நெட்ப்ளிக்ஸில் நாம் பார்க்கவேண்டிய மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள்.!

top 10 best tamil movies to watch on netflix

ஒரு காலத்தில் திரைப்படத்தை பார்க்க வேண்டுமென்றால் நாம் திரையரங்கிற்குதான் செல்ல வேண்டும். ஆனால் அதன் பிறகு நாம் விசிறி மற்றும் டெக்கு போன்ற பொருட்களை கொண்டு பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது இருக்கும் நவீன கால கட்டங்களில் நாம் வீட்டிலை அமர்ந்தபடி நமது மொபைல் போன் மூலமாக புது படங்களை பார்க்க முடியும். இதற்கு காரணம் நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் சேனல்கள்தான்.

நெட்ப்ளிக்ஸில் ஏராளமான தமிழ் படங்கள் இருக்கின்றன அதில் சிறந்த 10 தமிழ் படங்கள் எவை என்று இந்த பதிவில் பார்ப்போம்.

1. அன்பே சிவம் (2003)

சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனின் திரைக்கதை மற்றும் அற்புதமான நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அன்பே சிவம். இந்தியாவில் மதப் பிரச்சினைகள் ஆங்காங்கே இருக்கும் காலகட்டங்களில் கடவுள் என்பவர் இல்லை என்ற அற்புதமான கருத்தை முன்வைத்தார் கமலஹாசன். இதை தவிர்த்து கடவுளுக்கும் மேலான ஒரு சக்தி இருக்கிறது அதுதான் அன்பு என்று அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் இருந்தது. இதற்குள் அழகான காதல், உறவு, நட்பு மற்றும் கம்யூனிசத்தை சேர்த்து அற்புதமான திரைக்கதை கொண்ட இந்தப் படம் நெட்ப்ளிக்ஸில் அனைவருக்கும் எட்டும் வகையில் இருக்கின்றது.

2. விசாரணை (2015)

வெற்றிமாறனின் படைப்பான விசாரணை திரைப்படம் ஆஸ்கர் வரை செல்லும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது ஆனால் போட்டிகள் அதிகமாக உள்ள காரணத்தினால் இந்த படம் வெற்றியடையவில்லை. ஆனால் இந்திய அளவில் தமிழ்ல் சிறந்த படம் என தேசிய விருதை பெற்றது. இந்தப் படத்தில் குற்றமும் அதன் பின்னணிகளும் மற்றும் போலீஸ் விசாரணை விசாரிக்கும் முறையைப் பற்றி வெளிப்படையாக சொல்லி இருந்தார் வெற்றிமாறன்.

மேலும் படிக்க – விஜய் தேவர் கொண்டாவின் வாழ்க்கை முறைகள்..!

3. சூப்பர் டீலக்ஸ் 2019

தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படமான சூப்பர்டீலக்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். இவரின் முதல் படமான ஆரணிய காண்டம் தேசிய விருதை பெற்று எல்லோரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் வெவ்வேறு சம்பவங்கள், வெவ்வேறு கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளது என்பதை மிக எளிமையான முறையில் திரைக்கதை வடிவில் நமக்கு புரிய வைத்திருப்பார்கள்.

4. மேற்கு தொடர்ச்சி மலை (2018)

லெனின் பாரதியின் இயக்கத்தில் வெளியான மேற்குதொடர்ச்சிமலை கிராமிய மக்கள் மற்றும் மலைப்பிரதேசத்தில் வாழும் விவசாயிகளின் வாழ்க்கையை பற்றிய அற்புதமான படம். வசூல் ரீதியாக வெற்றி அடையாத இந்த படம் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இந்த திரைப்படம் அதிகளவில் தொலைக்காட்சிகள் மற்றும் திரையரங்குகளில் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது இதை நெட்ப்ளிக்ஸில் நாம் இலவசமாக பார்க்கலாம்.

5. பவர் பாண்டி (2017)

தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நடிகர் தனுஷ் முதன்முதலில் இயக்குனராக அவதாரம் எடுத்த திரைப்படம்தான் பவர்பாண்டி. இந்த படத்தில் இளமை மற்றும் முதுமை காதலை தத்துருபமாக சொல்லியிருப்பார். பின்பு தந்தை, மகன் பாசத்தையும் நமக்கு புரிய வைத்திருப்பார்.

மேலும் படிக்க – மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வாழ்க்கை முறை..!

6. லென்ஸ் (2017)

இணையத்தளம் ஒருவரின் வாழ்க்கை எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் என்பவரின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கூறியிருப்பார். ஒரு பெண்ணுக்கு இணையதளம் மூலமாக எவ்விதமான பிரச்சனைகள், அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி பாதிப்படைகிறது மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அதை எப்படி பார்க்கிறார்கள் என்பதை நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டிருக்கும் படம்தான் இது. பலரும் அறிந்திராத இப்படத்தை நெட்ப்ளிக்ஸில் நீங்கள் காண முடியும்.

7. ஆரஞ்சு மிட்டாய் (2015)

விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான முதல் படம் இதுதான் பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வாழ்க்கையை பற்றிய தவிர்க்கமுடியாத பதிவை மென்மையான திரைக்கதையுடன் கூறியிருப்பது இந்த படத்தின் கூடுதல் பலம். ஒரு முதியவருக்கும் ஒரு இளைஞனுக்கும் இடையில் இருக்கும் உறவு. அப்பா பையன் பாசம் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என அனைத்தையும் வயதானவரின் பார்வையிலிருந்து நமக்கு கூறியிருப்பதுதான் இந்த படத்தின் சிறப்பு.

8. ரேடியோ பெட்டி (2015)

ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான ரேடியோ பெட்டி என்ற திரைப்படம் பல விருதுகளை வாரி இறைத்தது. இருந்தாலும் மக்கள் மனதில் இடம் கிடைக்காததால் இது திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடவில்லை. ஒரு முதியவர் சிறுவயது முதல் கேட்டு வந்த ரேடியோ உடைந்து விட்டதால் அவர் அறியாமல் அந்த ரேடியோ சத்தம் அவர் காதுகளில் கேட்டவாறே இருந்துள்ளது. நாம் எப்போது அதிகளவில் தனிமையில் இருக்கும் போது நம்மை அறியாமல் நமது மனது பாதிக்கப்படுகிறது . வயதானவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் உண்மையில் முதிர்ச்சி அடையும் நிலையில் பொதுவாக பிள்ளைகள் கூட அவர்கள் அருகில் இருக்கமாட்டார்கள் இருந்தாலும் சுற்றியுள்ளவர்களை தங்கள் பிள்ளைகளாக நினைத்து வாழ்வதே முதியவர்களின் சாபக்கேடு.

மேலும் படிக்க – பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் வாழ்க்கை முறை..!

9. நிலா (2016)

இந்தத் திரைப்படத்தை செல்வமணி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த பதிவிற்கு முன்பு பலருக்கும் தெரியாத இந்த படம் ஒரு அற்புதமான காதல் படம், இல்லை ஒரு திரில்லர் படம், இல்லை ஒரு குழந்தைகள் படம் என எல்லா பரிமாற்ற உணர்வையும் உங்கள் மனதிற்குள் தொட்டுச் செல்லும் அளவிற்கு இந்தப் படம் இருக்கும். ஒரு கார் ஓட்டுநர் தனது தான் காதலித்த பெண்ணை இரவு நேரத்தில் ரோட்டில் பார்க்கிறார். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் இந்த படம் எதை நோக்கி செல்கிறது என்று.

10. சில சமயங்களில் (2018)

புகழ்பெற்ற பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சில சமயங்களில். இந்த படத்தை தியேட்டர் வழியாக வெளியிடாமல் நெட்ப்ளிக்ஸில் தயாரிப்பில் அவர்களின் தளத்தில் வெளியிட்டார்கள். ஆனால் நினைத்ததை விட அதிக அளவில் வெற்றியை தேடி தந்தது என்று சொல்லலாம். வெவ்வேறு கதாபாத்திரங்கள் ஒரே மருத்துவமனையில் அமர்ந்து எச்ஐவி பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார். இதில் ஒருவருக்கு மட்டும் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்று தெரியவந்துள்ளது இதனால் ஒவ்வொருவரும் பயந்துகொண்டு தங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ளும் தருணத்தை மிகவும் தத்துரூபமாக திரைக்கதை மூலமாக நமக்கு காண்பித்துள்ளார் பிரியதர்ஷன். இது நெட்ப்ளிக்ஸில் மட்டுமே கிடைக்கும் இந்த தொடரை தவறாமல் பாருங்கள்.

நீங்கள் பார்க்க முடியாத மற்றும் பார்க்க தவறவிட்ட பல திரைப்படங்கள் இணையதளங்கள் மூலமாக நிரம்பி உள்ளது ஆனால் ஒவ்வொரு முறையும் அதை நாம் தேடி கண்டுபிடித்து பார்ப்பது என்பது இயலாத காரியமாக மாறிவிட்டது. எனவே உடனடியாக பார்ப்பதற்காகவே இதுபோன்ற ஸ்டிரீமிங் சேனல்கள் இருக்கின்றன அதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த படத்தை பல முறை பாருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன