மலச்சிக்கல் பிரச்சனையை இந்த காய்கறிகளை கொண்டு அழிக்கலாம்.!

  • by
To Avoid Constipation Have These Food

எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நிலையை கடந்தவுடன் உடல் பிரச்சனைகள் ஏற்படும், அதில் ஆரம்ப பிரச்சனையே மலச்சிக்கல். ஒரு சிலருக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இந்த சிக்கல்கள் இருக்கும். இதனால் பெரிதாக எந்த பாதிப்புகளும் உண்டாகாது. அதுவே தொடர்ந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும். அதை தவிர்த்து மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை காய்கறிகளை கொண்டு அதை தடுக்கலாம்.

மலச்சிக்கல் உண்டாகும் காரணம் அதன் விளைவுகள்

ஒரு நபரின் உடல் இயக்கம் சரியில்லாத பொழுது அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளே காரணம். செரிமானத்தை அதிகரிக்கும் உணவுகள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் மற்றும் மலச்சிக்கலை அதிகரிக்கும். எனவே இதுபோன்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். இல்லையெனில் மலச்சிக்கல் உங்களுக்கு மூல நோய், குத பிளவு, வயிற்றுவீக்கம் போன்றவைகளை உண்டாக்கும்.

மேலும் படிக்க – உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்..!

சக்கரவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நீர்சத்து, நார் சத்து, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 இருப்பதினால் உங்கள் குடல் மற்றும் வயிற்றில் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உணவுகளை உடனடியாக செரிமானம் செய்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது.

பீன்ஸ் உணவு

பீன்ஸில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவைகள் அதிகமாக இருப்பதினால் உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உங்கள் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகாமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும் படிக்க – முத்து பற்களை காக்க எளிய வழிகள் வேண்டுமா

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் சல்ஃபுரேபென் இருப்பதினால் உங்கள் செரிமானத்தை அதிகரித்து குடலை பாதுகாக்கும். அதை தடுத்து செரிமான பிரச்சனையை உண்டாக்கும் சில நுண்ணுயிர்களை அழிக்கும். இந்த பச்சைப் ப்ரோக்கோலி மலச்சிக்கலுக்கான அற்புதமான உணவாகும்.

பசலைக்கீரை மற்றும் வெள்ளரிக்காய்

பசலைக்கீரையில் பைபர் மற்றும் மெக்னீசியம் அதிகமாக இருப்பதினால் உங்கள் உடலில் இருக்கும் பெருங்குடலில் பராமரிக்கிறது. எனவே மலச்சிக்கலால் உண்டாகும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது. வெள்ளரிக்காயில் 95% நீர் சத்து இருப்பதினால் உங்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை உடனடியாக தீர்க்கிறது. தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் உங்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – பெண்களுக்கு மட்டுமா? ஆண்களுக்கும் தான் !!

முட்டைகோஸ் மற்றும் வெண்டைக்காய்

இவைகள் இரண்டையும் நாம் பச்சையாகக் கூட சாப்பிடலாம். முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடல் நன்மை மற்றும் குடல் நன்மையை அதிகரிக்கும். எனவே மலச்சிக்கலுக்கு சிறந்த உணவாக முட்டைகோஸ் கருதப்படுகிறது. வெண்டைக்காய் செரிமான சக்தியை அதிகரிக்கும். அதைத் தவிர்த்து இதில் இருக்கும் ஒருவிதமான நார்சத்து உங்கள் மலத்தை மென்மையாக்கி எளிதில் வெளியேற்றுகிறது. எனவே மலச்சிக்கலுக்கான சிறந்த உணவாக வெண்டைக்காய் கருதப்படுகிறது.

எனவே நாம் ஃபைபர் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. பச்சைக் காய்கறிகள், பருப்புகள், அரிசி, ஓட்ஸ், ஆப்பிள், வாழைப்பழம் போன்ற உணவுகளை உட்கொள்ளும் பொழுது உங்கள் மலச்சிக்கல் பிரச்சினையை அடியோடு அழிக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன