10 சிறந்த வறண்ட சருமத்திற்கான கிரீம்கள்

Top 10 creams which treats dry skin

ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் மிக மோசமானது வறண்ட சருமம் தான், ஏனென்றால் சாதாரணமாக மற்ற பிரச்சனைகள் எது வந்தாலும் அதன் தாக்கம் சிறிது நாட்களே இருக்கும் ஆனால் நமக்கு வறண்ட சருமம் இருந்தால் நம் வாழ்நாளில் எல்லா நாட்களிலும் இதன் தாக்கமும் இதனால் ஏற்படும் வலிகளும் நம்மை பாதிப்புக்குள்ளாக்கும் எனவே இதிலிருந்து விடுபடுவதற்காக நாம் இதற்காக விற்கப்படும் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும் அதில் சிறந்த 10 கிரீம்கள் என்னவென்று பார்ப்போம்.

1. அவீனோ டெய்லி மாய்ச்சரைசர் கிரீம்

வறண்ட சருமத்திற்கு ஏற்ற சிறந்த கிரீம்களில் முதலில் இருப்பது இதுதான் இதை நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்தின் உள் ஆழமாக சென்று வறட்சியைப் போக்கி நமக்கு புத்துயிர் பெற உதவுகிறது. இது நம் தோளில் இருக்கும் எண்ணையை மீண்டும் வெளிக்கொண்டு வருகிறது இதை தவிர்த்து நம்மை பளபளப்பாகவும் பொலிவுடனும் இது மாற்றுகிறது.

2. லோட்டஸ் ஹெர்பல் சீமோஸ்ட் மாய்ஸ்சுரைசர்

இது குளிர்காலத்திற்கு ஏற்ற ஒரு அற்புதமான க்ரீம் ஆகும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த கிரீமை ஒரு முறை பயன்படுத்தினால் போதும் அடுத்த 24 மணி நேரமும் உங்களை இது பாதுகாத்துக்கொள்ளும். இதில் வெண்ணெய் மற்றும் தாமரை மூலிகைகளை கொண்டுள்ளதால் நம்மை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும் இதைத்தவிர்த்து இதில் ஸ்ட்ராபெரி சாறுகள் அடங்கியுள்ளது.

மேலும் படிக்க – அழகை அதிகரிக்கும் கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்..!

3. கேட்டபில் டெய்லி அட்வான்ஸ்

இது நம் சருமத்தில் இருக்கும் பி எச் அளவை சமமாக வைத்து கொள்ளும். இதை தவிர்த்து இது வறண்ட சருமத்திற்கு உகந்த க்ரீம் ஆகும். இந்த க்ரீம் குளிர் காலம் மற்றும் கோடைக்காலங்களுக்கு ஏற்ற ஒன்றாகும், நம் சருமத்தில் இருக்கும் வறண்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தை குணப்படுத்தும். உங்கள் வறண்ட சருமத்தை 24 மணிநேரம் வரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். இது கடுமையான சுற்றுச்சூழல் போன்றவைகளினால் ஏற்படும் பாதிப்பை கூட தடுத்துவிடும்.

4. வாவ் ஸ்கின் ரிவிவ்

இது வறண்ட சருமத்திற்கான கிரீம் இதில் தேன், ஷியா வெண்ணெய், கோக்கோ வெண்ணெய் மற்றும் எண்ணெய்களை கொண்டுள்ளதால் உங்கள் சருமத்தின் மேல் கவசம் போல் படர்ந்து உங்களின் சருமத்தை வறண்டுவிடாமல் பார்த்துக் கொள்ளும். இதில் ஆர்கானிக் எண்ணெய்கள் மற்றும் பீட்ரூட் சாறு உங்கள் சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது.

5. இமிவேட்டா ஹெர்பல் மாய்ஸ்சுரைசர் ஜெல்

இதில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதினால் நமது சருமத்தில் இருக்கும் வறண்ட பகுதிகளை போக்கி எப்போதும் மென்மையாகவும் பொலிவுடன் வைக்க உதவுகிறது. இது சருமத்திற்கு புத்துயிர் தருகிறது மற்ற க்ரீம்களில் காணப்படும் எந்த ஒரு ரசாயனங்களையும் இதில் கலப்படமாக்கப்படாமல் மிக ஆரோக்கியமான முறையில் தயாரிக்கிறார்கள். இதனால் உங்கள் சருமத்தில் முகப்பருக்கள் ஏதாவது ஏற்பட்டால் அதை குணப்படுத்தவும் செய்கிறது.

மேலும் படிக்க – கண்ணாடி போன்ற சருமத்திற்கு இந்த 7 பொருளை பயன்படுத்துங்கள்..!

6. பாரஸ்ட் ஏஜென்சியில் ஹைட்ரேட் க்ரீம்

இது உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் மிகப் பொலிவுடன் இருக்க உதவுகிறது. உங்கள் சருமத்தில் இருக்கும் வறட்சிக்கு முழுமையான நிவாரணம் அளிக்கிறது. உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை தடுத்து உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது. சூரியனிலிருந்து வெளிவரும் நீல ஊதா கதிர் வீச்சை நம் சருமத்தில் படாதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்கிறது. இதைத்தவிர்த்து நம் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது. இதில் துளசி, அஸ்வகந்தா, சந்தனம், ஆரஞ்சு தோல் மற்றும் புரதங்களை கொண்டுள்ளதால் உங்கள் சருமம் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.

7. பயோடிக் பயோ சப்றான் க்ரீம்

மேம்படுத்தப்பட்ட ஆயுர் வேதத்தின் அடிப்படையில் செய்யப்பட்டதுதான் இந்த கிரீம். இதில் குங்குமப்பூ மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் மற்றும் அதன் ஆரோக்கியத்தை நீட்டிக்கவும் உதவுகிறது. சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இது தடுத்து அவை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது. இந்த கிரீம்களை காலை மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்தலாம் இதைக் கொண்டு மசாஜ் செய்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஆரோக்கியமாக இருக்கும்.

8. வி எல் சி சி ஹனி மாய்ஸ்சுரைசர்

தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட அற்புதமான மாய்ச்சரைசர் கிரீம் தான் இது. நம் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை எப்போதும் சமநிலையில் வைக்க உதவுகிறது, தவிர்த்து நம் சருமத்தை மென்மையாகவும் நல்ல நிலையில் வைக்க உதவுகிறது. இதை ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தினீர்கள் என்றால் உங்கள் தோல் வறண்டு போவதை நிறுத்திக்கொள்வதை நீங்களே உணருவீர்கள். இதில் பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய்கள் இருப்பதினால் நம் முகம் மென்மையாக உதவுகிறது.

மேலும் படிக்க – பேஸ் பேக்குகளின் வகைகள் தன்மை அறிவோம் வாங்க

9. இமாலயா ஸ்பேஸ் மாய்ஸ்சுரைசர்

இதில் கற்றாழை, வைட்டமின் ஈ மற்றும் பாதாம் நிறைந்துள்ளதால் நமது வறண்ட சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இதில் கேரட் விதை, உள்ளதால் நமது சருமத்தில் ஏற்படும் சேதத்தை குறைகிறது நம் சருமத்தை எப்போதும் சமநிலையில் வைக்க உதவுகிறது.

10. ஜொவிஸ் ஒயிட் வாட்டர் லில்லி க்ரீம்

இதில் லில்லி மலர் அதிகமாக நிறைந்துள்ளதால் நமது சருமத்தை வறண்டு விடாமல் பார்த்துக் கொள்கிறது. இதில் அற்புதமான மலர்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நம் சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க உதவுகிறது. இதில் சந்தன, எண்ணெய் மற்றும் ஆப்பிள் சாறுகளை கொண்டுள்ளதால் நம் சருமத்தில் இருக்கும் நீர் ஓட்டத்தை அதிகரித்து வறண்டு விடாமல் பார்த்துக் கொள்கிறது. இந்தியாவிலேயே வறண்ட சருமத்திற்கான சிறந்த கிரீம்களில் இதுவும் ஒன்று.

இதுபோல் உங்கள் வறண்ட சருமத்தை சரி செய்வதற்கான சிறந்த கிரீம்களை நீங்களே தேர்ந்தெடுத்து உங்கள் அனுபவங்களை பகிருங்கள். இதைத் தவிர்த்து இது அனைத்தும் இந்தியாவின் மிக சிறந்த கிரீம்கள் ஆகும். இவைகள் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்க வில்லை என்றால் இணையதளம் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம்.

1 thought on “10 சிறந்த வறண்ட சருமத்திற்கான கிரீம்கள்”

  1. Pingback: do you know what are the best skin whitening cream for men

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன