் என்று உணர்கிறேன்

நிழல் என தொடர்கிறேன்

மேலும் படிக்க – காதலிப்பவர்கள் கவனத்துடன் உறவை கொண்டு செல்ல வேண்டும்!

5. தனிஒருவன்- கண்ணால கண்ணால 

இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் மிக அழகான பாடல்தான் கண்ணால கண்ணால இந்த பாடலை எழுதி இசையமைத்தவர் ஹிப்ஹாப் தமிழா  காதல் உணர்வை மிக அழகாக எடுத்துரைப்பதாக இருக்கும் இந்தப் பாடல் வரிகள் திடீரென்று பூக்கும் பூக்களை போன்று உதயமாகிறது இந்த உணர்வை நீங்கள் பெறுவதற்கான சில வரிகள் இதோ

நெஞ்சோரமா

ஒரு காதல் துளிரும்போது

கண்ணோரமா

சிறுகண்ணீர் துளிகள் ஏனோ

கண்ணாளனே.. என்

கண்ணால் உன்ன

கைதாக்கிட நான் நினைச்சேனே

கண்ணீருல ஒரு மை போலவே

உன்னோடு சேர துடிச்சேனே

6. காதலில் விழுந்தேன்- உன் தலைமுடி 

இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்தான் உன் தலைமுடி இந்தப் பாடலை எழுதியவர் தாமரை இந்த பாடலை இசையமைத்தவர் விஜய் ஆண்டனி வீட்டில் தன்னந்தனியாக இருக்கும் பெண்ணை காதலன் சந்திக்க வந்தால் அவர்கள் உள் உணர்வு மற்றும் வெளியிடும் வார்த்தைகள் எவ்வாறு இருக்கும் என்ற காட்சியை பாடலாக எழுதி உருவாக்கியுள்ளார் காதலில் காமம் அதிகரித்து தன்னிலை மறந்து பாடப்படும் பாடல் தான் இந்த பாடல் அதிலிருந்து சில வரிகள்

பெண்: உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே

கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்

உன் ஒரு நொடி பிரிவினைக்கூட ஏற்க முடியாது கண்ணே

என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

(இசை…)

ஆண்: உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்

உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்

கைகள் பற்றிக்கொண்டு பேசிக்கொள்ளும் நேரம் 

இனிக்கும்

7. குரு- ஆருயிரே மன்னிப்பாயா 

ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்களை எழுதியவர் வைரமுத்து இதில் ஆருயிரே மன்னிப்பாயா என்ற ஒரு அழகான பாடல் அமைந்திருக்கிறது இந்தப் பாடலில் கணவனை விட்டு மனைவி சண்டையிட்டு பிரிந்து செல்வார் அவளை நினைத்து ஏங்கும் கணவன் எவ்வாறான வரிகளைக் கொண்டு பாடலை பாடுவார் என்று தத்ரூபமாக இந்தப்பாடலில் வரி அமைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து

ஆருயிரே

மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லு நீ என் சகியே } (2)

ஆண் : ஓ நீ இல்லாத

ராத்திரியோ காற்றில்லாத

இரவாய் ஆகாதோ

ஆண் : பித்து பித்து கொண்டு

தவித்தேன் தவித்தேன் உன்னை

எண்ணி நான் வாடி போவேன் நீ

இல்லாமல் கவிதையும் இசையும்

சுவையே தராது ஐந்து புலன்களின்

அழகியே

மேலும் படிக்க – காதல் பரிமாணமம் இப்படி இருந்தால் நலம்.!

8. பியார் பிரேமா காதல் -ஐ ஆண் லவ்

இந்த படத்தின் பெயரில் இருப்பது போன்று படம் முழுக்க காதலை பற்றி சொல்லி இருக்கும் படம்தான் இது இதில் ஐ ஆண் லவ் என்ற பாடலின் வரிகளில் நடைமுறையில் இருக்கும் காதல் ஜோடிகளைப் பற்றி தெள்ளத் தெளிவாக கூறியிருப்பார்கள் இந்தப் பாடலை எழுதியவர் நிரஞ்சன் பாரதி இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா இதில் இருந்து சில வரிகள்

ஜன்னல் ஓரமாய் முன்னாலே

ஹே மின்னல் போலவே வந்தாயே

விண்ணை தாண்டி ஒரு சொர்க்கத்தை

மண்ணில் எங்குமே தந்தாயே

விழியே நீங்கி நீ விலகாதே

நொடியும் என் மனம் தாங்காதே

என்ன நேருமோ தெரியாதே

என் ஜீவன் ஏங்குதே

9. செக்கச் சிவந்த வானம்- மழைக்குருவி 

வைரமுத்து வரிகளில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் மழைக்குருவி என்ற பாடலில் இடம் பெற்றிருக்கும் வரிகள் இயற்கையும் காதலும் ஒன்று சேர்ந்து அதன் ஆழத்தில் சென்று வெளிவருவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது 

நீல மழைச்சாரல்

தென்றல் நெசவு நடத்துமிடம்

நீல மழைச்சாரல்

வானம் குனிவதிலும் மண்ணை தொடுவதிலும்

காதல் அறிந்திருந்தேன்

10. பருத்திவீரன்- அய்யய்யோ 

இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இதில் அய்யய்யோ என்ற பாடல் கிராமத்து பாணியில் மிக அழகாக பாடப்பட்டவை இந்த பாடலின் வரிகளை எழுதியவர் சினேகன் காதல் உணர்வை தூண்டும் இந்த பாடலில் இருந்து சில வரிகள்

நீ கொன்னாக்கூட

குத்தமில்ல நீ சொன்னா

சாகும் இந்தப் புள்ள

அய்யய்யோ என் வெட்கம்

பத்தி வேகுறதே அய்யய்யோ

என் சமஞ்ச தேகம் சாயிறதே

அய்யய்யோ

எங்களின் கருத்தின்படி காதல் வலி கொண்ட சிறந்த பத்து பாடல்கள் இது தான் உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை தெரிவிக்கலாம்

1 thought on “தமிழில் அழகான வரிகளை கொண்ட சிறந்த 10 காதல் பாடல்கள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன