நீரிழிவு நோய் உள்ளவர்கள் நிச்சயம் இதை பின்பற்ற வேண்டும்.!

tips that people suffering from diabetes should follow

சுகாதார சீரழிவில் மிக முக்கியமான பங்கு வகிப்பது இந்த நீரிழிவு பிரச்சனை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் ஏராளமானவர்களுக்கு இந்த பிரச்சினைகள் இருக்கின்றன. இவை அனைத்திற்கும் காரணம் சிறு வயது முதல் இப்போது வரை எடுத்துக்கொள்ளும் உணவுகள்தான். இதில் கலக்கப்படும் ரசாயனங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் நம்மை நீரிழிவு பிரச்சினைகளுக்கு தள்ளிவிடுகிறது. இது அனைத்தையும் தவிர்த்து நாம் போதுமான அளவு உடற்பயிற்சி செய்யாமல் சோம்பேறியாக ஒரே இடத்தில் இருந்தால் இந்தப் பிரச்சினையின் தாக்கம் உங்களுக்கு வந்து விடும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன இதை சரியாக கடைபிடித்தால் மட்டுமே நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கையை வாழ முடியும் இல்லை என்றால் இந்த நோய் உங்களை வாட்டி வதைத்து விடும்.

மேலும் படிக்க – உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வெள்ளரிக்காய்..!

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டயட்டை சரியாக கடைபிடிக்க வேண்டும். இவர்கள் மருத்துவர்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பார்களே அதையே உட்கொள்ள வேண்டும். அதை தவிர்த்து நாவிற்கு ருசி சேர்க்க விரும்பி தேவையற்ற உணவை உட்கொண்டால் அது உங்கள் உடல்நிலையை பாதிப்படைய செய்து உங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். எனவே ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளையும் சர்க்கரை, மைதா போன்ற உணவை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி மேற்கொள்வது மிக முக்கியம் நாம் என்னதான் மருந்து மாத்திரைகளை உட்கொண்டாலும், ஆரோக்கியமான உணவை சாப்பிட்டாலும் உடற்பயிற்சி செய்யாமல் நீரிழிவு நோய் பிரச்சனையின் தாக்கம் குறையாது. எனவே உங்களால் முடிந்தவரை ஜாகிங் அல்லது ரன்னிங் செய்யுங்கள், இல்லையனில் உடம்பை வளைத்து நெளித்து ஏதாவது உடற்பயிற்சியை செய்யுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவும்.

மேலும் படிக்க – முத்து பற்களை காக்க எளிய வழிகள் வேண்டுமா

மருந்துகளை சரியான நேரத்தில் மறக்காமல் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை தவிர்த்து மருத்துவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் எப்போதெல்லாம் மருத்துவர் உங்களை வந்து பார்க்க சொன்னாரோ அந்த சமயங்களில் அவரை பார்த்து வருவது நல்லது. உங்களுக்கும் மருத்துவருக்கும் இடையே ஏதாவது இடைவெளி இருந்தால் இந்தப் பிரச்சனையின் தாக்கம் அதிகரித்து விடும் எனவே அவர்களுடன் தொலைபேசி வாயிலாக அல்லது நேரில் சென்று உங்கள் உடல்நிலை என்ன நிலையில் இருக்கிறது என்பதை கண்டறியுங்கள். தேவைப்பட்டால் அவ்வப்போது உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதிப்பது நல்லது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன