ஊரடங்கில் தளர்வு வழிகாட்டுதலுடன் பணியாற்றலாம்

  • by

பிரதமர் மோடி அறிவிப்பில் ஊரடங்கை மே 3 வரை தொடர வேண்டும் என அறிவித்தார். இந்த ஊரடங்கு அறிவிப்பால் விவசாயம் மற்றும் சில முக்கிய தொழில்கள்   எல்லாம் ஊரடங்கில் இருந்து தளர்த்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏபரல் 14க்குப் பின் தொடங்கும் ஊரடங்கில் போக்குவரத்து  எதுவும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முக கவசம் செல்லுதல் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பொது இடங்களில்  எச்சில் துப்புதல் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். 

ஊரடங்கு தளர்த்தப்பட்ட துறைகள்:

ஊரகப் பகுதிகஊளில் 100  நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குபின் தொடங்கலாம் என அறிபிக்கப்பட்டுள்ளது. விவசாயம் நீர்பாசனம் செய்யலாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  விவசாயிகள் சமூக இடைவெளியுடன் தான் பணி செய்வார்கள் அதனால் அவர்களுக்கான ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 20க்குப்  பின் நெடுஞ்சாலைகள் மெக்கானிசாப்கள் மற்றும் உணவகங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு மருத்துவத்துறைகள் இயங்குவதற்கு அனுமதியுண்டு இவர்கள் சேவை தேவையானது ஆகும். 

ஊரடங்கு நேரத்தில் மன அழுத்தம் கவலைகள் போன்ற  மன கோளாறுகளால் பாதிக்கப்பட்ட உணர்வு அமைதியற்ற நிலையாக இருந்தால் அத்தகைய   சூழலில் தோன்றும் பய உணர்வை போக்க உதவி எண்ணுக்கு அழைக்கவும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள 044- 264 225585 எண்னுக்கு அழைக்கவும்.  இங்குள்ள மருத்துவர்கள் மன அச்சத்தைப் போக்க கவுன்சிலிங் வழங்குவார்கள். 

நிவாரணம் அளிக்க அனுமதி:

நிவாரண நிதிகள் அனுமதியானது கிடைத்துள்ளது.  நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி வழங்கும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். ஐடி நிறுவனங்களில் 50% சதவீகித நிறுவனங்கள் மற்றும் ஐடி சார்ந்த நிறுவனங்கள் இ-காமர்ஸ் நிறுவனங்கள் சில அரசின்  அறிவுறுத்தலின்படி அனுபதிக்கப்படுகின்றனர். இந்த நிறுவனங்கள் 50% சதவீகித ஊழியர்களைக் கொண்டு பணியாற்றலாம். ஆனால் சில நிபந்தனைகளை அரசு அறிவித்துள்ளது அதன்படி ஊழியர்களுக்கான போக்குவரத்தை நிறுவனங்களே உறுதி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க:இபோலா மற்றும் கொரோனா வைரஸிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது..!

டிஜிட்டல் பொருளாதாரச் சேவை என்பது மிகவும் முக்கியமானது ஆகும். இது நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் ஒன்றாகவுள்ளது. லாக்டவுனில் டிஜிட்டல் சேவைகள் சிறப்பாக இயங்கின. இ- காமர்ஸ் துறை செயல்பாடுகள் ஐடி, ஐடி சார்ந்த நிறுவனங்களுடன் சேவை சார்ந்த பணிகள், ஆன்லைனில் கற்பித்தல் தொலைத்துரக் கற்றல்  ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு தளர்வு பெறும் துறைகள்:

பிளெம்பிங், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக், தோட்டக்கலை, பண்னைத் தொழில் விளைப் பொருள் கொள்முதல் போன்ற தொழில்களுக்கு அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய தொழில்கள் அனைத்தும் அரசின் அறிவுரைப்படி பணியாற்ற வேண்டும்.  மேலும் கட்டுமானப் பணிகள் சிறு குறு தொழில்கள் செய்வோர்கள், ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஆகியோர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியாற்ற வேண்டியது அவசியமாகின்றது. 

மேலும் படிக்க:வேலைப்பளுவுடன் கண்களை பாதுக்காக்க வேண்டும்!

மருந்து  நிறுவனங்கள் மருந்து உபகரணங்கள் தயாரிக்க அரசு  உத்தரவுப்படி இயங்கலாம். தொழிற்சாலைகள் இயங்கவும் அரசு அனுமதியளித்துள்ளது. தொழிற்சாலைகள் அரசின் வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்ற வேண்டும். மற்ற துறைகள் போக்குவரத்து, வழிப்பாட்டுத் தலங்கள், அரசியல் நிகழ்வுகள் வணிக வளாகங்கள் ஆகியவை மே 3 வரை இயங்க முடியாது. 

 மேற்குரிய துறையினர் முக கவசம் அணிதல் மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் அவசியம் ஆகும். போக்குவரத்தில் பாதுகாப்பு அவசியம் ஆகும். சிறு குறு  தொழிகள் செய்வோர் நிச்சயம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். ஆரோக்கியமான சூழல் இருத்தல் அவசியம் ஆகின்றது. 

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பணியாளர்கள் எங்கும் ஒனுக்கூடக் கூடாது. மக்களுக்கு இவர்களின் சேவையும் தேவை அதேபோல் இவர்கள் சுகாதாரம் பேணி காக்க வேண்டும் இவர்கள் நிச்சயம் கைகள், முகங்களில் கவசம் அணிய வேண்டும். வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றதும் குளித்து வீட்டுக்குச் செல்ல வேண்டும். இவர்கள் பயமின்றி இயங்க ஊக்கமான பாடல்கள் கேக்கலாம்.

மேலும் படிக்க: சித்திரையின் முக்கியத்துவம் அறிவோம் வாங்க

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன