தாயாகும் பெண்ணா நீங்கள் தவறாமல் இதைப்படியுங்கள்

  • by

தாயாகும் பெண்ணா நீங்கள் உங்களுக்கான சில அடிப்படை குறிப்புகள் தருகின்றோம். அதனைப் பின்பற்றுங்கள்.  முதல் மூன்று மாதங்கள் உடல் மனம் இரண்டிலும் அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், அன்பு ஆகிய அனைத்து ஒருங்கிணைத்து  கொண்டு செல்ல வேண்டும். 

 மனசு மகிழ்ச்சியா  இருக்கட்டும்: 

நீங்கள் தாயான செய்தி  உறுதியானது உங்களவர் மற்றும் நெருங்கிய உறவுகளிடம் தெரிவித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். வயதான பெரியோர்களிடம் பெற வேண்டிய அனைத்து குறிப்புகளை பெறுங்கள் மற்றும் முதல் ஐந்து மாதங்கள்  கவனமாக இருக்கவும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும், சரியான நேரத்தில் உறங்கச் செல்லுங்கள். 

டிஜிட்டல் உலகிலிருந்து கொஞ்சம் காலம் விலகியிருங்கள் உங்கள் மனம் மற்றும் உடல் ஆகியவற்றை   புறஉலக தாக்கத்தில் இருந்து காக்க வேண்டியது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க – விளக்கெண்ணையில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

கர்பிணி பெண்னான நீங்கள்  மனதளவில் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.  எல்லாம் நன்மைக்கே என எந்த இலக்கையும் அடைய முயல வேண்டும்.  தினமும் 15 முதல் 30 நிமிடம் சும்மா இருங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம், எதைப் பற்றியும் ஆலோசிக்காதீர்கள் உங்களை சுற்றியுள்ள செடி கொடிகள் மற்றும் சுவாசம் ஆகியவற்றினைப் பாருங்கள், சுவாசத்தினை  நன்றாக கவனிக்கவும். 

புத்தகம்  வாசியுங்கள்: 

அன்பு, பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல், நட்பு, பாஸ்டிவிட்டி போன்றவை சார்ந்த புத்தகங்கள் படிக்கவும். எக்காரணம் கொண்டு பொய் சொல்லுதல், புரணி பேசுதல், வஞ்சகம்,  பலிவாங்குதல், பொறாமை போன்ற குணங்கள் கொண்ட மனிதர்களையோ அது சார்ந்த தாக்கம் கொண்ட டீவி சீரியல்கள், புத்தகங்கள் ஆகியவற்றை தொடவோ, பாக்கவோ செய்யாதீர்கள். 

மெல்லின இசை: 

கர்ப்ப காலத்தில் பெண்கள் மெல்லிய இசையை கேட்க வேண்டும். அடி, குத்து, சண்டை, கெட்ட வார்தை, கொடுமையான சத்தங்களை கேட்பதை  தவிர்க்க வேண்டும்.  

இன்ஸ்ட்ரூமெண்டல் அதிகமாக கவனம் வைத்து கேளுங்கள்.  மெல்லிய இசை எப்பொழுதும் நமக்கு மருந்தாக இருக்கும். வீட்டில் தேவையற்ற இரைச்சல் தரும் பாடல்களை ஒலிப்பரப்புவதை நிறுத்துங்கள். 

குடும்ப அரவணைப்பு:

குடும்பத்தினர் அரவணைப்பு ஆகியவை என்பது அவசியம் ஆகும்.  பெண்க்குள் இருக்கும் தன்மையானது வேறு உலகில் இருக்கும் தன்மையாக இருக்கும். கருவில் இருக்கும் குழந்தையைப் பற்றிய எண்ணங்கள் சூழ்ந்திருக்கும். உடலில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம்  ஒவ்வொன்றும் புதிதாக இருக்கும் அதனை பெண்கள் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். எதாவது சந்தேகம் இருந்தால் பெரியவர்களிடம் பேசி தெளிவிப்படுத்திக் கொள்ளலாம். உறவினர்கள் மற்றும் அலுவலக சூழலில் இருக்கும் பெண்கள்  எப்பொழுதும் நிதானமாக செயல்பட வேண்டும். பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் கற்பிணி பெண்களுக்கு ஆதரவுடன் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க – தினமும் சுண்டல் சாப்பிடுவதினால் நமக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது..!

ஆரோக்கியமான உணவு: 

கர்பிணி பெண்கள் உணவில்  வீட்டில் சமைத்தவற்றை சேர்க்க வேண்டும். தாழிப்புகளில் செக்கில் அரைக்கப்பட்ட எண்ணெய்கள் பயன்படுத்தலாம். நாட்டுக்காய், கீரைகள் தினமும் சமைத்து சாப்பிட வேண்டும்.  அசைவம் விரும்புவர்கள் சாப்பிடலாம் ஆனால் சைவ உணவுகள் சாப்பிடுவது சாலச் சிறந்தது. உடலில் வெப்ப நிலை பெண்கள் சமமாக வைத்திருக்க வேண்டும். 

சத்துக்கள் நிறைந்த நாட்டுப் பழங்கள் மலைநெல்லி, கொய்யா, வாழைப் பழம் போன்றவற்றை சாப்பிடலாம். ஆப்பிள், ஆரஞ்சு, பேரிச்சம்பளம் ஆகியவற்றையும்  சாப்பிடலாம். ஜங்க் புட்கள் , மைதா கலந்திருக்கும் உணவு ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்தல் நல்லது. அதிகபட்சம் எதுவானாலும் சாப்பிடலாம் ஆனால் வீட்டில் இருந்து சமைக்கப்பட்ட உணவு சாலச்சிறந்தது. 

வேலைகள் கடினமானதை செய்வதை தவிர்க்க வேண்டும்.  பாஸிட்டிவிட்டி நிறைந்து மகிழ்ச்சி மன நிலையுடன் இலக்கை அடையும் நோக்கில் நாட்களை கடக்க  வேண்டும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன