ஒரே வாரத்தில் பற்களுக்கு பின்னால் இருக்கும் மஞ்சள் கறையை நீக்க முடியும்.!

tips on how to remove dirt from your teeth in one week

புன்னகையை அழகாக காண்பிப்பது நமது பற்கள்தான் ஆனால் ஒரு சிலருக்கும் பற்களில் உள்ள கரைகளினால் அவர்கள் புன்னகையைக் கூட விரும்பியபடி சிரிக்காமல் மறைத்து விடுவார்கள். எனவே பற்களில் இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ஒரு அற்புதமான கலவையை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

ஒருமுறை பற்களில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உங்கள் வாய்ப்பகுதியில் மிகப் பெரிய வளி ஏற்படுத்திவிடும் இதைத் தடுப்பதற்கு நாம் தினமும் குறைந்தது இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும். ஆனால் பல்துலக்குவதினால் ஏற்படவிருக்கும் பிரச்சினைகளிருந்து தீர்வளிக்கும் தவிர இதற்கு முன் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்காது. எனவே அதற்காக ஒரு அற்புத கலவையை எப்படி செய்வது என்பது இங்கே பார்ப்போம்.

மேலும் படிக்க – குப்பை இலைகளில் இருக்கும் நன்மைகள்..!

இந்தக் கலவையை செய்வதற்கு தேவையான பொருட்கள் பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய், ஆப்பிள் சீடர் வினிகர், டூத் பேஸ்ட் மற்றும் அலுமினியத்தாள்.

பேக்கிங் சோடாவில் இயற்கையாகவே பற்களில் இருக்கும் கறைகளைப் போக்கும் சக்திகள் உள்ளது. நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்டில் அதிகமாக எலுமிச்சை சாறுகளை பயன்படுத்துகிறார்கள். இதைத்தவிர்த்து நம் பற்களில் பற்களின் கரைகள் மற்றும் துர்னாற்றங்களை போக்க எலுமிச்சை சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிள் சீடர் வினிகரில் இருக்கும் அமிலத் தன்மை பற்களில் இருக்கும் கறைகளை மிக எளிதில் அழக்கிறது.

இதை செய்வதற்கு நாம் டூத் பேஸ்டை சிறிதளவு போட்டுக் கொள்ள வேண்டும் பின்பு அதில் பேக்கிங் சோடா ஆப்பிள் சீடர் வினிகர், எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஒன்றாக கலந்து அதை அலுமினியத்தின் மீது தடவி நம் பற்களில் ஒட்டிக் கொள்ள வேண்டும். இதை இரண்டு அலுமினியத்தின் மூலமாக செய்து மேல் பற்கள் மற்றும் கிழ் பற்களில் இதை ஒட்டி வைக்க வேண்டும் பிறகு 2 நிமிடங்கள் கழித்து அதை அகற்றி விட்டு அந்த கலவையைக் கொண்டு பல்துலக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் பற்கள் வெண்மையாகவும் மஞ்சள் அனைத்தும் நீங்கி புதிய பற்கள் போல் காட்சியளிக்கும்.

மேலும் படிக்க – ஏராளமான நன்மைகளை தரும் கிராம்பு.!

இந்த கலவையை அப்போதே பயன்படுத்துவது நல்லது இதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து மறுநாள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்வது நல்லது தொடர்ந்து செய்தால் உங்கள் பற்களை பாதிப்படையச் செய்ய வாய்ப்புள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன