கூந்தல் பிரச்சினையிலிருந்து விடுபட!

tips to solve all your hair related problems

பெண்களுக்கு அழகு என்று கூறினாலே அதை அவர்களுக்கு கூந்தல் தான். அப்படிப்பட்ட கூந்தல் நிறமிழந்து பொலிவிழந்து காணப்படும் பொழுது அது உங்களது முக அழகையும் சேர்த்து பாதிக்கும்.

கூந்தல் நிறமிழந்து காணப்படுகிறதா?

இன்றைய சமுதாய சூழ்நிலையில் நம்மை நாம் பராமரிப்பு எடுத்துக் கொள்வதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதனால் நாம் பல சரும பிரச்சனைகளை சந்திப்பதோடு மட்டுமல்லாமல் கூந்தல் உதிர்வு போன்ற பிரச்சினைகளையும் சந்திக்கிறோம். மேலும் இயற்கை நிறம்  மறைந்து செம்பட்டை நிறம் போல் காட்சியளிக்கிறது. இயற்கையாகவே இதுபோன்ற செம்பட்டையாக இருக்கும் கூந்தல் நேரத்தை எவ்வாறு இயற்கையாக கருமை நிறத்திற்கு மாற்றுவது என்று பார்ப்போம் வாருங்கள். இதற்கு தேவையான பொருட்கள் சோற்றுக் கற்றாழை, சிறிது மருதாணி இலை, சிறிது ஆலிவ் ஆயில். சோற்றுக்கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் ஜெல்லை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கப் மருதாணி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த அரைத்த விழுதோடு ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் கூந்தல் முழுவதும் தடவி ஒரு 15 நிமிடம் கழித்து கூந்தலை அலசிக் கொள்ளுங்கள். இவ்வாறு நான்கு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர கூந்தலை இயற்கை நிறம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். 

மேலும் படிக்க – கார்குழல் கூந்தல் அழகுக்கு கரிசாலை வேண்டும்!

இதில் மருதாணி உங்களுக்கு சிவப்பு நிறத்தையும் சோற்றுக்கற்றாழை உங்களுக்கு பிரவுன் நிறத்தையும் தரும். ஆலிவ் ஆயில் கூந்தலின் இயற்கை நிறமான கருமை நிறத்தை தரும். அதற்கு தகுந்தாற்போல் இதன் கலவைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இது கூந்தலுக்கு ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் ஆக செயல்படும்.

சிலருக்கு முடிந்து உதிர்வு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். அதிக முடி உதிர்வு இருந்தால் வெந்தயம் மற்றும் குன்றிமணி பொடியை சேர்த்து அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தினமும் அதனை காலையில் தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வது குறையும். 

மேலும் வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை மறுநாள் காலையில் குளிக்கும் போது தலையில் அப்ளை செய்து பின்னர் கழுவி வர முடி உதிர்வு பிரச்சினை நிற்கும். 

சிலருக்கு நரைமுடி ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக இருக்கும். இளம் வயதிலேயே நரைமுடி தோன்றும். இளமையில் தோன்றும் இந்த நரைமுடி பிரச்சனையை சரிசெய்ய நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மறைந்து கருமை நிறம் கிடைக்கும். 

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி கொள்ள வேண்டும். இவ்வாறு காய்ச்சிய எண்ணெயுடன் கேரட் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை தலையில் தேய்த்து வர முடி உதிர்வது நின்று முடி வளர உதவி புரியும்.

மேலும் படிக்க – மாடர்ன் உலகத்தின் மதிப்புமிக்கது கைதறி உடைகள்!

சிலருக்கு கருமையான முடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களது கூந்தல் இழந்து  செம்பட்டை நிறத்தில் காணப்படும். இயற்கையாகவே கருமை நிறம் பெற, ஊற வைத்த வெந்தயத்தை ஒரு நெல்லிக்காயை நன்றாக அரைத்து அதன் விழுதை தலையில் தடவி வர கூந்தலுக்கு இயற்கை நிறம் திரும்பக் கிடைக்கும். இந்த கூந்தல் நிறக் குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாடுதான். எனவே வைட்டமின் பி நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. 

சிலருக்கு பொடுகு தொல்லை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். பொடுகு தொல்லை நீங்க வெந்தயத்தை முதல் நாள் இரவே நன்றாக ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுத்த நாள் அந்த வெந்தயத்தை நன்றாக அரைத்து தலைமுடியில்  அப்ளை செய்து கொள்ளுங்கள். பத்திலிருந்து இருபது நிமிடம் ஊற வைத்து பின்னர் கூந்தலை அலசிக் கொள்ளுங்கள். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் இந்த குறிப்பை பயன்படுத்த வேண்டாம்.

மேலும் படிக்க – கண்ணுக்கு மை அழகு, காதல் ஓவியம் பேசும் கண்களுக்கு எது அழகு!

விளக்கெண்ணெய் ஒரு நல்ல மருந்தாகும். விளக்கெண்ணெய் போல் குளிர்ச்சி தரும் ஒரு ஆயில் வேறு எதுவுமே இல்லை என்றே கூறலாம். இந்த விளக்கெண்ணையை சிறிது எடுத்து லேசான சூட்டில் காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தலை முடியில் நன்றாக பூசி வர முடி உதிர்வது நிற்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன