காதல் கைகூட இந்த தாந்தீரிகம் செய்யுங்க..!

to get succeeded in love follow these steps

மன அமைதிக்கு நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று காதல். ஆனால் இது நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நமது வாழ்வில் காதல் உணர்வு இருக்கவேண்டும். காதல் இல்லாதவர்கள் வாழ்க்கை நரகத்திற்கு சமம், எனவே உங்கள் வாழ்க்கையில் விரைவில் உங்கள் காதலை கண்டுபிடியுங்கள். சரியான காதல் அமையவில்லை என்றாலும் காத்திருங்கள். உங்களுக்கான துணை மிக விரைவில் உங்களை தேடி வருவார். அப்படி அமைந்துவிட்டால் நமது காதல் வாழ்க்கையை வெற்றிகரமான வாழ்க்கையாக மாற்றுவது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.

காதல் உறவுக்குள் மிக முக்கியமான ஒன்று தங்கள் துணை தனக்கு மிக முக்கியமானவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது. எது செய்வதாக இருந்தாலும் உங்கள் கருத்திற்கு மேலாக உங்கள் துணையின் கருத்தை கேளுங்கள். அது சரியாக வரும் நிலையில் அதையே செய்வது மிகவும் நல்லது, இது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். உங்களுக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை உணர்த்தும் வகையில் அவ்வப்போது அவரிடம் சில ஆலோசனை கேளுங்கள். எங்கே சென்றாலும் அவரிடம் தெரிவியுங்கள், அதே போல் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவரைப் பற்றி சொல்லுங்கள்.

மேலும் படிக்க – காதலிப்பவர்கள் கவனத்துடன் உறவை கொண்டு செல்ல வேண்டும்!

உங்கள் துணைக்காண நேரத்தை ஒதுக்குவது மிகவும் முக்கியமானது. தினமும் ஒரு மணி நேரமாவது உங்கள் துணையுடன் அமைதியான நேரத்தை கழியுங்கள். எந்த ஒரு தடங்கலும் இல்லாதவாறு உங்கள் துணையுடன் ஆழ்ந்த உரையாடலுக்கு செல்லுங்கள், இது உங்களுக்குள் இருக்கும் புரிதலை அதிகரிக்கும்.

உங்கள் துணையை எப்போதும் ஊக்கமளித்து கொண்டே இருங்கள். அவர் எந்த செயல் செய்வதாக இருந்தாலும் அதன் நோக்கம் மற்றும் எண்ணங்களை நன்கு அறிந்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள். எப்போதும் அவர் செயலை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதேபோல் அவர் செய்யும் செயலை கட்டுப்படுத்தாதீர்கள்.

மேலும் படிக்க – இல்லறத்தில் குடும்ப ஒற்றுமைக்கு இதை செய்யுங்கள்.!

எப்போதும் உங்களுக்கான தேவைகளை அவர்களுக்கு புரிய வையுங்கள். நீங்கள் எதையாவது செய்துவிட்டு அதற்கு அவர் வருத்தம் கொண்டால் உடனே அவர் உங்களை புரியவில்லை என்று புலம்பாமல் வெளிப்படையாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். நம் மனதை புரிந்து கொள்வது மிகவும் கடினம் எனவே சொல்வதில் எந்தத் தவறும் இல்லை, இது உங்கள் உறவை வலுப்படுத்தும்.

ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருப்பது மிக முக்கியம். நீங்கள் எது செய்வதாக இருந்தாலும் உங்கள் துணைக்கு தெரியப்படுத்துங்கள். என்னுடைய செயலை நான் ஏன் என்னுடைய துணைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஈகோவை தவிர்த்து, செய்யும் சிறு செயலாக இருந்தாலும் அவருக்கு தெரியப்படுத்துங்கள். இது நீங்கள் எவ்வளவு முக்கியம் என்ற உணர்வை ஏற்படுத்தும். அதே சமயத்தில் உங்கள் துணை உங்களுக்கு தெரியப் படுத்தியவுடன் இதை செய்யாதே, அதை செய்யாதே என்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம்.

மேலும் படிக்க – காதல் பரிமாணமம் இப்படி இருந்தால் நலம்.!

உங்கள் துணையின் தேவையை புரிந்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு அவர் எங்கேயாவது செல்வதாக இருந்தால் அவருக்கு தேவையான எல்லா பொருட்களும் அவருடன் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல் உடல் சோர்வு அல்லது உடல் நலக்குறைவு ஏற்படும்போது அவருக்கு மருந்து, மாத்திரை, மருத்துவமனை உதவி என அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுங்கள். இது உங்கள் காதலின் ஆழத்தை அறிய உதவும்.

அவ்வப்போது பரிசுகளை அளியுங்கள், இல்லையெனில் நிறைய கொண்டாட்டங்கள் அல்லது இரவு உணவிற்கு செல்லுங்கள். இது உங்கள் உறவில் நல்ல நினைவுகளை ஏற்படுத்திக்கொடுக்கும். இதனால் உங்களுக்குள் சண்டை வந்தாலும் அது போன்ற இடங்களுக்கு செல்லும்போது சண்டையை மறந்து உங்களின் மகிழ்ச்சியான நாட்களை மீண்டும் உங்கள் நினைவிற்கு கொண்டு வரும், எனவே இன்ப அதிர்ச்சி அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருங்கள்.

எல்லா உணர்வையும் மதியுங்கள். அழுகை, சோகம், துன்பம், மனவருத்தம், சந்தோஷம் என எல்லாவற்றையும் மதித்து அதற்கேற்ப செயல்படுங்கள். இதைத் தவிர்த்து உங்களின் வேலையை நாட்கள் அதிகமாக இருந்தால் வெளியே செல்லும் போது உங்கள் வேலைகளை செய்யுங்கள். அவர்களுடன் இணைந்து உங்கள் வேலையை செய்யும் போது இருவருக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து நெருக்கமாக உணர்வீர்கள். உறவில் மிக முக்கியமான ஒன்று சுதந்திரம், அவர்களை இறுக்கிப் பிடிக்காமல் எப்போதும் அவருக்குப் பிடித்ததை செய்ய அனுமதியுங்கள். இதுபோன்ற செயல்களை செய்தால் மட்டுமே உங்கள் காதல் வாழ்க்கை வெற்றிகரமானதாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன