ஆண்களுக்கான சிறந்த 10 லிப் பாம்.!

top 10 best lip balm for men

பெண்களைப் போலவே ஆண்களின் உதடுகளும் குளிர் காலங்கள், கோடை காலங்கள் மற்றும் பயணங்களின் போது வறட்சி அடையும் இந்த சமயங்களில் அவர்கள் இதற்காகவே தயாரிக்கப்பட்ட லிப் பாம்களை பயன்படுத்துவார்கள் ஆனால் அதில் எந்த லிப் பாம் சிறந்தது, எது உடனடியாகவே நமது உதடு மேல் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கிறது, என்று அவர்களுக்கு சரியாக தெரியாது. இது போல் இருக்கும் ஆண்கள் எது சிறந்தது என்பதை கண்டறிவதற்கான பட்டியலை இங்கே காணலாம்.

1. பால்மர்ஸ் கோகோ பார்முலா பட்டர் லிப் பாம்

இந்த லிப் பாம் மிகவும் எளிமையான ஒன்று இதனால் நம் உதடு பாதுகாப்பாக பராமரிக்கப்படும். இதில் எஸ் பி எஃப் 15 சக்தி இருப்பதினால் நமது உதடை மிக விரைவில் குணப்படுத்தி விடுகிறது. இதை தவிர்த்து மேலும் வறட்சி மற்றும் வெடிப்புகள் வராமல் இது தடுக்கிறது. இதில் கோகோ மற்றும் வெண்ணையின் சக்தி இருப்பதினால் சூரிய ஒளியால் ஏற்படும் வறட்சியை தடுத்து உங்கள் உதட்டை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

2. இமாலயா நேச்சுரல் சாஃப்ட் லிப் கேர் வெண்ணிலா

இந்த லிப் பாமில் வெண்ணிலா என்னை இருப்பதினால் உங்கள் உதடு எப்போதும் மென்மையாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது. இதை தவிர்த்து ஆண்கள் ஏதாவது புதிய இடத்திற்கு சென்றார்கள் என்றால் அவர்களின் உதடு மேல் இது போன்ற பலப்பல தெரியாதவாறு இது பார்த்துக் கொள்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் வறட்சி மற்றும் வெப்பத்தினால் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து இந்த லிப் பாம் பாதுகாக்கிறது.

மேலும் படிக்க – ஆளுமையுடன் அழகு கொண்டபிரியங்காவின் வாழ்வியல்

3. நாஜியோ அரோமாதெரபி மாய்ஸ்சுரைசிங் லிப் பாம்

இந்த லிப் பாமை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் பயன்படுத்தலாம் இது ஒரு ஆஸ்திரேலியா தயாரிப்பு என்பதினால் அங்கு இருக்கும் வெப்ப சூழ்நிலைகளை நன்கு அறிந்து அதற்கேற்ப இதை தயாரித்துள்ளார்கள். இது உங்கள் உதடு மேல் ஈரப்பதத்தை அதிகரித்து குளிர்காலம் மற்றும் கோடை காலங்களில் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்கிறது. இதன் நறுமணமும் மிகவும் அற்புதமான ஒன்றாக இருக்கிறது. இதில் அதிக அளவில் எஸ் பி எஃப் உள்ளதால் நமது உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் வெடிப்புகளில் இருந்து உடனடியாக தீர்வு காண உதவுகிறது.

4. உஸ்திரா லிப் பாம்

இது ஆண்களுக்கான பிரத்யேக முறையில் தயாரிக்கப்பட்ட லிப் பாம் இது சாக்லேட் சுவையைக் கொண்டது. அதை தவிர்த்து பாதாம் எண்ணெயினால் செய்யப்பட்ட இந்த லிப் பாம் உங்கள் உதடுகளை எப்போதும் உலர்வாக வைக்க உதவுகிறது. இதில் போதுமான அளவு ஈரப்பதம் இருப்பதினால் நீங்கள் புன்னகைக்கும் போதெல்லாம் உங்கள் உதடை பளபளப்பாக மற்றவர்களுக்கு காண்பிக்கிறது.

5. நிவ்யா மென் ஆக்டிவ் கேர் லிப் பாம்

தோல் மற்றும் உதடுகளில் மேல் ஏற்பட்டிருக்கும் வரட்சியை பாதுகாக்க உதவும் இந்த லிப் பாம் ஆண்களுக்காக பிரத்தியேகமான முறையில் தயாரிக்கப் பட்டவை. இது சூரிய ஒளியினால் நம் உடலில் ஏற்படும் சேதத்தை போக்கி நம் உதடு பழைய நிலைக்கு திரும்ப உதவுகிறது. இது நம் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல் நம் உடலை சரியாக பராமரிக்கிறது எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த  லிப் பாமை நீங்கள் பயன்படுத்தி வெளியே செல்லலாம். இது உங்களை நல்லபடியாக பாதுகாப்பாக வைக்கும்.

மேலும் படிக்க – ஸ்ருதிஹாசனின் வாழ்க்கை முறைகள் பிடித்தது பார்போம்

6. நியூட்ரஜனா நார்வேஜியன் ஃபார்முலா

சூரிய ஒளிகளில் ஏற்படும் வறட்சி மற்றும் குளிர் காலங்களில் உதடுகளின் மேல் ஏற்படும் வெடிப்புகள் அனைத்திற்கும் தீர்வாக இந்த  லிப் பாம் உதவுகிறது. இது நம் மேல் இருக்கும் தோலில் நன்கு படர்ந்து எந்த ஒரு தீங்கும் விளைவிக்காமல் பார்த்துக் கொள்கிறது இதை தடவுவதன் மூலம் நம் உதடுகள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் உணர்வை நமக்கு ஏற்படுத்தும். இதை ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் பயன்படுத்தலாம்.

7. ஜொஐவாணி நேச்சுரல் லிப் பாம்

இந்த லிப் பாம் புகைப்பிடிப்பவர்களுக்ககவே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்டது. புகை பிடிக்கும்போது ஏற்படும் கருமை மற்றும் உதடு மேலும் காயங்கள் என அனைத்தையும் இந்த லிப் பாம் தடவுவதன் மூலம் இதை வர விடாமல் தடுக்க முடியும். இதை புகைப்பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல் சூரிய கதிர்வீச்சுகளால் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் கூட இதை பயன்படுத்தலாம்.

8. ஒமர்ஃபி லைட்னிங் லிப் பாம்

இந்த லிப் பாம் ஆண்களின் உதடுகளில் இருக்கும் கருமையை போக்கி மிக மிருதுவாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது. இதில் வெண்ணை, கேரட், பாதாம் மற்றும் தர்பூசணி சாறுகளை கலந்து இருப்பதினால் நமது உதட்டை மிக ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் இதை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – சருமத்தில் பிரச்சனையா..இதோ உங்களுக்கான தீர்வு..!

9. பர்ட் பீஸ் லிப் பாம்

இது 100% இயற்கையான முறையில் தயாரிக்கப் பட்டவை நாம் உதடில் இருக்கும் கருமைகள் மற்றும் வறட்சியை போக்க உதவுகிறது. இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் அதை விட அதிகமாக இது உழைக்கும்.

10. பயோடிக் பயோ ஆலோவேரா லிப் பாம்

வறண்ட மற்றும் வெடிப்புகள் உள்ள சருமத்தை இது உடனடியாக குணப்படுத்துகிறது. இதில் முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்டவை இதில் எந்த ஒரு ஆல்கஹாலும் இல்லை. இயற்கை விரும்புபவர்களுக்கு ஏற்ற லிப் பாம் இதுவாகும்.

எனவே ஆண்களுக்கான பிரத்யேக எண்களின் லிப் பாம் வரிசையைப் பார்த்தோம் இதில் உங்களுக்கு எந்த லிப் பாம் உகந்தது என்பதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினீர்கள் என்றால் எல்லாவித சூழ்நிலைகளிலும் உங்கள் உதடுகளை பாதுகாப்பாகவும் கவர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன