தலை முடியின் ஆரோக்கியத்திற்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்.!

top 10 best rated foods that will boost your hair growth

தலை முடியின் மேல் நாம் அதிகளவில் அக்கறை கொள்கிறோம் இதற்கு காரணம் பெண்களில் யாரிடம் அதிக அளவில் கூந்தல் இருக்கிறது அவரின் ஆளுமை எப்போதும் அதிகமாகவே இருக்கும். இதுவே ஆண்கள் என்று வந்துவிட்டால் தலைமுடி அடர்த்தியாக உள்ளவர்கள் எப்போதும் தங்களின் கம்பீரமாக காட்டிக் கொள்வார். ஆனால் உண்மையில் தலைமுடி என்பது ஒரு வருடத்திற்கு ஆறு அங்குலங்கள் மட்டுமே வளரக்கூடும் இதற்காக நாம் தேவையில்லாத ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களை பயன்படுத்துகிறோம். இதை அனைத்தையும் தவிர்த்து உணவு முறைகளை நாம் கடைப்பிடித்தாலே நம் தலைமுடி ஆரோக்கியமாகவும் நம் நினைத்ததை போல் நீளமாக வளரும்.

கீரைகள்

கீரைகளில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகமாக இருக்கும் இதனால் நம் தலை முடிக்கு தேவையான ஆரோக்கியமான எண்ணங்களை இது சுரக்க செய்கிறது இதனால் நம் தலை வறட்சி அடையாமல் எப்போதும் கூந்தல் வளரக்கூடிய தன்மையை இந்த உணவு நமக்கு தருகிறது. சாதாரணமாக நாம் தினமும் 30 கிராம் கீரையை சாப்பிட்டால் நமக்கு தலைக்கு தேவையான 50% வைட்டமின்களை பெறலாம்.

மேலும் படிக்க – விரைவில் கர்ப்பமாக விரும்பும் பெண்கள் இந்த உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்யணுமாம்…!

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின் என்பது அதிகமாக உள்ளது இதனால் நாம் எப்போதெல்லாம் இந்த உணவை எடுத்துக் கொள்கிறோமோ அப்போது நம் தலை முடியில் ஒரு பாதுகாப்பு வளையத்தை இது உண்டாக்குகிறது. இதன் மூலம் நம் முடி உதிர்வதை குறைத்து அதனுடைய ஆயுளை அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் ஏ சக்தி மற்ற உணவுகளை ஒப்பிடுகையில் இதில் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

அவகோடா

முடி வளர்வதற்குத் தேவையான வைட்டமின் ஈ அவகோடாவில் அதிகமாக உள்ளது இதை பட்டர் ஃப்ரூட் என்றும் அழைப்பார்கள் இதை சாப்பிடுவதற்கு ருசியாகவும் ஆரோக்கியமான ஒரு பழம் என கருதி வருகிறோம். இதில் ஏகப்பட்ட நல்ல கொழுப்புகள் இருக்கின்றன இதில் நம் முடி வளர்வதை ஊக்குவிக்கும் வைட்டமின் ஈ இருக்கிறது.

மேலும் படிக்க – சீதாப்பழ கொட்டைகளுக்கு இருக்கும் குணங்கள்..!

சூரியகாந்தி விதை

நம் உடல் ஆரோக்கியம் மற்றும் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சூரியகாந்தி விதையில் ஏராளமாக இருக்கின்றன இது இயற்கையாகவே எண்ணெய் சக்திகளை கொண்ட ஒரு உணவாகும் இதனால் நமது பி எச் அளவை இது சமநிலையில் வைத்து நமது ஆரோக்கியத்தை காக்கிறது இதில் வைட்டமின் இ, துத்தநாகம் மற்றும் செலினியம் சக்தி இதில் உள்ளது இதனால் நமக்கு வைட்டமின் ஈ சக்தி 50% இதிலிருந்து கிடைக்கிறது.

விதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள்

ஆளி விதைகள், சியா விதைகள், பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சைகள் போன்ற உலர்ந்த பழங்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது இதை நாம் தினமும் உட்கொள்வதனால் இதில் இருக்கும் நல்ல கொழுப்புகள் நமது கூந்தலை வலுப்படுத்தி அதன் எண்ணெய் தன்மையை சமநிலையில் வைக்கிறது.

பீன்ஸ்

தாவரத்தில் அதிக புரதத்தை கொண்டுள்ளது பீன்ஸ். இது முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். அதோடு பீன்ஸில் துத்தநாகம் அதிகமாக உள்ளதால் இது முடி வளர்ச்சி மற்றும் மறுசுழற்சிக்கு உதவுகிறது.

மேலும் படிக்க – கொரோனா வைரஸை உடம்புக்குள் நுழைய விடாமல் விரட்டும் பவளமல்லி!

முட்டை

கரோட்டின் எனப்படும் புரதம் உற்பத்தி செய்வதற்கு பயோட்டின் மிக முக்கியமாகும் இதை மிக எளிமையான முறையில் உற்பத்தி செய்வது முட்டை. இதைத்தவிர்த்து முட்டையில் புரதம் அதிகமாக இருப்பதினால் நமது கூந்தல் முடிகளுக்கு இடையே புரதம் அதிகமாக இருக்கும். எப்போது புரதம் குறைகிறதோ அப்போது நமக்கு முடி உதிர்தல் உண்டாகிறது.

மீன்கள்

நல்ல கொழுப்புகள் நிறைந்த மீன்களால் நமது முடி ஆரோக்கியம் அடையும். இதில் சால்மன், ஹெர்ரிங் மற்றும் கானகத்தை போன்ற மீன்களில் நல்ல கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றன. மீன் உணவுகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அதிகமாக இருக்கும் இதில் பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் நிறைந்திருக்கும். இது அனைத்தும் நமது முடி வளர வைக்கும் என்பதை பல ஆராய்ச்சி நிரூபித்துள்ளார்கள்.

எனவே உங்கள் முடி வளர்வதற்கு நாம் அதிகமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் அது சைவமாகவும், அசைவமாகவும் இருக்கலாம். உங்களுக்கு எது தேவையோ அதை தேர்ந்தெடுத்து உங்கள் உடலுக்கு தேவையான சக்திகளை இதிலிருந்து பெறுங்கள் நிச்சயம் உங்கள் முடி உதிர்வதை தடுத்து அதை வளர செய்யலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன