தக்காளி சாறுடன் இதை கலந்தால் போதும் எண்ணெய் சருமம் சரியாகிவிடும்.!

tomatoes are the best source of medicine to cure your oily skin problem

சரும பிரச்சனை என்பது எல்லோருக்கும் சமமாக வரக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாகும், அதிலும் வெளியில் சுற்றுபவர்கள் வேலைக்குப் போகிறவர்களுக்கு இந்தப் பிரச்சனையின் தாக்கம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் அவ்வப்போது செய்யும் சில ஒப்பனைகள் மூலமாக இவர்கள் சருமத்தை சரிசெய்து விடுவார்கள். ஆனால் எண்ணை சருமம் உள்ளவர்கள் இதுபோன்ற எந்த ஒப்பனைகளை செய்தாலும் அவர்களின் சருமம் எண்ணெயாக இருப்பதினால் அவர்கள் முகம் பொலிவாக இருக்காது. இதனால் மிக எளிதில் அவர்களுக்கு முகப்பருக்கள், கருவளையங்கள் போன்றவை தோன்றிவிடும் இதற்கான தீர்வாக தக்காளி சாறை நம் முகத்தில் பயன்படுத்தலாம்.

அஸ்ட்ரிஜென்ட் என்ற சக்தி தக்காளியில் அதிகமாக உள்ளது. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும் மற்றும் எந்த ஒரு தீங்கும் வராமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் தக்காளி சாறுடன் இங்கே குறிப்பிட்டுள்ள பொருட்களை கலந்து முகத்தில் தடவி வந்தால் எண்ணை சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

மேலும் படிக்க – மாடர் மங்கையரே லெகிங்ஸின் டிரெண்டிங் பார்போமா

தக்காளியை நன்கு அரைத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும் பின்பு உங்கள் முகத்தில் அந்த கலவையைக் கொண்டு நன்கு தேய்க்கவேண்டும். இது ஸ்க்ரப்பராக மாறி உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது.

தக்காளி மற்றும் தேன், இவை இரண்டிலும் சருமத்தைக் காக்கும் பண்புகள் அதிகமாக உள்ளது அதிலும் தேனுக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி மற்றும் கிருமிநாசினி பண்புகள் இருக்கின்றன. இது உங்கள் முகத்தில் ஏற்படும் முகப்பருக்கள் அழக்கிறது. அதுமட்டுமல்லாமல் இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்ற ஒன்றாகும். முதலில் தக்காளியை நன்கு அரைத்துக் கொண்டு அதில் தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும் 20 நிமிடங்கள் கழித்து அதை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உங்கள் முகம் பொலிவடையும் அதுமட்டுமல்லாமல் இதை வாரத்திற்கு 3 முதல் 4 தடவி பயன்படுத்தினால் மிக விரைவில் இதற்கான பலனை நாம் பெறலாம்.

மேலும் படிக்க – சருமத்தில் ஏற்படும் வெண் படைகளை போக்குவதற்கான எளிய வழிகள்.!

நம் சருமத்தை சரி செய்வதற்காக தக்காளி சாறுடன் எலுமிச்சை கலந்து தடவலாம். எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால் நமது சருமத்தில் இருக்கும் சிறு துளையை கூட இது அகற்றி நம்மை மிகப் பொளிவுடன் காட்ட உதவும். இதற்கு நாம் தக்காளியை நன்கு அரைத்து அதை பேஸ்ட்டாக மாற்றி அதில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதை குளிர்ந்த உடல் உள்ளவர்கள் 10 முதல் 15 நிமிடங்கள் வரை பயன்படுத்தினால் போதும்.

கடைசியாக நாம் வினிகர் அல்லது ஓட்ஸை கொண்டு நம் முகத்தை பொலிவாக்கலாம். இவைகளில் ஏதாவது ஒன்றை தக்காளி சாறுடன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் இருக்கும் எண்ணெய்கள் நீங்கிவிடும். இந்த வழிகளை பயன்படுத்தி எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மிக பொலிவான சருமம் மற்றும் பிசுபிசுப்பு இல்லாத சருமமாக மாற்றிக்கொள்ள முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன