அமேசான் பிரைமில் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த 10 திரைப்படங்கள்.!

top 10 best tamil films to watch on amazon prime

ஆன்லைன் ஸ்டிரீமிங் சேனல் என்று நம் மனதிற்கு தோன்றும் போது முதலில் வருவது அமேசன் பிரைம் தான். விலையும் மிகவும் மலிவாக எல்லாரிடமும் கிடைக்கக்கூடிய மிக அற்புதமான ஆன்லைன் ஸ்டிரீமிங் தளம் தான் அமேசன் பிரைம்.

இதில் நாம் தவறவிட்ட அல்லது பலமுறை பார்க்க வேண்டிய மிக முக்கியமான திரைப்படங்கள் ஏராளமான இருக்கின்றன. அதிலும் தமிழ் மொழியில் நாம் ரசிக்க வேண்டிய திரைப்படங்கள் அதிகளவில் இருப்பதினால் நாம் விரும்பும் நேரம் எல்லாம் நமக்கு பிடித்த திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்து ரசிக்கலாம். அது போன்ற சிறந்த பத்து படங்களின் பட்டியலில் இங்கே பார்ப்போம்.

1. பேரன்பு (2019)

ராம் இயக்கத்தில் மம்முட்டி மற்றும் சாதனா நடிப்பில் பெரிய பாதிப்பை உண்டாக்கிய திரைப்படம்தான் பேரன்பு. மாற்றுத்திறனாளியான மகளை எப்படி ஒரு தந்தை பார்த்துக்கொள்கிறார், அதனால் ஏற்படும் சிக்கல்களை மிகவும் தரமான முறையில் திரைக்கதை வடிவில் நமக்கு காண்பித்து இருப்பார் இயக்குனர் ராம்.


2. சீதகாதி (2018)

இயக்குனர் பாலாஜி தரணிதரனின் அற்புதமான இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சீதக்காதி. விஜய் சேதுபதியின் நடிப்பில் புதுமையான திரைக்கதையுடன் ஒரு நாடக நடிகரின் வாழ்க்கையும் அவரின் தாக்கம் சமூக வாழ்க்கை எப்படி மாற்றுகிறது என்பதை மக்களுக்குப் புரியும்படி நகைச்சுவையுடன் வெளியான திரைப்படம் தான் சீதக்காதி.

3. அருவி (2017)

அருண் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அருவி. சாதாரண பெண் மற்றவர்களின் தவறால் ஏற்பட்ட விபத்தில் எச் ஐ வி நோய் பாதிப்புக்குள்ளாகிறால்.இவளை சுற்றி உள்ள கதைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை வலிகள் மிகுந்த நகைச்சுவையாக காண்பிக்க படம்தான் அருவி.

மேலும் படிக்க – ரவுடி பேபி சாய் பல்லவி வாழ்க்கைமுறை.!

4. பரியேறும் பெருமாள் (2018)

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் ஜாதிகள் மூலமாக ஏற்படும் பிரச்சனைகள், இதனால் ஒரு தனிமனித வாழ்க்கை பாதிப்புக்குள்ளாவது, அவன் காதல் வாழ்க்கை என்ன ஆகிறது, என்பதை வலிகள் மிகுந்த திரைக்கதையுடன் வெளியிட்டுள்ள திரைப்படமே பரியேறும் பெருமாள்.

5. அசுரன் (2019)

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அசுரன். உண்மை சம்பவங்களையும், கற்பனையும் ஒன்றாக இணைத்து மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது திரைப்படம் தான் அசுரன். சாதிக்கொடுமை, நிலம் பறிப்பு, குடும்பம், ஒற்றுமை, தீண்டாமை என அனைத்தையும் அழகாக காண்பித்து இருக்கும் படம்தான் அசுரன்.

மேலும் படிக்க – இணையத்தை கலக்கும் அனுஹாசனின் வாழ்க்கை முறை.!

6. தீரன் அதிகாரம் ஒன்று (2017)

எச் வினோத் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் தீரன் அதிகாரம் ஒன்று. ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் உண்மை வாழ்க்கையை தத்ரூபமாக எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இது. இந்தியா முழுக்க வெவ்வேறு விதமான இடங்களில் வெவ்வேறு முறையில் கொலை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட கொலைகாரர்களை எப்படி எல்லாம் திட்டமிட்டு கைது செய்துள்ளார்கள் என்பதை சொல்லும் படம்தான் இது.

7. ஆடை (2019)

ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஆடை. முதலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திரைக்கதை சென்றாலும் பின்பு ஒரு தனிமனிதன் சந்தோஷத்திற்காக செய்யப்படும் செயல்கள் எப்படி மற்றவர்களை பாதிக்க செய்கிறது என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கும் படம்தான் இது.

8. ராட்சசி (2019)

கௌதமராஜ் என்பவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ராட்சசி. சாதாரண அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராக நடிகை ஜோதிகா தன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு எப்படி ஒரு தரமான பள்ளியாக மாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் கதை. தலைமை ஆசிரியராக தன் பணியை சிறப்பாக செய்து பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பார். இது போல் அனைவரும் இருந்தால் அனைத்து அரசு பள்ளிகளும் தனியார் பள்ளியை விட உயர்ந்த இருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் திரைப்படம்தான் இது.

9. மாநகரம் (2017)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் மாநகரம். மாநகரத்தில் எப்படி எல்லாம் புதிதாக வருபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் மற்றும் அதை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகள், சம்பவங்கள் என அனைத்தையும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக அவர்களுக்கு ஏற்படும் சம்பவங்கள் அடிப்படையில் நமக்கு புரிய வைத்திருப்பார் இயக்குனர் லோகேஷ் கநகராஜ்.

மேலும் படிக்க – பிக் பாஸ் யாஷிகா ஆனந்த் வாழ்க்கை முறைகள்..!

10. யு டர்ன் (2018)

பவன் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் யு டர்ன். நம் அவசர வாழ்க்கையில் நம்மை அறியாமல் ஏகப்பட்ட தவறுகளை செய்கிறோம். ஆனால் நாம் செய்யும் தவறுகள் எப்போதும் மற்றவர்களை பாதிக்க செய்கிறதோ அப்போதிலிருந்து நம்மால் பாதிக்கப்பட்டவர்களின் சாபம் நமக்கு வந்தடைகிறது. இதை அடிப்படையாகக் கொண்டதுதான் யுடர்ன் திரைப்படம்.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் அமேசான் பிரைம் மற்றும் மற்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேனல்களில் கிடைக்கின்றது. இதை தவறவிடாமல் பார்க்க வேண்டிய படம், அப்படி ஏற்கனவே பார்த்தவர்கள் மீண்டும் பார்ப்பதற்கான வழிகளை இந்த ஸ்டீமிங் சேனல்கள் உங்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.

1 thought on “அமேசான் பிரைமில் பார்க்க வேண்டிய மிகச் சிறந்த 10 திரைப்படங்கள்.!”

  1. Pingback: நெட்ப்ளிக்ஸில் பார்க்கவேண்டிய சிறந்த 10 தமிழ் படங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன